Eksha Subba : 21 வயதில் பைகர், பாக்சர், மாடல், காவலர் - ஊர் குருவி பருந்தான கதை !

இவை எல்லாம் ஒரு புறம் இருக்க ஏக்ஷாவின் மனதில் பல நாட்களாக இருந்த கனவு மாடலிங். MTVயின் சூப்பர் மாடல் ஆஃப் தி இயர் என்ற நிகழ்ச்சியில் பங்கேற்க வேண்டும் என்பது அவரது நீண்ட நாள் ஆசையாம்.
Eksha Subba
Eksha SubbaInstagram
Published on

நாம் சிறு வயதில் இருக்கும்போது வளர்ந்ததும் என்னவாக ஆக வேண்டும் என கேட்டால், ஒவ்வொரு தருணத்தில் ஒவ்வொன்று சொல்வோம். ஆனால் வளர்ந்த பின், சம்பந்தம் இல்லாத ஒரு துறையில் வேலை பார்த்துக்கொண்டிருப்போம். இங்கு சிக்கிம்மை சேர்ந்த பெண் ஒருவர் சிறுவயது கனவு அனைத்தையும் நனவாக்கி வருகிறார்.

பைகர், பாக்சர், போலீஸ் அதிகாரி, சூப்பர்மாடல் என பல்துறையில் கலக்கி வருகிறார் ஏக்ஷா சுப்பா என்ற பெண். 21 வயதாகும் ஏக்ஷா மிக சிறிய வயதிலேயே காவல் துறையில் இணைந்தார். தனது கனவுகளை துணிச்சலாக துரத்தி சென்ற ஏக்ஷாவுக்கு துணை நின்றது அவரது தந்தை. ஏக்ஷா குடும்பத்தின் ஒரே நம்பிக்கை. இவரது உழைப்பில் தான் குடும்பம் வாழ்ந்தது.

காவலர்:

ஏக்ஷா ஹங்க்மா சுப்பா சிக்கிம்மின் ரும்புக் என்ற கிராமத்தை சேர்ந்தவர். சிறுவயதிலேயே தற்காப்பு கலைகள் மீது கவனம் சென்றது. தனது 19 வயதில், படித்துக் கொண்டிருக்கும்போதே சிக்கிம் காவல் துறையில் இவருக்கு வேலை கிடைத்தது.

சிக்கிம் சிறிய மாநிலம் என்பதால் அரசாங்க உத்தியோகம் கிடைப்பது அவ்வளவு கடினமாக இல்லை என அவர் ப்ரூட் இந்தியா நேர்காணலில் தெரிவித்திருந்தார்.

இந்த காவல்துறை பணிக்காக ஏக்ஷா 14 மாதங்கள் பயிற்சி மேற்கொண்டார். அதன் பின்னர் மாநில ரிசர்வ் லைனில் இவருக்கு பணியிட மாற்றம் கிடைத்தது.

பைக் மீதான காதல்:

சிறு வயதில், ஏக்ஷாவின் தந்தை ஒரு முறை அவரது சகோதரருக்கு பைக் ஓட்ட கற்றுக்கொடுத்துள்ளார். அப்போது "நீயும் ஏன் பைக் ஓட்டக் கூடாது?" என தந்தை இவரை பார்த்து கேட்டப்போது தான் ஏக்ஷாவுக்கு பைக் மீதான ஆசை தொடங்கியுள்ளது. சகோதரருடன் சேர்ந்து பைக் ஓட்ட கற்றுக்கொண்ட ஏக்ஷா, பல முறை சோலோ ரைட்களுக்கு சென்றுள்ளார்.

பாக்சர்:

சிறுவயதிலிருந்தே தற்காப்பு கலைகளின் மீது ஆர்வமிக்கவராக இருந்துள்ளார் ஏக்ஷா. ஆனால் அவரது கிராமத்தில் அதை கற்றுகொள்ள வசதிகள் இருந்ததா என அவருக்கு தெரியவில்லை. இப்போதும் ஏக்ஷாவின் தந்தை தான் அவரை பாக்சிங்கில் சேர்த்துவிட்டிருக்கிறார்.

19 வயதிலேயே காவல் துறையில் சேர்ந்த ஏக்ஷாவுக்கு இது கூடுதல் திறனாகவும் இருக்கும், அவரது உடலை ஃபிட்டாக வைத்துக்கொள்ளவும் அது உதவும் என பாக்சிங் கற்றுக்கொண்டார். தேசிய அளவிலான போட்டிகளில் பங்கேற்று வெற்றியும் பெற்றிருக்கிறார்

Eksha Subba
ரிஷி சுனக்: பிரிட்டன் பிரதமர் ஆக பதவி ஏற்கவிருக்கும் இவர் யார்? இவர் இந்திய பின்னணி என்ன?

மாடலிங்:

இவை எல்லாம் ஒரு புறம் இருக்க ஏக்ஷாவின் மனதில் பல நாட்களாக இருந்த கனவு மாடலிங். MTVயின் சூப்பர் மாடல் ஆஃப் தி இயர் என்ற நிகழ்ச்சியில் பங்கேற்க வேண்டும் என்பது அவரது நீண்ட நாள் ஆசை.

எப்படியும் அந்த நிக்ழ்ச்சியில் ஒரு நாள் நான் பங்கேற்பேன் என தன் தாயிடம் எப்போதும் அவர் கூறியுள்ளார். இறுதியில் இரண்டாம் சீசனில் பங்கேற்று, முதல் 9 போட்டியாளர்களில் ஒருவராக இருந்தார்.

காவல் துறை பணியில் சேர தான் எடுத்துக்கொண்ட 14 மாத பயிற்சி தான் தனக்கு அழகிப்போட்டியில் மிகவும் உதவியாக இருந்ததாக அவர் தெரிவித்திருந்தார். மேலும், "எனக்கு உயரங்களை பார்த்து பயம் இல்லை. உடல் வலிமையை கொண்டு செய்யக்கூடிய பணிகளை என்னால் சாதாரணமாக செய்ய முடிந்தது" என்றார்.

2018ஆம் ஆண்டின் சூப்பர் மாடல் நிகழ்ச்சியில் டாப் 10ல் இவர் இடம் பெற்றார். இதன் பின்னர் சர்வதேச அளவிலான போட்டியில் பங்கேற்க வேண்டும் என தனது அடுத்த இலக்கை முடிவு நிர்ணயித்தார் ஏக்ஷா.

Asia Next Top Model நிகழ்ச்சியில் பங்கேற்க வேண்டும் என்பது இவரது கனவு. "காவல் துறையில் பணியாற்றிக்கொண்டே, மாடலிங்கிலும் வெற்றிக்கொடியை நாட்டவேண்டும் என்பது தான் என் ஆசை" என பூரிக்கிறார் ஏக்ஷா.

மாடலிங் செய்யும்போது தன்னை தானே அதிகம் நேசிப்பதாக கூறும் ஏக்ஷா, காவல் துறை அதிகாரியாக தனது பணி இந்த தேசத்துக்காக அவர் ஆற்றும் கடமை எனவும், அதை அவர் பெருமையோடும் கர்வத்தோடும் செய்து வருவதாகவும் கூறுகிறார்.

இதற்கிடையில் இந்தியாவின் சிறப்பை எப்போதும் சமூக வலைத்தளங்கள் மூலம் பறைசாற்றி, திறமையாளர்களை வெளிச்சதிற்கு கொண்டு செல்பவர் ஆனந்த் மகிந்திரா. அவர் ஏக்ஷாவை ஒரு சூப்பர் ஹீரோ, வண்டர் வுமன் என் பாராட்டியிருந்தார்

Eksha Subba
Bigg Boss நிகழ்ச்சியில் ஒரு அரசியல்வாதி - யார் இந்த விக்ரமன்?

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com