உளவுத்துறை மற்றும் ரா அமைப்பின் போலி அடையாள அட்டை வைத்திருந்த குற்றத்திற்காகவும், பண மோசடியில் ஈடுபட்டதாலும், டெல்லியைச் சேர்ந்த நபரும், அவரது காதலியும் கைது செய்யப்பட்டனர்.
இவர்கள் இருவரும் லிவ் இன் முறையில் வாழ்ந்து வந்தனர். மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டு அந்த நபர் சிறையில் உள்ள நிலையில், கர்ப்பிணியான அவரது காதலி ஜாமீனில் வெளியில் உள்ளார்.
தற்போது அந்த நபர், தன் காதலி நிறைமாத கர்ப்பிணியாக உள்ளதால், அவரை கவனித்துக்கொள்ள தான் செல்ல வேண்டும் என்று சொல்லி ஜாமீன் கேட்டிருக்கிறார்.
வழக்கை விசாரித்த நீதிபதி பூனம் பம்பா, அந்த பெண்ணுக்கு உண்மையாகவே கவனித்துக்கொள்ள யாரும் இல்லாததால் அவரது காதலனுக்கு ஜாமீன் வழங்கியுள்ளார்.
இவர்களின் இரு வீட்டாரின் ஆதரவும் இல்லாததால், அந்த பெண் அவரது வயதான தாத்தா பாட்டியுடன் தங்கி வருகிறார். அவர்களுக்கு வயது 90க்கு மேல் ஆவதனால், அந்த பெண்ணை கவனித்துக்கொள்வது சிரமமாக உள்ளது.
மூன்று வாரம் இடைக்கால ஜாமீன் வழங்கி உத்தரவை பிறபித்த நீதிபதி பம்பா, அந்த நபருக்கு 30 ஆயிரம் ரூபாய் பிணைத்தொகை செலுத்திவிட்டுச் செல்லவேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளார். எப்போது விசாரணைக்கு அழைத்தாலும் ஆஜராக வேண்டும், தனது செல்ஃபோன் எண்ணையும் அவர்களிடம் கொடுத்துவிட்டு செல்லவேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மனுதாரர் தன் அலைப்பேசியை எப்போது ஸ்விட்ச் ஆஃப் செய்யக்கூடாது என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.
இப்போது 3 வார இடைக்கால ஜாமினில் அந்த நபர் விடுதலையாகியுள்ளார்.
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.
Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.
Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com
Follow us on:
Newssensetn : https://www.facebook.com/FullyNewsy
Nalam 360 : https://www.facebook.com/Nalam360
Newsnow: https://www.facebook.com/GenZSense
TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp
Hangout : https://www.facebook.com/TamilWanderlust