கோவா செல்லும் செலவில் நீங்கள் ஆசியாவின் இந்த 10 சுற்றுலா தலங்களுக்கு செல்லலாம் 😎

எல்லாவற்றிற்கும் மேலாக, இந்நகரங்கள் கோவாவைப் போலவே மலிவானதும் கூட. தென்கிழக்கு ஆசியாவானது, தனித்து நிற்கும் நாடுகளின் கண்கவர் எண்ணிக்கையைக் கொண்டுள்ளது. இந்த இடங்களுக்குச் செல்ல வேண்டுமென்றால், ஒரு வாரத்திற்கு உங்களின் பயண பாணியைப் பொறுத்து ரூ.40,000 வரை தேவைப்படலாம்.
Indonesia
IndonesiaCanvo
Published on

அதே பட்ஜெட்டில் தென்கிழக்கு ஆசியப் பகுதிகளில் விடுமுறையை அனுபவிக்க முடியும் எனும் போது, ஏன் கோவாவுக்குச் செல்ல வேண்டும்?

இன்ஸ்டாகிராமைத் திறந்தாலே உங்கள் பட்டியலில் உள்ள அனைவரும் கோவாவில் இருப்பதைக் காண்கிறீர்களா? தென்கிழக்கு ஆசியாவின் சிறந்த நகரங்கள் குறித்து நீங்கள் அறிந்துகொள்ள வேண்டிய நேரம் வந்துவிட்டது.

எல்லாவற்றிற்கும் மேலாக, இந்நகரங்கள் கோவாவைப் போலவே மலிவானதும் கூட. தென்கிழக்கு ஆசியாவானது, தனித்து நிற்கும் நாடுகளின் கண்கவர் எண்ணிக்கையைக் கொண்டுள்ளது. இந்த இடங்களுக்குச் செல்ல வேண்டுமென்றால், ஒரு வாரத்திற்கு உங்களின் பயண பாணியைப் பொறுத்து ரூ.40,000 வரை தேவைப்படலாம்.

சர்வதேச இடங்களுக்குச் சுற்றுலா செல்வதிலிருந்து பயணிகளைத் தடுக்கும் சில பெரிய காரணிகள் பணப் பரிவர்த்தனை தொந்தரவு, பணம் மாற்று விகிதங்கள் மற்றும் வெளிநாட்டில் விடுமுறையை சிக்கலாக்கும் மொழித் தடைகள். அதிர்ஷ்டவசமாக தற்போது, நியோ குளோபல் கார்டு வசதியால் அந்நிய செலாவணி பரிவர்த்தனை கட்டணத்தில் 3-5% சேமிக்கிற வாய்ப்பு கிடைத்திருக்கிறது.

உங்களைச் சுற்றியுள்ள ஏடிஎம்களைக் கண்டறிந்து பணம் எடுத்துக்கொள்ளும் வசதியானது, 150க்கும் மேற்பட்ட நாடுகளில் கிடைக்கிறது. எனவே நீங்கள் எந்த கவலையும் இல்லாமல் கவர்ச்சியான இடங்களுக்குப் பயணிக்கலாம்.

தென்கிழக்கு ஆசியாவில் உள்ள குறைந்த செலவில் சென்று வரும்படியான நகரங்களின் பட்டியல் இங்கே உள்ளது. விமானத்தில் சில மணிநேர பயண தொலைவில் அவற்றை நீங்கள் அடையலாம். மேலும் அவை நிச்சயமாகக் கோவாவை மறக்கடிக்கச் செய்துவிடும்!

Philippines
Philippinescanva

பிலிப்பைன்ஸில் உள்ள தெளிவான நீரில் மூழ்கலாம்

கோவாவின் நெரிசலான கடற்கரைகளுக்குப் பதிலாக, மரகத-நீல நீரால் மின்னும் 7000க்கும் மேற்பட்ட தீவுகளைக் கொண்ட இந்த தீவுக்கூட்டத்தின் அழகைக் கண்டுகளிக்க உங்கள் எண்ணங்களை மாற்றிக் கொள்ளவும்.

நீங்கள் பிலிப்பைன்ஸ் முழுவதும் செல்லும்போது வெளிப்படும் அதன் மாறுபட்ட நிலப்பரப்பு மற்றும் அனுபவங்களுக்காக நீங்கள் எப்போதும் இந்த தீவையே தேர்வு செய்ய விருப்பப்படுவீர்கள்.

சிறந்த பார்ட்டி ஸ்பாட்கள், உணவு வகைகள் மற்றும் நட்பான உள்ளூர் வாசிகளுடன், உங்கள் விடுமுறை மறக்கமுடியாததாகவும், கையைக் கடிக்காத பட்ஜெட்டாகவும் அமையும்!

ஒரு நபர் பிலிப்பைன்சில் ஒரு வாரத்திற்குச் சுற்றி வருவதற்கான சராசரி செலவு ரூ 31,000 வரை ஆகும்.

Malaysia
MalaysiaCanva

மலேசியாவின் மலைக்காடுகள் வழியாக ஒரு நடைப்பயணம்

மலேசியாவின் மலைக்காடுகளில் தெரியாத பகுதிகளுக்குச் செல்லும்போது, ஒரு ஆய்வாளராக மாறி விடுவது நல்லது. பல்லுயிர் வளம் நிறைந்த மலேசியாவின் மலைக்காடுகள் தான் உலகின் மிகப்பெரிய மலரான ரஃப்லேசியாவின் தாயகமாகும்.

நீங்கள் மலைகளின் மீது செல்லும்போது அங்குக் காணப்படும் தாவரங்கள் மற்றும் விலங்கினங்களால் ஆச்சரியப்பட்டுப் போவீர்கள். பெட்ரோனாஸ் டவர்ஸில் உள்ள பல உணவகங்கள் மற்றும் பார்கள் உங்களைக் கண்டிப்பாக மகிழ்விக்கும்.

இங்குச் செல்ல ஒரு நபருக்கு ஒரு வாரத்திற்கான சராசரி செலவு ரூ 37,000 வரை ஆகலாம்.

Brunei
BruneiCanva

புருனேயில் உள்ள கிழக்கு வெனிஸுக்கு படகு சவாரி

கம்போங் அயர் என்பது புருனேயின் பிரதான நிலப்பரப்பிலிருந்து சிறிது தொலைவில் உள்ள நீர்முனையில் 19 ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்ட ஒரு குடியேற்றமாகும். இந்த இடமானது ஸ்டில்ட்களில் உள்ள வீடுகளின் தாயகமாகும்.

அறியப்படாத புதிய இடங்களைத் தேர்ந்தெடுக்கும் பயணிகளுக்குத் தனித்துவமான அனுபவத்தை வழங்குகிறது. நீர்முனை உங்களுக்கு மிகவும் அமைதியானதாக இருந்தால், புருனே சுல்தானின் நினைவாகக் கட்டப்பட்ட பல தங்க மசூதிகளில் ஒன்றை நீங்கள் ஆராயலாம். அவை அற்புதமான பெருமைக்குரிய கட்டிடக்கலைக்கான சான்றாகும்.

இங்கு ஒரு நபருக்கு ஒரு வாரத்திற்கான சராசரி செலவு ரூ 27,000 வரை ஆகும்.

Timor-Leste
Timor-Lestecanva

திமோர்-லெஸ்ட்டெ இயற்கையின் அழகு

நீருக்கடியில் உலகை ரசிப்பதற்கான சிறந்த நீச்சல் அனுபவத்தை வழங்கும் அழகான, மக்கள் வசிக்காத ஒரு இலக்கை நீங்கள் தேடுகிறார்களானால், யோசிக்காமல் தென்கிழக்கு ஆசியாவின் வெப்பமண்டல பகுதியான திமோர்-லெஸ்ட்டேயைத் தேர்வு செய்யலாம்.

இயற்கை ஆர்வலர்களுக்கு நிச்சயமாக ஏற்ற இடமாக இது இருக்கும். சொர்க்கத்தின் ஒரு பகுதியாக விளங்கும், இந்த இடம் உள்ளூர் கலாச்சாரம் மற்றும் இயற்கை அழகு ஆகியவற்றின் அற்புதமான கலவையாகும்.

ஒரு நபருக்கு ஒரு வாரத்திற்கான சராசரி செலவு ரூ 30,000 வரை ஆகும்.

Indonesia
இமயமலை : இங்கு இருக்கும் பிரம்மாண்ட கோட்டைக்கு ஒரு ட்ரிப் போவோமா?

பிரமிக்க வைக்கும் மியான்மர் ஹாட் ஏர் பலூன் சவாரி

பழைய மியான்மருக்கு மேலே விமானத்தில் பயணிக்கும் போது, நாட்டின் வான்வழிக் காட்சிகளை அனுபவிக்கலாம். பாகனில் நூற்றுக்கணக்கான பகோடாக்களை வானிலிருந்து பார்ப்பது வாழ்நாள் அனுபவமாக இருக்கும்.

மியான்மரில், நீங்கள் பழைய உலக அழகைக் கண்டு திளைக்கலாம். அதில் நீங்கள் ஒரு பாரம்பரிய ரிக்சாவில் உள்ளூர் வாசிகளின் வீட்டிற்குச் சென்று ஆரோக்கியமான உணவினை உட்கொள்ளலாம். அதே போல் பரபரப்பான நகரத்தின் பின்னணியில், நவீனத்துவத்தின் வசதியையும் அனுபவிக்கலாம்.

ஒரு நபருக்கு ஒரு வாரத்திற்கான சராசரி செலவு ரூ 27,500 வரை ஆகும்.

Indonesia
IndonesiaCanva

இந்தோனேசியாவின் பழைய மற்றும் சமகாலத்தின் இணைவு

இந்தோனேசியா சுறுசுறுப்பான எரிமலைகள், அற்புதமான கடற்கரைகள், ஒராங்குட்டான்கள், பழங்கால கோயில்கள் மற்றும் மொட்டை மாடி பண்ணைகள் ஆகியவற்றின் தாயகமாக உள்ளது.

நிதானமான மசாஜ்கள், அழகான ஓய்வு விடுதிகளில் அவாண்ட்கார்ட் இன்டீரியர், சமகால உணவு கண்காட்சிகள் மற்றும் உங்கள் ஒவ்வொரு மனநிலைக்கும் ஏற்ற செயல்களில் உங்களை மூழ்கடித்துக் கொள்ளலாம். பழங்கால மற்றும் நவீனத்தின் உண்மையான கலவையான இந்தோனேசியா அனைவருக்கும் ஏதாவது ஒரு சிறந்த பயண அனுபவத்தைத் தருகிறது.

ஒரு நபருக்கு ஒரு வாரத்திற்கான சராசரி செலவு ரூ 28,000 வரை ஆகும்.

Indonesia
எலும்புகூடுகளின் ஏரி டு இரட்டையர் கிராமம் - இந்தியாவின் மர்ம இடங்களுக்கு செல்ல ரெடியா?

கம்போடியாவின் பழங்கால இடிபாடுகளுக்குக் காலப் பயணம்

ஹாலிவுட் படங்களில் இடம்பெற்றுள்ள அங்கோர் வாட்டின் மக்கள் வசிக்காத கோயில்களுக்குப் பெயர் பெற்ற கம்போடியா, பல காரணங்களுக்காக நினைவுகூரக்கூடிய இடமாக இருக்கும் என்று உறுதியளிக்கிறது.

டைவ் இடங்கள், யானைகள் காப்பகங்களில் தன்னார்வத் தொண்டு செய்தல் மற்றும் வருங்கால தலைமுறைகளுக்குச் சரியாகப் பாதுகாக்கப்பட்ட வரலாற்றைக் காண்பிக்கும் அரண்மனைகளைப் பார்வையிட இது ஒரு நம்பமுடியாத இடமாகும். நீங்கள் வருகை தரும் போது, கம்போடியா கலாச்சாரத்திற்கு இணையான பாரம்பரிய நிகழ்ச்சியான அப்சரா நடனத்தைக் காண மறக்காதீர்கள்.

ஒரு நபருக்கு ஒரு வாரத்திற்கான சராசரி செலவு ரூ 28,000 ஆகும்.

Indonesia
ஜூன் மாதத்துக்கான உங்க பயணத்தை பிளான் பண்ணியாச்சா? இந்த மலைபிரதேசங்கள ட்ரை பண்ணுங்க

லாவோஸின் நீர்வீழ்ச்சிகளில் புத்துணர்ச்சியூட்டும் நீராடல்

நீங்கள் ஆற்றில் தொப்பென்று குதித்தாலும் சரி, நீர்வீழ்ச்சிக்கு மெதுவாகச் செல்ல விரும்பினாலும் சரி, லாவோஸ் தான் உங்களுக்கான சரியான இடம்! 15க்கும் மேற்பட்ட நீர்வீழ்ச்சிகளைக் கொண்ட இந்த நாடு இயற்கை ஆர்வலர்கள் மற்றும் நீர்நிலை விரும்பிகளுக்கு ஒரு மறைக்கப்பட்ட பொக்கிஷமாகும். ஆண்டு முழுவதும் ஆரோக்கியமான மழைப்பொழிவு மற்றும் அதன் நிலப்பரப்பில் வியத்தகு உயரங்களுடன், லாவோஸ் பல அழகிய நீர்வீழ்ச்சிகளுக்குத் தாயகமாக உள்ளது. தெற்கு லாவோஸில் அமைந்துள்ள குவாங் சி நீர்வீழ்ச்சி மிகவும் பிரபலமான நீர்வீழ்ச்சியாகும். உங்கள் பயணக் கதையைக் கேட்போரை ஆச்சரியப்படுத்தும் வகையில் லாவோஸ் இருக்கும் என்பது நிச்சயம்.

ஒரு நபருக்கு ஒரு வாரத்திற்கான சராசரி செலவு ரூ 10,200 வரை ஆகும்.

Indonesia
நீங்கள் வேறு நாடுகளுக்கு குடியேற விரும்புகிறீர்களா? - அப்படியானால் இது உங்களுக்கான கட்டுரை

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com