மணிப்பூர்: பணத்துக்காக போர்களமான பூமி, தமிழர்களின் நிலை என்ன? விளக்கும் விகடனின் ஆவணப்படம்

குக்கிக்கள் வாக்களித்த அரசானது, குக்கிகளின் வரிப்பணத்தில் வாங்கிய துப்பாக்கிகள் அவர்களுக்கு எதிராக மெய்திக்கள் கையில் கொடுக்கப்படும் போது நம்பிக்கையற்றவர்களாக, நிர்கதியானவர்களாக, கைவிடப்பட்டவர்களாக மலைகளில் பதுங்கியிருக்கின்றனர்.

மணிப்பூர் கலவரம் குறித்து விகடன் வெளியிட்டுள்ள ஆவணப்படம் மனதைக் கலங்கவைக்கும் உண்மைகளைச் சொல்கிறது. இதன் முதல் பாகத்தை இங்கே காணலாம்:

மணிப்பூர்: பணத்துக்காக போர்களமான பூமி, தமிழர்களின் நிலை என்ன? விளக்கும் விகடனின் ஆவணப்படம்
மணிப்பூர்: "குழந்தைகளின் கைகளில் துப்பாக்கிகள்" - கள நிலவரம் கூறும் விகடன்!

முன்னதேக் கூறியதுப் போல களநிலவரத்தில் நாம் அறிந்திருப்பது 10 விழுக்காடு கூட இல்லை. துப்பாக்கிச்சூடு நடைபெற்று மக்கள் இறந்துகொண்டிருக்கும் போது அது குறித்து ஒரு வரி செய்திக் கூட வெளியாகாதது குக்கி மக்களுக்கு பேரதிர்ச்சியாக இருக்கிறது.

மே மாதம் முதல் தீவிரம் பெற்றிருக்கும் கலவரத்தைக் கட்டுப்படுத்தாமல் பாதுகாப்புப்படை என்னதான் செய்திறது என்பது நம் ஒவ்வொருவருக்கும் எழும் கேள்வி.

மெய்திக்கள் எப்படி எளிதாக ஒவ்வொரு காவல்துறை ஆயுதக்கிடங்கையும் சூறையாடி தங்களைத் தாக்குகின்றனர் என்பது குக்கி மக்களின் கேள்வி.

குக்கிக்கள் வாக்களித்த அரசானது, குக்கிகளின் வரிப்பணத்தில் வாங்கிய துப்பாக்கிகள் அவர்களுக்கு எதிராக மெய்திக்கள் கையில் கொடுக்கப்படும் போது நம்பிக்கையற்றவர்களாக, நிர்கதியானவர்களாக, கைவிடப்பட்டவர்களாக மலைகளில் பதுங்கியிருக்கின்றனர்.

"ஏன் இந்த அரசு எந்த நடவடிக்கையும் எடுப்பதில்லை?" என்ற விடைதெரியாத கேள்வி அவர்களை உருக்குலைக்கிறது.

மனிதத் தன்மையற்ற தாக்குதல்கள், இனவெறி, பூர்வக்குடி தகராறு, வரலாற்றுப் பிரச்னைகள் எல்லாவற்றையும் கடந்து இந்த போரின் பின்னனியில் இருப்பது பணம் என்பதை விவரிக்கிறது இந்த ஆவணப்படம்.

மணிப்பூரில் இருந்து கனிம வளங்கள், எண்ணெய் மற்றும் பிளாட்டினம் எடுக்க இந்திய அரசு திட்டமிட்டுள்ளது. இதனை இரண்டு தரப்பும் ஆதரிக்கவில்லை.

பிளாட்டினத்தை வெட்டி எடுக்க அரசுடன் அதானி நிறுவனம் ஒப்பந்தம் போட்டுள்ளது.

உள்ளூர், மாவட்ட, மாநில, தேச, சர்வதேச அரசியல் பின்னிப்பிணைந்திருக்கும் மணிப்பூர் பிரச்னையின் அடிநாதம் நிலம். நிலத்தில் இருக்கும் வளங்கள்!

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

logo
Newssense
newssense.vikatan.com