சம்மர் வந்தாலே நாம் நாக்கு நரம்புகளெல்லாம் மாம்பழம் கேட்டு அடம்பிடிக்கத் தொடங்கிவிடும். மஞ்சளும் சிகப்பு ஏகாந்தமான மணத்துடன் சாலையோரக் கடைகளில் பார்க்கும் போது வாங்காமல் கடந்துவிட முடியாது…
பழக்கடைகளில், சூப்பர் மார்கெட்களில் ஏன் நம் ஊரிலேயே இல்லாத நூற்றுக்கணக்கான வகைகளில் மாம்பழம் கிடைக்கிறது. மாம்பழங்கள் ஒரு பழ வகைதான் என்றாலும் அது ஒரு எல்லையில்லாத கடலைப் போன்றது. மாம்பழங்களின் சுவை குறித்தும் சுவைத்த அனுபவங்களையும் பேசத் தொடங்கினால் பேசிக்கொண்டே போகலாம்.
இப்போது மாம்பழங்கள் குறித்து 10 சுவாரஸ்யமான தகவல்களைக் காணலாம்.
முன்னதாக கூறியதைப் போல மாம்பழத்தில் நூற்றுக்கணக்கான வகைகள் உள்ளன. சில வகைகளை சில ஊர்களில் மட்டுமே காண முடியும் சில வகைகள் எல்லா இடங்களிலும் பொதுவானதாக இருக்கும்.
சிலவை க்ரீம் போல இனிப்பாக இருக்கும், சில சிட்ரஸ் பழங்களைப் போல புளிப்பாக இருக்கும், சிலவை சூட்டை கிளப்பிவிடும் ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு சுவை பிடித்தமானதாக இருக்கும்.
பாகிஸ்தான், இந்தியா மற்றும் பிலிப்பைன்ஸ் என மூன்று நாடுகளுக்கு மாம்பழம் தான் தேசிய பழம். பங்களாதேஷின் தேசிய மரம் மாம்பழம் தான்.
ஆங்கிலத்தில் மேங்கோ என அழைக்கப்படும் பெயர் தமிழ் வார்த்தையான மாங்கை, மாங்கா என்ற சொற்களில் இருந்து வந்திருக்கலாம் எனக் கூறப்படுகிறது.
உலகிலேயே அதிகமாக உற்பத்தி செய்யப்படுவது Tommy Atkins என்ற வகை தான். இது விரைவாக பெரியதாக வளரக் கூடியது. இது நல்ல நிறமாக இருக்கும், பூஞ்சைகளால் எளிதாக பாதிப்படையாது. நீண்ட நாட்கள் கெடாமல் இருக்கும். துரதிஷ்டவசமாக இது சுவையற்றதாக நார் போன்றதாக இருக்கும்.
தெற்கு ஆசிய நாடுகளில் இருந்து தான் 1.8 டன்கள் மாம்பழங்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன. இந்தியா தான் உலகின் மிகப் பெரிய மாம்பழ உற்பத்தியாளராக திகழ்கிறது.
மாம்பழ வகையானது முதன்முதலாக இமயமலைப் பகுதியில் இந்தியா மற்றும் மியான்மரில் உருவாகியிருக்கலாம் எனக் கூறப்படுகிறது. முதன்முதலாக 5000 ஆண்டுகளுக்கு முன்னர் தென்னிந்தியாவில் தான் மாம்பழம் முறையாக சாகுபடி செய்யப்பட்டது.
உலகில் இப்போது இருக்கும் வயதான மாமரம் 300 ஆண்டுகள் பழமையானது எனக் கூறப்படுகிறது. அதுவும் இந்தியாவின் மகாராஷ்டிராவில் தான் இருக்கிறது.
டேவிட் ஃபைர்சைல்ட் என்ற விவசாய அறிஞர் தான் இந்தியாவிலிருந்து 20ம் நூற்றாண்டில் அமெரிக்காவுக்கு கப்பல் வழியாக மாம்பழங்களை ஏற்றிச் சென்றார்.
புத்தரும் அவரது சீடர்களும் ஒரு முறை அமைதியாக மாந்தோப்பில் தியானம் செய்ததாகக் கூறப்படுகிறது. இதனால் புத்த மதத்தினரிடம் மாமரத்துக்கு சிறப்பிடம் இருக்கிறது.
ஒரு கப் மாம்பழத்தில் 60 மில்லிகிராம் வைட்டமின் சி உள்ளது. மற்றும் 20 வகையான மினரல்களும் வைட்டமின்களும் உள்ளன.
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.
Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.
Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com
Follow us on:
Newssensetn : https://www.facebook.com/FullyNewsy
Nalam 360 : https://www.facebook.com/Nalam360
Newsnow: https://www.facebook.com/GenZSense
TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp
Hangout : https://www.facebook.com/TamilWanderlust