தொகுதி வளர்ச்சி அலுவலர் தனது காரில் புறப்பட்டு போது அங்கு வந்த நபர் கார் ஜன்னலின் அருகில் வந்து அவரிடம் கெஞ்சும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
அவர் சாதாரணமாக தேவைகளைக் கூறி கெஞ்சாமல் அச்சு அசலாக நாயைப் போலவே நடந்துகொண்டார். அவரிடம் குறைப்பதும் விழுந்து கெஞ்சுவதுமாக இருப்பதனை வீடியோவில் காணமுடிகிறது.
மேற்கு வங்கம் மாநிலத்தின் பங்கரா என்ற இடத்தில் இந்த சம்பவம் நடந்திருக்கிறது. வினோதமான வீடியோவை நெட்டிசன்கள் அதிகமாக பகிர்ந்து வருகின்றனர்.
செய்தி நிறுவனமான ஏ.என்.ஐ கூறுவதன் படி, அந்த நபரின் ரேஷன் கார்டில் பெயர் துட்டா என்பதற்கு பதிலாக குட்டா என அச்சிடப்பட்டிருந்திருக்கிறது. இதனை சரி செய்யக் கோரியே அவர் அங்கு வந்துள்ளார்.
ஆனால் அதிகாரிகள் அவருக்கு தேவையானவற்றை செய்துகொடுக்காததனால் அவர் தொகுதி வளர்ச்சி அலுவலர் முன் நாய் போல நடந்து கொண்டுள்ளார்.
இந்த வீடியோ வைரலானதுக்கு பின்னர் இவர் ஸ்ரீகந்தி துட்டா என கண்டறியப்பட்டது. இந்த வீடியோ எடுக்கப்படும் போது தான் மனதளவில் பாதிக்கப்பட்டிருந்ததாக துட்டா தெரிவித்துள்ளார்.
"நான் எனது பெயரில் இருக்கு தவறை சரி செய்ய சில நாட்களாக முயன்று கொண்டிருக்கிறேன். மூன்றாவது முறையாக எனது பெயர் துட்டா என்பதற்கு பதிலாக குட்டா என எழுதப்பட்டது என்னை மனதளவில் பாதித்தது"
அரசு சார்ந்த கடமைகளை ஆற்ற வேண்டிய கட்டாயம் பொது மக்களுக்கு இருக்கிறது. ஆனால் இதற்கு அரசு அதிகாரிகள் ஒத்துழைப்புத் தறுவதில்லை. எத்தனை நாட்கள் தான் வேலை விட்டுவிட்டு நாம் அழைந்துகொண்டிருக்க முடியும் எனக் கேள்வி எழுப்புகிறார் துட்டா.
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.
Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.
Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com
Follow us on:
Newssensetn : https://www.facebook.com/FullyNewsy
Nalam 360 : https://www.facebook.com/Nalam360
Newsnow: https://www.facebook.com/GenZSense
TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp
Hangout : https://www.facebook.com/TamilWanderlust