2019 ஆம் ஆண்டில், ரமேஷ் நாயக் என்ற நபர் சாந்திநகரில் இருந்து பெங்களூரு மெஜஸ்டிக் பேருந்து நிலையத்திற்கு BMTC பேருந்தில் பயணம் செய்தார்.
அப்போது நடத்துனரிடம் 30 ரூபாய் கொடுத்து 29 ரூபாய்க்கு டிக்கெட்டை வழங்கியிருக்கிறார்.
மீதி சில்லறையான 1 ரூபாயை நடத்துனர் வழங்கவில்லை என கூறப்படுகிறது.
இதனால் ரமேஷ், 15,000 ரூபாய் இழப்பீடு கேட்டு மாவட்ட நுகர்வோர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.
வழக்கை விசாரித்த நீதிமன்றம், தற்போது அந்த நபருக்கு ரூ.2,000 இழப்பீடு வழங்க பெங்களூரு பெருநகர போக்குவரத்து கழகத்திற்கு (பிஎம்டிசி) நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அந்த நடத்துனர் "அநாகரிகமாக நடந்து கொண்டதாகவும் ரமேஷிடம் கத்தியதாகவும் கூறப்படுகிறது.
இந்த விவகாரம் BTCTCயின் உயர் அலுவலகத்திற்குக் கொண்டு வரப்பட்டபோது, பயணியின் 1 ரூபாய் சில்லறையை கொடுக்காமல் தகராறு செய்த விவகாரம் வெளிச்சத்திற்கு வந்தது.
இதனையடுத்து நுகர்வோர் நீதிமன்றத்தை நாடிய ரமேஷுக்கு ரூ.2,000 இழப்பீடு வழங்க பிஎம்டிசிக்கு பெங்களூரு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.
Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.
Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com
Follow us on:
Newssensetn : https://www.facebook.com/FullyNewsy
Nalam 360 : https://www.facebook.com/Nalam360
Newsnow: https://www.facebook.com/GenZSense
TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp
Hangout : https://www.facebook.com/TamilWanderlust