ஒரு டஜன் மாம்பழம் 5000 ரூபாயா! எங்கே தெரியுமா?
மாம்பழம் பலருக்கு பிடித்த பழ வகையாகும். இந்த மாம்பழம் கோவாவில் ஒரு டஜன் 5,000ரூபாய்க்கு விற்பனையாகிறது. அது குறித்து தற்போது பார்க்கலாம்.
கோவா சுற்றுலாவுக்கு மட்டும் அல்ல மாம்பழத்துக்கும் புகழ் பெற்றது. இங்கு மான்குராட் மாம்பழம் மிகவும் பிரபலம். கோவாவில் மாம்பழ சாகுபடியின் வரலாறு போர்த்துகீசிய ஆட்சிக்கு முந்தையது.
ஜேசுட் பாதிரியார்கள் மாநிலம் முழுவதும் பல்வேறு மாம்பழ வகைகளை அறிமுகபடுத்தியதாக கூறப்படுகிறது.
அப்போது மாம்பழங்கள் ஒரு ராஜதந்திர கருவியாக பயன்படுத்தப்பட்டதாக கூறப்படுகிறது. கோவாவில் இருந்த போர்ச்சுகீசிய கவர்னர்கள் புனேவில் உள்ள பேஷ்வாக்களுக்கு கோவா மாம்பழங்களை கூடை கூடையாக அனுப்புவார்களாம்.
போர்த்துகீசியர்கள் அறிமுகபடுத்திய இந்த மாம்பழம் முதலில் 'மால்கோராடோ' என்று அழைக்கப்பட்டன அதாவது போர்த்துகீசிய மொழியில் மோசமான நிறம். இந்த வார்த்தை பின்னர் ஒரு காலத்தில் மான்குராட் என உருமாற்றம் பெற்றது.
மான்குராட் மாம்பழம் பொதுவாக சிறிய-நடுத்தர அளவில் இருக்கும். சாய்ந்த ஓவல் வடிவத்திலும் பிரகாசமான மஞ்சள் கலந்த ஆரஞ்சு நிறத்தில் இனிப்பு சுவை மற்றும் அடர்த்தியான கூழ் அமைப்புடன் இருக்கும்.
பொதுவாக பிப்ரவரி அல்லது மார்ச் மாத இறுதியில் மாங்குரட் மாம்பழங்கள் வந்து சேரும். அப்போது மொத்த விலை ஒரு டஜன் ரூபாய் 3,000-3,500 ஆக இருக்கும். ஆனால் மாம்பழ சீசனில் இதன் விலை கோவாவில் ஒரு டஜன் ரூபாய் 5,000 முதல் 6,000 ரூபாய் வரை சில்லறை விற்பனையில் விற்கப்படுவதாக அப்பகுதி வியபாரிகள் தெரிவிக்கின்றனர்.
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.
Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.
Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com
Follow us on:
Newssensetn : https://www.facebook.com/FullyNewsy
Nalam 360 : https://www.facebook.com/Nalam360
Newsnow: https://www.facebook.com/GenZSense
TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp
Hangout : https://www.facebook.com/TamilWanderlust