marriage
marriageTwitter

மாதம் ஒரு பீட்சா, பார்ட்டியில் நல்ல ஃபோட்டோ - திருமணம் செய்ய இப்படியெல்லாம் கண்டிஷன்களா?

அந்த கண்டிஷன்கள் ஒரு பெரிய அலங்கரிக்கப்பட்ட அட்டையில் எழுதப்பட்டிருந்தது. அதில், மனைவி தினமும் சேலைதான் கட்ட வேண்டும் என்பது முதல் மாதத்தில் ஒரு பீட்சாவுக்கு மட்டுமே சாப்பிட அனுமதி வரை பல கண்டிஷன்கள் இருந்தது.
Published on

திருமணம் என்றாலே பல கனவுகள் நிறைந்திருக்கும். தங்களின் வருங்கால கணவர் அல்லது மனைவி எப்படியெல்லாம் இருக்க வேண்டும் என்று பல ஆசைகள் இருக்கும். அது காதல் திருமணமாக இருந்தாலும் சரி, வீட்டில் பார்த்து நடத்தி வைக்கும் திருமணமாக இருந்தாலும் சரி.

ஆனால் அந்த ஆசைகளை எல்லாம் கண்டிஷன்களாக கூறினால்? கூறுவதோடு மட்டும் விடாமல் அதில் கையெழுத்து வாங்கினால்?

ஆம் அப்படி தான் இங்கு ஒரு ஜோடி விநோத கண்டிஷன்கள் போட்டு இணையத்தில் வைரலாகி வருகின்றனர்.

அசாம் மாநிலத்தைச் சேர்ந்தவர் மின்டு. இவருக்கும் சாந்தி என்ற பெண்ணுக்கும் சமீபத்தில் திருமணம் நடைபெற்றது.

இந்தத் திருமணத்தின் போது மணமகனும், மணமகளும் ஒரு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுக் கொண்டனர்.

ஒரு பெரிய அலங்கரிக்கப்பட்ட அட்டையில் சில கண்டிஷன்கள் எழுதப்பட்டிருந்தது. அதில் மணமகனும், மணமகளும் கையெழுத்திடுகின்றனர். அந்த வீடியோவை அவர்கள் தங்களின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளனர்.

marriage
எனக்கு 18, அவளுக்கு 28 : அதிக வயது இடைவெளியில் திருமணம் - உளவியல் ரீதியாக பிரச்னை வருமா?

கண்டிஷன்கள் என்னென்ன?

  • மனைவி தினமும் சேலைதான் கட்ட வேண்டும்.

  • கணவருடன் மட்டுமே இரவு பார்ட்டிகளுக்கு செல்ல வேண்டும்

  • ஞாயிறு காலை உணவைக் கணவர் செய்ய வேண்டும்

  • வீட்டு உணவுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்

  • மாதத்தில் ஒரு பீட்சாவுக்கு மட்டுமே அனுமதி

  • 15 நாட்களுக்கு ஒருமுறை ஷாப்பிங்

  • தினமும் ஜிம் செல்ல வேண்டும்

  • பார்ட்டிகளில் நல்ல புகைப்படங்கள் எடுக்க வேண்டும்

இந்த கண்டிஷன்கள் இணையத்தில் படுவைரலாக பார்க்கப்பட்டு, பகிரப்பட்டு வருகிறது.

marriage
முதலையை திருமணம் செய்து கொண்ட மேயர் - வைரலாகும் புகைப்படம்

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

logo
Newssense
newssense.vikatan.com