Google and Amazon : நடைபெற போகும் பணி நீக்கம் - நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டியவை

செலவுகளைக் குறைக்க, அமேசான் மற்ற நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறது. தற்போது பீட்டா சோதனையில் உள்ள திட்டங்களை தாமதப்படுத்த திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
 Google and Amazon
Google and AmazonTwitter
Published on

பல தொழில்நுட்ப நிறுவனங்கள் செலவுகளை மிச்சப்படுத்த ஏராளமான ஊழியர்களை பணிநீக்கம் செய்து வருகின்றன. இவை வருவாய் இழப்பை சந்தித்து வருவதாக கூறப்படுகிறது.

11,000 பேரை பணிநீக்கம் செய்வதாக அறிவித்த மெட்டா போன்ற நிறுவனங்கள் விளம்பரதாரர்களின் செலவினங்களைக் குறைத்ததும் இதற்கு ஒரு முக்கிய காரணமாக கூறப்படுகிறது.

கூகுள் மற்றும் அமேசான் ஆகிய இரு நிறுவனங்களும் விரைவில் ஆயிரக்கணக்கான ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. அது குறித்த தகவல்களை இங்கு காணலாம்.

அமேசான் ஊழியர்களின் பணிநீக்கத்தை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

பணிநீக்கம் செய்யப்படும் ஊழியர்களின் சரியான எண்ணிக்கையை நிறுவனம் வெளியிடவில்லை என்றாலும் அமேசான் 20,000 பேரை பணிநீக்கம் செய்ய திட்டமிட்டுள்ளதாக அறிக்கைகள் கூறுகின்றன.

நவம்பரில் 10,000 பேர் பணிநீக்கம் செய்யப்படுவார்கள் என்று அமேசானால் தெரிவிக்கப்பட்டது. ஆனால் இந்த எண்ணிக்கை பெரிய அளவில் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

அமேசானின் தலைமை நிர்வாக அதிகாரி சமீபத்தில் பணிநீக்க செயல்முறை சில மாதங்களுக்கு தொடரும் என்று அறிவித்தார்.

சமீபத்தில் அமேசான் இது குறித்து கூறியபோது இது பணியாளர்களின் எண்ணிக்கையை படிப்படியாகக் குறைக்கும். 2023 ஆம் ஆண்டின் தொடக்கம் வரை இந்த லே ஆஃப் தொடரும் என்றும், பொருளாதார நெருக்கடி காரணமாக பணிநீக்கங்கள் செய்யப்படுவதாகவும் கூறப்பட்டது.

செலவுகளைக் குறைக்க, அமேசான் மற்ற நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறது. தற்போது பீட்டா சோதனையில் உள்ள திட்டங்களை தாமதப்படுத்த திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

 Google and Amazon
கூகுள், டெஸ்லா, ஆப்பிள்: செலவை குறைக்க திட்டம் - என்ன நடக்கிறது உலகச் சந்தையில்?

மேலும் அமேசான் அகாடமி லேனிங் பிளாட்ஃபார்மை மூடப்போவதாகவும் தெரிவித்துள்ளனர்.

ஈ-காமர்ஸ் நிறுவனமும் ஊழியர்களை தானாக முன்வந்து ராஜினாமா செய்யுமாறு கேட்டுக் கொண்டது. இதற்கான காலக்கெடு நவம்பர் 30 வரை கொடுத்தது.

தானாக முன்வந்து ராஜினாமா செய்தவர்களுக்கு 22 வாரங்கள் வரை அடிப்படை ஊதியம் வழங்கப்படும். இது தவிர, காப்பீட்டு பாலிசியின்படி 6 மாதங்களுக்கு மருத்துவக் காப்பீட்டுத் தொகையைப் பெறவும் அல்லது அதற்குப் பதிலாக அதற்கு இணையான தொகையைப் பெறவும் பணியாளர்களுக்கு உரிமை உண்டு என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

 Google and Amazon
கூகுள் முதல் கோலா வரை: புகழ் பெற்ற பிராண்ட்களின் முதல் பெயர் என்ன தெரியுமா?

அமேசான் நிறுவனம் Amazon Web Services (AWS) வணிகத்தில் காலியிடங்களுக்கான பணியமர்த்தலை முழுமையாக இடைநிறுத்தியுள்ளது.

கூகுள் 10,000 ஊழியர்களை பணிநீக்கம் செய்வதாகவும் கூறப்படுகிறது, இது நிறுவனத்தின் பணியாளர்களில் 6 சதவீதமாகும். திறன்பட செயல்படாதவர்கள் பணிநீக்கம் செய்யப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கூகுள் 2023 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் என்று கூறப்பட்டுள்ளது.

கூகுள் நிறுவனம், இந்த ஆண்டின் நான்காவது காலாண்டில் பணியமர்த்தல் செயல்முறையை மெதுவாக்கும் என சமீபத்தில் அறிவித்ததால், செலவுகளை மிச்சப்படுத்த கூகுள் ஆட்களின் எண்ணிக்கையை குறைக்கும் எனக் கூறப்படுகிறது.

கூகுள் செயல்திறன் அடிப்படையில் ஊழியர்களை நீக்குகிறது என்றால், அது பாதிக்கப்பட்ட ஊழியர்களுக்கு பணப் பலன்களை வழங்காது என்று அர்த்தம்.

 Google and Amazon
Google : ஒரே வாரத்தில் இரண்டு பெரிய அபராதங்கள்- என்ன தவறு செய்தது கூகுள்?

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com