மகளின் 20 வருடத்தை 2 நிமிடத்தில் காண்பித்த தந்தை
மகளின் 20 வருடத்தை 2 நிமிடத்தில் காண்பித்த தந்தைreddit

"வருடங்கள் ஓடி விட"- மகளின் 20 வருடத்தை வெறும் 2 நிமிடத்தில் காண்பித்த தந்தை | Viral Video

அந்த வகையில் தன் மகளின் 20 வருடத்தை 2 நிமிட வீடியோவாக ரெட் இட் பக்கத்தில் டச்சு திரைப்பட இயக்குநர் ஃபிரான்ஸ் ஹாஃப்மீஸ்டர் பதிவிட்டிருந்தார். இந்த டைம்லாப்ஸ் வீடியோ தற்போது வைரலாகி வருகிறது
Published on

தனது மகளின் 20 வருடத்தை 2 நிமிட வீடியோவாக பதிவிட்டு வெளியிடப்பட்டுள்ளார் டச்சு நாட்டை சேர்ந்தவர். இந்த வீடியோ இணையத்தில் பலரது மனதை கவர்ந்து வருகிறது.

அம்மாக்களுக்கு மகன்களும், அப்பாக்களுக்கு பெண் பிள்ளைகளும் செல்லம் என்பது இந்த பிரபஞ்சத்தின் எழுப்படாத விதியாக இருக்கிறது.

டேடீஸ் லிட்டில் பிரின்செஸ் என்ற வார்த்தையை வெறும் கிண்டலடிக்கும் வார்த்தையாக எடுத்துக்கொள்ள முடியாது. தங்களது முதல் ஹீரோவான அப்பாக்களை ராஜாவாகவும், அப்பாக்கள் மகள்களை இளவரசிகளாகவும் கொண்டாடுவது அன்பின் உச்சமாக இருக்கிறது.

அந்த வகையில் தன் மகளின் 20 வருடத்தை 2 நிமிட வீடியோவாக ரெட் இட் பக்கத்தில் டச்சு திரைப்பட இயக்குநர் ஃபிரான்ஸ் ஹாஃப்மீஸ்டர் பதிவிட்டிருந்தார். இந்த டைம்லாப்ஸ் வீடியோ தற்போது வைரலாகி வருகிறது

மகளின் 20 வருடத்தை 2 நிமிடத்தில் காண்பித்த தந்தை
மகளை கல்லூரியில் சேர்க்கும் போது கதறி அழுத தந்தை - மனதை உருக்கும் வீடியோ!

மொத்தம் 2 நிமிடம் 19 விநாடி ஓடும் இந்த வீடியோவில் ஒரு பெண் குழந்தை வளர்ந்து பெரியவளாகும் 20 வருட பயணம் படமாக்கப்பட்டுள்ளது.

அந்த குழந்தை பிறந்த நாள் முதல், பற்கள் கூட முளைத்திராத காலத்திலிருந்து, அவள் சிரிப்பது, வாயில் இருக்கும் உணவை உமிழ்வது, விரல் கடிப்பது, மெதுவாக பற்கள் எட்டிப்பார்ப்பது, தலை முடி வளர்வது, அவளே உணவை உண்பது போன்ற சின்ன சின்ன தருணங்கள் படமாக்கப்பட்டுள்ளன.

இந்த வீடியோவை ஃபிரான்ஸ் 2019ஆம் ஆண்டு அவர் பதிவிட்டுள்ளார். Continuity தவறாமல், ஃபோட்டோக்களை எடுக்க ஒரே பேக் கிரவுண்டை அந்த பெண்ணின் தந்தை பயன்படுத்தியுள்ளார்.

42,000 லைக்குகளை பெற்ற இந்த வீடியோ பார்த்தவர்கள் பலரையும் கண்கலங்கச் செய்துள்ளது.

மகளின் 20 வருடத்தை 2 நிமிடத்தில் காண்பித்த தந்தை
மன அழுத்தம் டு காதல் திருமணம்; காப்பகத்தில் மலர்ந்த காதல் - ஒரு நெகிழ்ச்சி கதை!

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

logo
Newssense
newssense.vikatan.com