ரோட்டில் வாகனங்களை ஓட்டும்போதே, பார்த்து பார்த்து ஓட்ட வேண்டியுள்ளது. அப்படியும், எங்காவது போய் முட்டிக்கொள்வதோ, அல்லது வேறு யாராவது நம் மீது வந்து மோதுவதோ எதிர்பாராத விதமாக நடக்கத் தான் செய்கிறது.
இப்படியிருக்கையில், கோவா அஞ்சுனா கடற்கரையில் டெல்லியைச் சேர்ந்த லலித் குமார் தயாள் என்பவர் தாறுமாறாக காரை ஓட்டி, கடலில் கார் சிக்கிக்கொண்ட சம்பவம் ஒன்று அரங்கேறியுள்ளது.
அவர் ஓட்டிவந்தது ஹூண்டாய் க்ரெடா SUV. தில்லியை சேர்ந்த இவரும் இவரது நண்பரும் சேர்ந்து விளையாட்டாக கடற்கரையில் காரை ஓட்டி சாகசம் காட்ட, அது எதிர்பாராத விதமாக சற்று ஆழமுள்ள பகுதியில் சென்று சிக்கிக்கொண்டது. வாகனம் கடலுக்குள் முழுகாமல் பிடித்து இழுத்தபடியே உதவிக்கு அழைக்கும் வீடியோவும் தற்போது வைரலாகி வருகிறது.
கடற்கரையில் வாகனங்கள் ஓட்டக்கூடாது என்ற விதிமுறை கடல் வாழ் உயிரினங்களின் நலன் கருதி பின்பற்றப்படும். ஒரு சில கடற்கரைகளில், காலநிலைக்கு ஏற்றவாறு, குறிப்பிட்ட நாட்களில் வாகனம் ஓட்ட அனுமதி இருக்கும்.
ஆனால் இதையும் மீறி இவர் காரை ஓட்டியதால், காரை பறிமுதல் செய்துள்ள காவல்துறையினர், காரை ஓட்டிய லலித் குமார் தயாள் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்.
மேலும் காரின் உரிமையாளர் சங்கீதா கவடல்கருக்கும் அறிக்கை கொடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார் துணை காவல் கண்காணிப்பாளர் ஜிவ்பா தல்வி. அஞ்சுனா காவல் ஆய்வாளர் விக்ரம் நாயக் சம்பவம் குறித்த விசாரணை மேற்கொண்டுவருவதாகவும் அவர் தெரிவித்தார்.
இதற்கு முன்னர் லடாக்கில், ஹண்டர் நுப்ரா பாலைவனத்தில் உள்ளூர் கட்டுப்பாடுகளை மீறி ஜெய்பூரை சேர்ந்த ஒரு தம்பதி டொயோட்டா ஃபார்ச்யுனர் காரை ஓட்டிசென்றனர். இவர்களது வாகனமும் பாலைவன மணலில் சிக்கிக்கொண்டது. இவர்களுக்கு லே லடாக் காவல்துறை ரூ.50,000 அபராதம் விதித்திருந்தது.
Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.
Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com
Follow us on:
Newssensetn : https://www.facebook.com/FullyNewsy
Nalam 360 : https://www.facebook.com/Nalam360
Newsnow: https://www.facebook.com/GenZSense
TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp
Hangout : https://www.facebook.com/TamilWanderlust