கடலில் மனைவியை தொலைத்த கணவர்: காதலன் வீட்டில் கண்டுபிடித்த போலீஸ் - செலவோ ஒரு கோடி!

இந்தியக் கடற்படையின் மூன்று கப்பல்கள் மற்றும் ஒரு ஹெலிகாப்டர் அந்த பெண்ணை தேடும் பணிக்காகப் பயன்படுத்தப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
Indian Navy ship
Indian Navy shipTwitter
Published on

ஆந்திரப் பிரதேச மாநிலம் ஆர்கே கடற்கரையில், கடந்த ஜூலை 25ஆம் தேதி திருமணமான பெண் ஒருவர், காணாமல் போன சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அந்த பெண்ணைத் தேடுவதற்காக கடற்படை அதிகாரிகள் இரண்டு நாட்களில் கிட்டத்தட்ட 1 கோடி ரூபாய் செலவழித்திருக்கிறார். இறுதியில் அந்த பெண் கண்டுபிடிக்கப்பட்டார், எங்கே தெரியுமா? நெல்லூர் மாவட்டம் கவாலியில் உள்ள தன்னுடைய காதலரின் வீட்டில் தான் கண்டுபிடிக்கப்பட்டார்.

விசாகப்பட்டினம் என்ஏடி அருகே உள்ள சஞ்சீவய்யநகர் காலனியில் வசிப்பவர் 21 வயதான சாய் பிரியா. இவர் கடந்த 2020-ஆம் ஆண்டு சீனிவாச ராவ் என்பவரைத் திருமணம் செய்து கொண்டார். இரண்டு ஆண்டுகள் எந்த பிரச்சனையும் இல்லாமல் நகர்ந்த இவர்களின் வாழ்க்கை, அவர்களின் இரண்டாமாண்டு திருமண நாளில் தடம் புரண்டிருக்கிறது.

கடந்த திங்கட்கிழமையன்று தங்களுடைய இரண்டாவது திருமண நாளைக் கொண்டாடுவதற்காக, சாய் பிரியாவும், சீனிவாச ராவும் சிம்மாசலம் கோயிலுக்குச் சென்றிருக்கிறார்கள். அங்குத் தரிசனம் முடித்த பிறகு மாலையில் இருவரும் ஆர்கே கடற்கரைக்கு வந்திருக்கிறார்கள்.

இரவு 7 மணியளவில் திடீரென்று பிரியா காணாமல் போயிருக்கிறார். உடனடியாக போலீசாருக்கும், பெற்றோருக்கும் தகவல் கொடுத்தார். எங்குத் தேடியும் கிடைக்காமல் போகவே, அவர் கடலில் மூழ்கியிருக்கலாம் என்கிற சந்தேகத்தின் பேரில் தேடல் தொடங்கியது. மறுநாள் செவ்வாயன்று ஒரு போலீஸ் குழு கடலோர காவல்படை குழு வந்தது. பின்னர் அவர்கள் கடற்கரையிலும் கடலிலும் பெண்ணைத் தேட சேடக் ஹெலிகாப்டர்களை வரவழைத்தனர். ஆனாலும் சாய் பிரியா கிடைக்கவே இல்லை.

Indian Navy ship
மனைவி முகம் பதித்த தலையணையுடன் சுற்றுலா செல்லும் கணவர் - ஏன்? எங்கே?
Sea
Sea Pexels

இரண்டு நாட்களாகத் தொடர்ந்த இந்த தேடுதல் வேட்டைக்குப் பிறகு, அவரின் போன் மூலம் அவர், நெல்லூர் மாவட்டம் கவாலியில் உள்ள தன்னுடைய காதலரின் வீட்டில் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

இந்தியக் கடற்படையின் மூன்று கப்பல்கள் மற்றும் ஒரு ஹெலிகாப்டர் அந்த பெண்ணை தேடும் பணிக்காகப் பயன்படுத்தப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும் ஒரு மூத்த காவல்துறை அதிகாரி இந்த சம்பவம் குறித்துக் கூறுகையில், “அந்த பெண் நம் அனைவரையும் ஏமாற்றிவிட்டார். எங்கள் நேரத்தையும் சக்தியையும் வீணடித்துவிட்டார்" என்று கூறினார்.

Indian Navy ship
மனைவிக்கு பயந்து பாஸ்போர்டை கிழித்த கணவர் - மாட்டிக்கொண்டது எப்படி?

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com