பார்த்துப் பார்த்து நாம் ஒரு விஷயத்தை செய்தாலும், எங்காவது கோட்டை விடுவோம். அதுவும் ஏதாவது செய்யக்கூடாத காரியத்தை செய்யும்போது தான் கண்டிப்பாக எதையாவது யோசிக்காமல் செய்து மாட்டிக்கொள்வோம்.
மும்பையைச் சேர்ந்த பொறியாளர் ஒருவர், தன் காதலியுடன் மாலத்தீவுக்கு சென்று வந்த விஷயம் மனைவிக்கு தெரியக்கூடாது என்று, பாஸ்போர்ட்டின் பக்கங்களை கிழித்துள்ளார்.
தனது காதலியுடன் மாலத்தீவுக்கு வெகேஷனை பிளான் செய்த நபர், மனைவியிடம் தான் அலுவலக விஷயமாக வெளிநாடு செல்வதாகக் கூறி சென்றுள்ளார். பக்காவாக பிளான் செய்து, மாலத்தீவுக்கு சென்ற நபர் தன் காதலியுடன் வெகேஷனை கழித்துக்கொண்டிருக்கும்போது, மனைவி இவரை தொலைப்பேசி மூலம் தொடர்புகொள்ள முயன்றுள்ளார். ஆனால் இவர் பேசவில்லை. இதனால் மனைவிக்கு சந்தேகம் எழ, தப்பிக்க என்ன செய்வதென்று யோசித்துள்ளார்.
தான் எப்படியாவது மாட்டிக்கொள்ளாமல் இருக்க வேண்டுமே என, சுற்றுலா முடிந்து திரும்பும்போது தன் பாஸ்போர்ட்டின் பக்கங்களை அவர் கிழித்துள்ளார்.
ஆனால் பாவம், பாஸ்போர்ட்டின் பக்கங்களை கிழிப்பது சட்டப்படி குற்றம் என்று அவருக்கு தெரிந்திருக்கவில்லை போலும்.
ட்ரிப் முடிந்து மும்பை விமான நிலையத்தில் இம்மிகிரேஷனில் உள்ள அதிகாரிகள், பாஸ்போர்ட்டை சோதித்துள்ளனர். நாம் கடைசியாக சென்று வரும் நாட்டின் விசா ஸ்டாம்ப் பாஸ்போர்ட்டில் அச்சிடப்பட்டிருக்கும். ஆனால், இவரது பாஸ்போர்ட்டில் அவை இல்லை.
பாஸ்போர்ட்டின் சில பக்கங்கள் இல்லாமல் இருப்பதை கண்டு அவரிடம் விசாரித்துள்ளனர். முன்னுக்குப் பின் முரணாக அவர் அளித்த பதிலால் சந்தேகம் அடைந்த அதிகாரிகள், அவரிடம் மேலும் விசாரணை மேற்கொண்டபோது தான் அவரது மாஸ்டர் பிளான் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
தற்போது கைது செய்யப்பட்டுள்ள இவரிடம் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.
Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.
Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com
Follow us on:
Newssensetn : https://www.facebook.com/FullyNewsy
Nalam 360 : https://www.facebook.com/Nalam360
Newsnow: https://www.facebook.com/GenZSense
TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp
Hangout : https://www.facebook.com/TamilWanderlust