Royal Enfield: 80,000 கிமீ, 40 நாடுகள்- புடவை கட்டி புல்லட்டில் World Tour செல்லும் பெண்!

புடவை அணிந்துகொண்டு, புல்லெட்டில் சோலோ ட்ரிப் செல்கிறார் ராமாபாய். இந்த பயணத்திற்கு மொத்தம் 7 புடவைகளையே எடுத்துக்கொண்டிருக்கிறார். இவர் யார்? இந்த சோலோ ட்ரிப் செல்ல தொடக்கம் என்ன? எங்கு எல்லாம் செல்கிறார் ராமாபாய்?
Royal Enfield: 80,000 கிமீ, 40 நாடுகள்- புடவை கட்டி புல்லட்டில் World Tour செல்லும் பெண்
Royal Enfield: 80,000 கிமீ, 40 நாடுகள்- புடவை கட்டி புல்லட்டில் World Tour செல்லும் பெண்ட்விட்டர்

சோலோ ட்ரிப் செல்ல வேண்டும் என்ற ஆசை நம் எல்லோருக்கும் இருக்கும். முன்னர் இருந்த கட்டுபாடுகள், தடைகள் எல்லாம் உடைக்கப்பட்டு, பெண்களும் கூட இன்றைய காலத்தில் வேண்டர்லஸ்ட்களாக இருக்கின்றனர்.

மகாராஷ்டிரா மாநிலம் புனேவைச் சேர்ந்த ராமாபாய் லட்படேவும் ஒரு வேண்டர்லஸ்ட் தான். வேர்ல்ட் டூர் செல்லும் இவர் தன் பயணத்தை தொடங்கி இன்று 7 நாட்கள் ஆகிறது.

மகாராஷ்டிர மாநிலத்தவர் அணியும் பாணியில் புடவை அணிந்துகொண்டு, புல்லட்டில் சோலோ ட்ரிப் செல்கிறார் ராமாபாய். இந்த பயணத்திற்கு மொத்தம் 7 புடவைகளையே எடுத்துக்கொண்டிருக்கிறார்.

இவர் யார்? இந்த சோலோ ட்ரிப் செல்ல தொடக்கம் என்ன? எங்கு எல்லாம் செல்கிறார் ராமாபாய்?

சிறுவயது முதலே பயணக் காதல்:

27 வயதாகும் ராமாபாய் ஒரு தொழில்முனைவோர் மற்றும் விமானி. தனது 16 வயது முதல் சோலோ ட்ரிப்களை அவ்வப்போது மேற்கொண்டு வந்துள்ளார்.

“எனது தந்தை எங்களை நிறைய இடங்களுக்கு அழைத்து செல்வார். அதிலிருந்து தான் எனக்கு பயணங்கள் மீதான ஆர்வம் பிறந்தது. இந்தியாவில் சில இடங்களுக்கும், சில உலக நாடுகளுக்கும் நான் சென்றிருக்கிறேன்.”

விமானங்களை இயக்கிய அனுபவம் இருப்பதால், மேப்களை பார்த்து வழி அறிந்து ஒவ்வொரு இடத்திற்கும் செல்வது அவ்வளவு ஒன்றும் இயலாத காரியமில்லை என்கிறார்.

பயணத்திற்கான காரணம்:

தனது முந்தைய பயணங்களின் போது இந்தியாவின் கலாச்சாரம், பன்முகத்தனமை மற்றும் பாரம்பரியம் அவ்வளவாக மற்ற நாடுகளுக்கு சென்று சேரவில்லை என்பதை அவர் உணர்ந்துள்ளார்.

இதனால் இந்தியாவின் பெருமையை உலக நாடுகள் அறியச் செய்ய இந்த பயணத்தை அவர் தொடங்கியுள்ளார். மகாராஷ்டிரா மாநிலத்தின் பெருமையையும் பறைசாற்றவுள்ளார்.

Royal Enfield: 80,000 கிமீ, 40 நாடுகள்- புடவை கட்டி புல்லட்டில் World Tour செல்லும் பெண்
3 கண்டங்கள், 30 நாடுகள், 30000 கி.மீ - உலகின் நீளமான இந்த பாதைகளில் பயணம் செய்ய தயாரா?

எப்படி தோன்றியது இந்த சோலோ ட்ரிப் ஐடியா?

ஜி20 மாநாட்டின் போது இந்திய பிரதமர் நரேந்திர மோடி பேசியது தான் இந்த சோலோ ட்ரிப் மேற்கொள்ள அவரை தூண்டியதாக கூறுகிறார் ராமாபாய்.

அந்த மாநாட்டில் பிரதமர் மோடி, “இந்திய பெண்கள் பல அரிதான, அற்புதமான சாதனைகளை செய்துவருகின்றனர்” என்றது தான் இதன் தொடக்கம்

பாரதத்தின் மகள்:

தனது அகராதியில் ‘முடியாது’ என்கிற வார்த்தைக்கே இடமில்லை எனும் ராமாபாய், மும்பையின் கேட் வே ஆஃப் இந்தியாவில் கடந்த மார்ச் 8 மகளிர் தினத்தன்று தன் பயணத்தை இனிதே தொடங்கினார்.

”என்னை பாரதத்தின் மகள் ( பாரத் கி பேட்டி) எனக் குறிப்பிடுவது எனக்கு பிடித்திருக்கிறது” ஜி20 மாநாட்டின் 12 நாடுகள் உட்பட மொத்தம் 40 நாடுகள் 6 கண்டங்களை தனது லிஸ்ட்டில் வைத்திருக்கிறார் ராமாபாய்.

40 நாடுகள், 6 கண்டங்கள்:

இந்த 40 நாடுகளை சுற்றிப்பார்த்துவிட்டு அடுத்த ஆண்டு மார்ச் 8ல் தாய் நாட்டிற்கு திரும்புகிறார்.

கிட்ட தட்ட 80,000 கிலோமீட்டரை தன்னந்தனியே கடக்கவுள்ளார்.

முதலில் மும்பையிலிருந்து டெல்லி செல்கிறார். டெல்லியிலிருந்து ஆஸ்திரேலியாவுக்கு இவரது பைக் ஏர்லிப்ட் செய்யப்படும்.

ஆஸ்திரேலியாவின் பெர்த் முதல் சிட்னி வரை இவர் கடக்கவிருக்கும் 1,600 கிமீ தூரம் தான் மிகவும் சவலானது என்று கூறப்படுகிறது.

அதிக மனிதர்கள் வாழாத பகுதிகளும், சரியான நெட்வொர்க் கிடைக்காத பகுதிகளும் இங்கு அதிகம். முக்கியமாக இளைப்பாற வேண்டும் என்றாலும் காடுகளில் தங்க நேரிடும்!

Royal Enfield: 80,000 கிமீ, 40 நாடுகள்- புடவை கட்டி புல்லட்டில் World Tour செல்லும் பெண்
கனிகா : 32 வயதில் 10 பிரைவேட் ஜெட்களை சொந்தமாக்கிய இந்திய பெண் - ஊர் குருவி பருந்தான கதை

ஆஸ்திரேலியா முதல் அமெரிக்கா வரை:

டெல்லியிலிருந்து ஆஸ்திரேலியா செல்லும் ராமாபாய், அங்கிருந்து நியூசிலாந்து, சிலி, கொலம்பியா, அமெரிக்கா செல்கிறார். அமெரிக்காவிலிருந்து கடல்வழி பயணமாக லண்டன் செல்கிறார்.

லண்டனிலிருந்து போலந்து, ரோம், இத்தாலி உள்ளிட்ட நாடுகளுக்கும் செல்கிறார். போர்ச்சுகல், மொராக்கோ, துனிசியா மற்றும் துனிசியாவிலிருந்து ஜோர்டானில் பெட்ரா வரை கடல் மார்க்கமாக செல்கிறார்.

தொடர்ந்து சவூதி அரேபியாவுக்கு பைக்கில் சென்று பின்னர் மஸ்கட் வரை பைக்கில் ஓமன், துபாயை அடைந்து, பின்னர் மீண்டும் கடல் வழியாக குஜராத்தில் உள்ள ஜாம்நகருக்கு வந்தடைகிறார். 8 மார்ச் 2024 அன்று கேட்வே ஆஃப் இந்தியா மும்பைக்கு திரும்புகிறார்.

நகை, கார் வித்தாச்சு:

இந்த பயணத்திற்கு ஒரு கோடி ரூபாய்க்கும் மேல் செலவாகும் என்கிறார் ராமாபாய். ஏற்கனவே தனது சேமிப்புகளை, நகைகள், மற்றும் தனது எஸ்யூவி காரையும் விற்றுவிட்டார்.

இந்த ஓராண்டு பயணத்திற்கு இனி தேவைப்படும் தொகையை கிரவுட் ஃபண்டிங் மூலமாக மக்களிடம் இருந்து நிதி பெற முடிவெடுத்திருக்கிறார். ஒரு நபர் 1 ரூபாய் அளித்தால் போதும் எனவும் கூறியுள்ளார்.

முதல் நபராக மகாராஷ்டிரா மாநிலத்தின் முதல்வர் ஏக்னாத் ஷிண்டே ஒரு ரூபாய் இவருக்கு அளித்திருக்கிறார்

Royal Enfield: 80,000 கிமீ, 40 நாடுகள்- புடவை கட்டி புல்லட்டில் World Tour செல்லும் பெண்
கேரளா டு கத்தார்: மெஸ்ஸியை பார்க்க அரபு தேசத்திற்கு சோலோ ட்ரிப் சென்ற ரசிகை!

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com