Super Dad : மகளை கவனித்து கொள்ள ஐடி வேலையை விட்ட அப்பா - ஓர் நெகிழ்ச்சிக் கதை!

தன் மனைவி கர்ப்பமாக இருந்தபோதே அன்கித் தன் வேலையை விட்டுவிட்டு குழந்தையை கவனித்துக் கொள்ளலாம் என்ற யோசனையில் இருந்ததாக தெரிவித்தார். ஆனால், அவரது உறவினர்களும், நண்பர்களும் இவரது இந்த முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
Ankit Joshi
Ankit JoshiInstagram
Published on

.மகளை கவனித்துக் கொள்வதற்காக ஐடி கம்பனி வேலையை விட்டுள்ளார் அன்கித் ஜோஷி என்ற நபர். இவர் ஒரு தனியார் நிறுவனத்தில் Senior Vice President ஆக பணியாற்றி வந்தார்.

Humans of Bombay என்ற மும்பையை சேர்ந்த ஃபோட்டோ ப்லோக்கர் தளத்திற்கு அவர் பேட்டி அளித்திருந்தார். அதில், குழந்தை பிறந்த பிறகு தனக்கு கொடுக்கப்பட்ட ஒரு வார விடுமுறை போதவில்லை எனக் குறிப்பிட்டிருந்தார்.

அன்கித் ஜோஷி - ஆகான்க்‌ஷா தம்பதிக்கு ஸ்பிட்டி என்ற பெண் குழந்தை சமீபத்தில் பிறந்தது. ஆகான்க்‌ஷா கர்ப்பமாக இருந்தபோது இந்த தம்பதி ஸ்பிட்டி பள்ளத்தாக்கு (Spiti Valley)க்கு சென்றனர். அந்த இடத்தின் நினைவாகவே குழந்தைக்கு ஸ்பிதி எனப் பெயரிட்டனர்.

தன் மனைவி கர்ப்பமாக இருந்தபோதே அன்கித் தன் வேலையை விட்டுவிட்டு குழந்தையை கவனித்துக் கொள்ளலாம் என்ற யோசனையில் இருந்ததாக தெரிவித்தார். ஆனால், அவரது உறவினர்களும், நண்பர்களும் இவரது இந்த முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். அவரது மனைவி மட்டுமே அன்கித்திற்கு ஆதரவு அளித்துள்ளார்.

குழந்தை பிறந்தபோது அன்கித்திற்கு அவரது நிறுவனத்தில் Paternity Leave ஆக ஒரு வாரம் விடுமுறை அளிக்கப்பட்டது. ஆனால், குழந்தையுடன் நேரம் செலவிட அது அவருக்கு போதாது என முன்னரே அவருக்கு தோன்றியுள்ளது.

Senior Vice President ஆக பணியாற்றிய அன்கித், வேலை நிமித்தமாக பல ஊர்களுக்கு பயணம் செய்ய வேண்டியிருந்துள்ளது. “இப்படி டிராவல் செய்வது எனக்கு பிடிக்கும் என்றாலும், என் மகள் பிறந்த பிறகு எனக்கு இதிலிருந்து நீண்ட இடைவெளி தேவைப்படும் என தோன்றியது. நிறுவனம் இதை ஏற்காது என்பதால், நான் வேலையை விட முடிவு செய்தேன்” என்றார்.

Ankit Joshi
மகளை கல்லூரியில் சேர்க்கும் போது கதறி அழுத தந்தை - மனதை உருக்கும் வீடியோ!

இரவும் பகலும் உறக்கத்தை தொலைத்து தன் மகளை பார்த்துக்கொள்கிறார் அன்கித். ஆனாலும், தனக்கு இது பிடித்திருப்பதாகவும், அடுத்த சில மாதங்களுக்கு வேறு வேலை தேடும் யோசனையிலும் இல்லை என அன்கித் கூறுகிறார்.

தற்போது 6 மாத Maternity Leaveல் இருக்கும் அவரது மனைவிக்கு மேலாளராக பதவி உயர்வு கிடைத்துள்ளது. ”ஒரு தாயாகவும், அவரது பணியிலும் என் மனைவி சிறந்து விளங்குவது எனக்கு மன நிறைவாக இருக்கிறது” என்று பெருமையுடன் சொல்கிறார் அன்கித்.

இந்தியாவில் நிறுவனங்கள் புதிதாக குழந்தை பிறந்த ஆண்களுக்கு அளிக்கும் இந்த குறுகிய கால Paternity Leave பயனற்றதாக இருக்கிறது என்றார். இந்த காலத்தில் தந்தைகளுக்கு குழந்தைகளுடன் செலவிடும் நேரம் குறைவாக தான் இருக்கும் எனவும், இது தந்தைகளுக்கும் குழந்தை வளர்ப்பில் சமமான பொறுப்பு இருக்கிறது என்பதையும் மறுக்கிறது எனவும் தெரிவித்தார்.

இதனால் நிறுவனங்கள் Paternity Leaveஐ நீட்டிக்கும் வழக்கத்தை அமல்படுத்த வேண்டும் எனக் கூறியுள்ளார்.

Ankit Joshi
"வருடங்கள் ஓடி விட"- மகளின் 20 வருடத்தை வெறும் 2 நிமிடத்தில் காண்பித்த தந்தை | Viral Video

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com