சைக்கிள் கூட ஓட்ட தெரியாது... பஸ் டிரைவராக மாறிய பெண்ணின் ஓர் அட்டாகச கதை

டிடிசி பேருந்துகளுக்குப் பெண் ஓட்டுநர்களை நியமிக்க அரசு மேற்கொண்ட முயற்சிகளுக்கு இடையே சர்மிளா என்ற பெண்ணைப் பற்றிய பதிவு பகிரப்பட்டுள்ளது.
 DTC bus driver Sharmila
DTC bus driver SharmilaTwitter
Published on

பெண்கள் பல்வேறு துறைகளில் தங்களின் திறமைகளை வெளிப்படுத்திச் சாதித்துக் காட்டி வருகின்றனர். சமூகத்தின் பல விமர்சனங்களைக் கடந்து விடாமுயற்சிகளால் தங்களுக்கு இருக்கும் தடையை உடைத்தெறிகின்றனர்.

அந்த வகையில் ஒரு பெண் பஸ் டிரைவராக மாறிய கதையை டெல்லி போக்குவரத்துத்துறை பகிர்ந்துள்ளது.

போக்குவரத்துத்துறை தனது அதிகாரப்பூர்வ டிவிட்டர் பக்கத்தில், "இவர் தான் சர்மிளா.. இவருக்கு சில ஆண்டுகளுக்கு முன்பு வரை, சைக்கிள் ஓட்டத் தெரியாது, ஆனால் இன்று டெல்லி அரசிடம் பேருந்து ஓட்டும் பயிற்சி பெற்று டிடிசி பேருந்துகளை ஓட்டி வருகிறார்" என்று பதிவிட்டிருந்தனர்.

 DTC bus driver Sharmila
புல்லட் டு பஸ்: டிரைவிங்கில் அசத்தும் சட்டக்கல்லூரி மாணவி - ஒரு அட்டாகச பெண்ணின் கதை

டிடிசி பேருந்துகளுக்குப் பெண் ஓட்டுநர்களை நியமிக்க அரசு மேற்கொண்ட முயற்சிகளுக்கு இடையே சர்மிளா என்ற பெண்ணைப் பற்றிய பதிவு பகிரப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இது குறித்து சர்மிளா கூறுகையில்,

இரண்டு மாத பயிற்சிக்குப் பின், பஸ் ஓட்ட கற்றுக்கொண்டதாகவும், பயிற்சி மற்றும் வாய்ப்பு அளித்ததற்காக டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கும் அவர் நன்றியும் தெரிவித்தார்.

தனது இரண்டு குழந்தைகள் உட்பட அவரது முழு குடும்பமும் தனக்கு ஆதரவாக இருப்பதாகக் கூறினார்.

"ஒரு பெண் ஓட்டும் பேருந்தில் பயணம் செய்ய மக்கள் தயங்குவார்கள், ஆனால் பயணம் செய்த பிறகு, அவர்களின் மனநிலை மாறியதாகவும் அவர் தெரிவித்தார்.

சர்மிளாவின் செயல் மற்றவர்களுக்கு ஊக்கம் அளித்துடன், இணைய வாசிகளைப் பெரிதும் கவர்ந்து வருகிறது.

இதே போன்று கொச்சியைச் சேர்ந்த 21 வயது சட்டக்கல்லூரி மாணவி அன்மேரி, ஒவ்வொரு வாரமும் ஞாயிறு தோறும் ஊதியம் ஏதும் வாங்காமல் பேருந்து ஓட்டி வந்த கதை இணையவாசிகளை பெரிதும் கவர்ந்தது குறிப்பிடத்தக்கது.

 DTC bus driver Sharmila
அரசு பேருந்தில் பணியமர்த்தப்பட்ட பெண் நடத்துநர் - என்ன சொல்கிறார் இந்திராணி?

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com