பெண்கள் பல்வேறு துறைகளில் தங்களின் திறமைகளை வெளிப்படுத்திச் சாதித்துக் காட்டி வருகின்றனர். சமூகத்தின் பல விமர்சனங்களைக் கடந்து விடாமுயற்சிகளால் தங்களுக்கு இருக்கும் தடையை உடைத்தெறிகின்றனர்.
அந்த வகையில், கொச்சியைச் சேர்ந்த 21 வயது சட்டக்கல்லூரி மாணவி அன்மேரி, ஒவ்வொரு வாரமும் ஞாயிறு தோறும் ஊதியம் ஏதும் வாங்காமல் பேருந்து ஓட்டி வருகிறார்.
சிறு வயதிலிருந்தே அன்மேரிக்கு வாகனங்கள் மீது மிகுந்த ஆர்வம் இருந்து வந்துள்ளது.
இதனால் பக்கத்து வீட்டுக்காரரான சரத், என்பவரின் பஸ்ஸை ஓட்டி கற்றுக்கொண்டுள்ளார். இதற்கு அன்மேரியின் பெற்றோரின் முழு ஆதரவு அளித்து வருகின்றனர். வாகனங்கள் மீதான காதலை அறிந்த அன்மேரியின் பாட்டி அவருக்கு அவ்வளவு உறுதுணையாக இருந்து வந்துள்ளார்.
15 வயதிலேயே அப்பாவின் ராயல் என்ஃபில்டு பைக்கை ஓட்டக் கற்றுக்கொண்டுள்ளார் இந்த பெண்.
வாகன மீதான ஆர்வத்தினால் வாரத்தில் ஒரு நாள் அதாவது ஞாயிற்றுக்கிழமை பேருந்து ஓட்டி வருகிறார் அன்மேரி. விரும்பிச் செய்யும் இதற்கு அவர் பணம் கூட வாங்குவதில்லை.
மற்ற நாட்களில், தினமும் மாலையில் வாகனத்தின் உரிமையாளர் வீட்டிற்குப் பேருந்தை ஓட்டுவதாகத் தெரிவித்தார்.
"பேருந்தை ஓட்டிய முதல் நாள் இன்னும் எனக்கு நினைவில் இருக்கிறது. ஒரு பெண் பேருந்து ஓட்டுவதைப் பார்த்து மக்கள் அதிர்ச்சியும், அச்சமும் அடைந்தனர். ஆரம்ப வாரங்களில், நான் இதனைப் புதுமையாக உணர்ந்தேன்.
மேலும் நான் வாகனம் ஓட்டுவதைக் கண்டு பலர் பயந்தனர். விபத்து நிச்சயம் நடக்கும் என்று அவர்கள் நினைத்தார்கள். இருப்பினும், ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் நான் இந்த வழியாக வாகனம் ஓட்டுவதை அவர்கள் பார்க்கப் பழகிவிட்டனர்" என்று அவர் கூறினார்.
மற்ற ஓட்டுநர்கள் ஆரம்பத்தில் ஒரு பெண் வாகனம் ஓட்டுவதை ஏற்றுக்கொள்ளவில்லை என்று அவர் கூறினார்.
"அவர்கள் என் பேருந்தைத் துரத்திச் சென்று முந்த முயன்றனர். ஆனால் தற்போது சக ஓட்டுநர்களுடன் நட்பு ஏற்பட்டு விட்டது" என்றார்.
எல்லா துறையிலும் நல்லவர்களும் இருக்கிறார்கள் கெட்டவர்களும் இருக்கிறார்கள், இங்கேயும் அப்படித்தான்” என்று அன்மேரி கூறுகிறார்.
இவரின் புகைப்படங்கள் இணையத்தில் வைரலானதை அடுத்து பலரும் அவரை பாராட்டி வருகின்றனர்.
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.
Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.
Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com
Follow us on:
Newssensetn : https://www.facebook.com/FullyNewsy
Nalam 360 : https://www.facebook.com/Nalam360
Newsnow: https://www.facebook.com/GenZSense
TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp
Hangout : https://www.facebook.com/TamilWanderlust