கேரளா டு கத்தார்: மெஸ்ஸியை பார்க்க அரபு தேசத்திற்கு சோலோ ட்ரிப் சென்ற ரசிகை!

நாஜி நவுஷி என்ற பெண், கடந்த அக்டோபர் 15 ஆம் தேதி கேரளாவிலிருந்து கத்தாருக்கு புறப்பட்டார். 33 வயதாகும் நாஜிக்கு மொத்தம் ஐந்து குழந்தைகள். கணவரிடம் குழந்தைகளை விட்டுவிட்டு, ஒரு SUV காரை பிரத்யேகமாக இந்த பயணத்திற்காக தயார்செய்து கொண்டு பயணத்தை மேற்கொண்டுள்ளார்.
நாஜி நவுஷி
நாஜி நவுஷிட்விட்டர்

கால்பந்து வீரர் லியோனெல் மெஸ்ஸி விளையாடுவதை நேரில் பார்ப்பதற்காக கேரளாவிலிருந்து ஒரு பெண் கத்தாருக்கு சோலோ ட்ரிப் சென்றிருக்கிறார்.

கால்பந்து விளையாட்டின் மிளிரும் நட்சத்திரம் லியோனெல் மெஸ்ஸி. உலகெங்கிலும் இவருக்கு ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என ரசிகர்கள் பட்டாளம் கணக்கிட முடியாத அளவு குவிந்திருக்கிறது.

தற்போது கத்தாரில் நடைபெற்று வரும் ஃபிஃபா கால்பந்து உலகக்கோப்பை ஆட்டத்தை பார்க்க, இவரது கோடான கோடி ரசிகர்களில் ஒருவர், கேரளாவிலிருந்து தனியே புறப்பட்டு கத்தார் சென்றிருக்கிறார்.

கலீஜ் டைம்ஸ் பத்திரிகையின் அறிக்கைப்படி, நாஜி நவுஷி என்ற பெண், கடந்த அக்டோபர் 15 ஆம் தேதி கேரளாவிலிருந்து கத்தாருக்கு புறப்பட்டார். 33 வயதாகும் நாஜிக்கு மொத்தம் ஐந்து குழந்தைகள். கணவரிடம் குழந்தைகளை விட்டுவிட்டு, ஒரு SUV காரை பிரத்யேகமாக இந்த பயணத்திற்காக தயார் செய்து கொண்டு பயணத்தை மேற்கொண்டுள்ளார்.

நாஜி நவுஷி
கத்தார் : முதல் ஆளாக வெளியேறியது போட்டியை நடத்தும் நாடு - கால்பந்து ரசிகர்கள் கேலி!

இந்த SUVஐ மும்பையிலிருந்து ஓமனுக்கு கப்பல் மூலம் அனுப்பப்பட்டது. மஸ்கட்டில் இருந்து தனது பயணத்தைத் தொடங்கிய நாஜி, ஹட்டா எல்லை வழியாக தனது எஸ்யூவியில் ஐக்கிய அரபு எமிரேட்ஸுக்கு பயணம் செய்தார். பின்னர் துபாயில் உள்ள உலகின் மிக உயரமான கோபுரமான புர்ஜ் கலீஃபாவைப் பார்வையிட்டுள்ளார்.

நாஜி தனது இந்த பயணத்திற்காக தன் காரில் அரிசி, தண்ணீர், மாவு, மசாலாப் பொருட்கள் மற்றும் பிற உலர்ந்த பொருட்களையும் சேமித்து வைத்துள்ளார்.

"என்னால் முடிந்தவரை சமைக்க முயற்சித்தேன். இது பணத்தை சேமிப்பதோடு, உணவு நச்சுத்தன்மையின் அபாயத்தையும் குறைக்கிறது, "என்று அவர் செய்தித்தாளிடம் கூறினார்.

மெஸ்ஸி அர்ஜென்டினா நாட்டிற்காக விளையாடுகிறார். முன்னர், அர்ஜென்டினா அணி சவுதி அரேபியா அணியுடன் மோதிய போட்டியில் அர்ஜென்டினா தோற்றது. இந்த போட்டியில் மெஸ்ஸி ஒரே ஒரு கோல் அடித்திருந்தார்.

இது ரசிகர்களை பெரும் ஏமாற்றத்தில் ஆழ்த்தியது. இது குறித்து பேசிய நாஜி, "எனக்கு மெஸ்ஸி விளையாடுவதை பார்க்கவேண்டும். சவுதியுடன் தோற்றது ஏமாற்றமளிக்கிறது. ஆனால், இது எங்கள் அணி கோப்பையை வெல்லப் போகும் பயணத்தில் இது ஒரு சிறு தடை தான்" என்றார்.

அர்ஜென்டினா அணி, மெக்சிகோ அணியுடன் மோதியதில் 2-0 என்ற கோல் கணக்கில் வென்றது குறிப்பிடத்தக்கது.

நாஜி நவுஷி
கத்தார் : சிலுவைப் போர் உடையால் சர்ச்சை - இங்கிலாந்து ரசிகர்களுக்கு தடை விதித்ததா FIFA?

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com