ஹிண்டன்பெர்க்: அதானி குழுமத்தின் மீது மோசடி குற்றம் சாட்டிய நேதன் ஆண்டர்சன் யார்?

அதானிக் குழுமம் பல்வேறு முறைகேடுகள், பங்கு சந்தை விலை தீர்மானிப்பதில் மோசடிகள் செய்திருப்பதாக இந்த ஹிண்டன்பெர்க் ஆராய்ச்சிகள் கூறுகின்றன. இந்த ஹிண்டன்பெர்க் என்பது என்ன? இதன் மாஸ்டர் மைண்ட் யார்?
ஹிண்டன்பெர்க்: அதானி குழுமத்தின் மீது மோசடி குற்றம் சாட்டிய நேதன் ஆண்டர்சன் யார்?
ஹிண்டன்பெர்க்: அதானி குழுமத்தின் மீது மோசடி குற்றம் சாட்டிய நேதன் ஆண்டர்சன் யார்?ட்விட்டர்
Published on

கடந்த மூன்று நாட்களாக நாம் தொடர்ந்து பேசிக்கொண்டிருப்பது ஹிண்டன்பெர்க் ஆராய்ச்சி நிறுவனத்தின் அறிக்கைகள் பற்றி தான். இந்த ஆராய்ச்சியால் உலகப் பணக்காரர்கள் பட்டியலில் சரிந்தார் கௌதம் அதானி.

அதானி குழுமம் பல்வேறு முறைகேடுகள், பங்கு சந்தை விலை தீர்மானிப்பதில் மோசடிகள் செய்திருப்பதாக இந்த ஹிண்டன்பெர்க் ஆராய்ச்சிகள் கூறுகின்றன.

இந்த ஹிண்டன்பெர்க் என்பது என்ன? இதன் மாஸ்டர் மைண்ட் யார்?

ஹிண்டன்பெர்க்: அதானி குழுமத்தின் மீது மோசடி குற்றம் சாட்டிய நேதன் ஆண்டர்சன் யார்?
NDTV : ராஜினாமா செய்த ராய் தம்பதி - அதானி செய்த சூழ்ச்சிகள் என்ன? | Explained

நேதன் ஆண்டர்சன்:

கன்னெக்ட்டிகட் பல்கலைக்கழகத்தில் இண்டர்னேஷனல் பிசினஸ் படிப்பை முடித்துவிட்டு மான்ஹாட்டன் பகுதியில் வாழ்ந்து வந்தார் நேதன் ஆண்டர்சன். இவர் FactSet Research Systems Inc என்ற நிறுவனத்தில், பொருளாதார துறையில் தனது கெரியரை தொடங்கினார்.

இவர் இஸ்ரேலில் சில காலம் ஆம்புலன்ஸ் ஓட்டுநராகவும் பணியாற்றி வந்ததாக ராய்ட்டர்ஸ் தளம் தெரிவிக்கிறது. ஆம்புலன்ஸ் ஓட்டுநராக பணியாற்றியது, தான் அழுத்தமான சூழ்நிலைகளில் நிதானத்தை கடைப்பிடிக்கவும், சிந்திக்கும் திறனையும் தனக்கு கொடுத்ததாக நேதன் தெரிவிக்கிறார்

பெர்னி மடாஃப் நிறுவனம் இதேபோன்றதொரு மோசடியில் ஈடுப்பட்டதை உலகிற்கு வெளிச்சம்போட்டு காட்டிய ஹாரி மார்கோபோலோஸ் என்பவர் தான் தனது ரோல் மாடல் என்கிறார் ஆண்டர்சன்

ஹிண்டன்பெர்க் ஆராய்ச்சி என்பது என்ன?

கடந்த 2017 ஆம் ஆண்டு நியூ யார்க் நகரத்தில், கார்ப்பரேட் நிறுவனங்கள் முறைகேடுகளை தடயவியல் ரீதியில் ஆராய்ந்து பொதுவெளிக்கு கொண்டு வரும் நிறுவனமாகத் தொடங்கப்பட்டது ஹிண்டன்பெர்க்.

நிறுவனங்களின் கணக்கு வழக்கு முறைகேடுகள், தவறான நபர்கள் நிர்வாகத்தின் முக்கிய பதவிகளில் இருப்பது, கம்பெனி தொடர்பான பரிமாற்றங்கள் ரகசியமாக வைக்கப்படுவது அல்லது பொதுவெளியில் அறிவிக்கப்படாமல் இருப்பது, முறைகேடாக வியாபாரம் செய்வது, முதலீட்டாளர்கள் மற்றும் அரசு தரப்பை ஏமாற்றி ஒரு நிறுவனத்திற்குள் நடந்திருக்கும் நிதி முறைகேடுகள் போன்ற பிரச்னைகளை இவர்கள் ஆராய்ந்து வெளியிடுகிறார்கள்.

இவர்கள் குறிவைப்பதே “மனிதர்களால் உருவாக்கப்பட்ட பேரழிவுகள்” தான் என்கிறது நிறுவனம்

ஹிண்டன்பெர்க்: அதானி குழுமத்தின் மீது மோசடி குற்றம் சாட்டிய நேதன் ஆண்டர்சன் யார்?
Gautam Adani : உலகின் 2வது பணக்காரர் ஆனார் அதானி - எவ்வளவு சொத்து மதிப்பு தெரியுமா?

ஹிண்டன்பெர்க்கின் மிகப் பெரிய வெற்றி:

இதுவரை ஹிண்டன்பெர்க் மேற்கொண்ட ஆராய்ச்சிகளிலேயே மிகப் பெரிய திருப்புமுனையாக அமைந்தது நிகோலா குழுமத்தின் மோசடிகள் தான்.

கடந்த செப்டம்பர் 2020ஆம் ஆண்டு இந்த நிறுவனத்தின் மோசடிகள் மீது மேற்கொண்ட ஆராய்ச்சி முடிவுகளை வெளியிட்டது ஹிண்டன்பெர்க்.

இதுவரை ஹிண்டன்பெர்க்கிடம் சிக்கிய நிறுவனங்கள்

கடந்த 2017ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது முதல், சுமார் 16 நிறுவனங்களில் மோசடிகளை வெளிகொணர்ந்துள்ளது ஹிண்டன்பெர்க் ஆராய்ச்சி.

அதில் சமீபத்திய நிகழ்வாக தான் அதானி குழுமம் மோசடியில் ஈடுபட்டுள்ளதாக அறிக்கைகள் வெளியிட்டது.

அதானி குழுமம் மீது ஹிண்டன்பெர்க் வைத்த குற்றச்சாட்டுகள் குறித்து விரிவாக படிக்க...

அதானி குழுமம் மோசடி செய்கிறதா? : ஹிண்டன்பெர்க் வைக்கும் குற்றச்சாட்டுகள் இவைதான் Explained

அதானி vs ஹிண்டன்பெர்க் : அமெரிக்க நிறுவனத்தின் குற்றச்சாட்டுகளுக்கு அதானி பதில் என்ன?

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com