ஜெர்மனி நாட்டைச் சேர்ந்த ஹெல்லர் என்பவர், eBay என்ற ஆன்லைன் மூலம் கிச்சன் அலமாரி ஒன்றை ஆர்டர் செய்துள்ளார். தள்ளுபடி விலையில் £203 (இந்திய மதிப்பில் 24,270 ரூபாய்) கொடுத்து வாங்கிய அந்த கிச்சன் அலமாரியை இதற்கு முன்பு வயது முதிர்ந்த தம்பதியினர் பயன்படுத்தி வந்துள்ளனர்.
அந்த கேபினட்டை பயன்படுத்துவதற்காக, அதனை திறந்து பார்த்த போது ஹெல்லருக்கு இன்ப அதிர்ச்சி காத்திருந்தது.
அதாவது அந்த அலமாரிக்கு உள்ளே இரண்டு பார்சல்கள் இருந்துள்ளன. அந்த இரண்டு பார்சல்களில் மொத்தம் £126,000 (இந்திய மதிப்பில் சுமார் 1.2 கோடி ரூபாய்) பணம் இருந்துள்ளது.
இதனையடுத்து, பணத்தை எடுத்து உடனே பாக்கெட்டில் போட்டுக்கொள்ளாமல் அதனை போலீசிடம் ஒப்படைத்தார் ஹெல்லர். பழைய கிச்சன் கேபினட் ஒன்றில் இவ்வளவு பணம் இருந்ததை பார்த்து, ஆச்சர்யமடைந்த போலீசார், யாருடைய பணம் என்பது குறித்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில் 91 வயது மூதாட்டிக்கு சொந்தமானது என கண்டுபிடிக்கப்பட்டது. கணவர் இறந்த பிறகு முதியோர் இல்லம் ஒன்றில் அவர் வாழ்ந்து வருவதும், இந்த அலமாரியை அவரின் பேரன் தான் விற்றுள்ளார் என்பதும் தெரியவந்துள்ளது. ஹெல்லரின் நேர்மை குணத்தை பாராட்டி, கிடைத்த பணத்தில் 3 சதவீதம், அதாவது சுமார் 3 லட்சம் ரூபாய் வரை, அவருக்கு வெகுமதியாக அளிக்கப்பட்டுள்ளது.
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.
Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.
Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com