குஜராத்: 11ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்ட மோதேரா சூரிய கோவில் - இதன் சிறப்புகள் என்ன?

இந்தியாவில் மற்றுமொரு சூரிய கோவில் இருக்கிறது. இதனை பற்றி நாம் பெரிதும் கேள்விப்படாமல் இருக்கிறோம். இந்த கோவில் குஜராத்தில் அமைந்துள்ளது. இப்பதிவில், குஜராத் சூரிய கோவிலை பற்றி இன்னும் தெரிந்துகொள்வோம்.
குஜராத்: 11ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்ட மோதேரா சூரிய கோவில் - இதன் சிறப்புகள் என்ன?
குஜராத்: 11ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்ட மோதேரா சூரிய கோவில் - இதன் சிறப்புகள் என்ன?twitter

இந்தியா என்று எடுத்துக்கொண்டால், கோவில்கள் ஏராளம் உள்ளன. இவை ஒவ்வொன்றிற்கும் தனிச் சிறப்புகளும், வரலாற்று பின்னணியும் உள்ளன.

இந்தியாவில், இந்துக் கடவுள்கள் பலவற்றிற்கும் தனித்தனியே கோவில்கள் இருப்பதையும் நாம் அறிவோம். அவற்றில் ஒன்று தான் சூரியனுக்கான கோவில். சூரியன் கோவில் என்றவுடன் நம் நினைவுக்கு வருவது கோனார்க் சூரிய கோவில் தான்.

ஆனால் இந்தியாவில் மற்றுமொரு சூரிய கோவில் இருக்கிறது. இதனை பற்றி நாம் பெரிதும் கேள்விப்படாமல் இருக்கிறோம். இந்த கோவில் குஜராத்தில் அமைந்துள்ளது. இப்பதிவில், குஜராத் சூரிய கோவிலை பற்றி இன்னும் தெரிந்துகொள்வோம்.

இந்திய கோவில் கட்டிடக்கலையின் எடுத்துக்காட்டுகளில் ஒன்றாக போற்றப்படுகிறது, குஜராத்தில் அமைந்துள்ள மோதேரா சூரிய கோவில். புஷ்பவதி நதிக்கரையில் உள்ள இந்த கோவில், குஜராத்தின் வரலாறு மற்றும் கலாச்சாரத்தை வழங்குகிறது.

11 ஆம் நூற்றாண்டில், சோலன்கி வம்சத்தை சேர்ந்த ராஜா ஒன்றாம் பீம்தேவ் என்பவர் காலத்தில் கட்டப்பட்டது இந்த கோவில். சூரிய மந்திர் என்றழைக்கப்படும் இந்த புனித தலம் மரு குர்ஜாரா பாணியில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

மூன்று அடுக்குகள் கொண்ட இந்த கோவிலில் ஒரு சபா மண்டபம் (கூடம்) ஒரு குடா மண்டபம் (கர்ப்பகிரகம்) மற்றும் ஒரு குண்ட் எனப்படும் தொட்டி உள்ளது

குஜராத்: 11ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்ட மோதேரா சூரிய கோவில் - இதன் சிறப்புகள் என்ன?
Kailasa Temple: ஒரே ஒரு பாறையால் செதுக்கப்பட்ட இந்திய கோவில் குறித்து தெரியுமா?

குஜராத் சூரிய கோவில், வானியல் ரீதியாக (astronomical precision) துல்லியமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இதுவே அந்த காலத்து கட்டிடக் கலைஞர்களின் வானியல் பற்றிய ஆழமான அறிவின் சான்றாகும்.

உத்தராயணத்தின் போது, ​​உதய சூரியனின் முதல் கதிர்கள் கருவறையில் உள்ள சூரியனின் சிலையை நேரடியாக ஒளிரச் செய்கின்றன.

இது உலகம் முழுவதிலுமிருந்து வரும் பக்தர்களையும் சுற்றுலாப் பயணிகளையும் ஈர்க்கும் ஒரு காட்சியாகும். மேலும் இந்த இடத்தின் அமைதியான சூழல், மனதை இதமாக்குகிறது.

இயற்கை சீற்றங்கள் பலவற்றையும் எதிர்கொண்டு, இன்றளவும் வலுவாக நிற்கிறது இந்த கோவில். இந்திய தொல்லியல் துறை கோவிலின் மறு சீரமைப்பு பணிகள் மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

அகமதாபாத், காந்தி நகர் போன்ற இடங்களில் இருந்து விரைவில் இந்த சூரிய மந்திர் சூரிய கோவிலை அடையலாம். மார்ச் முதல் செப்டம்பர் மாதம் இந்த கோவிலுக்கு சென்று வர சிறந்த நேரமாகும்.

இந்த சமயத்தில் சென்றால், சூரிய கதிரொளி, கருவறையுடன் நேர்கோட்டில் வரும் அற்புத காட்சியை நாம் காணலாம்

குஜராத்: 11ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்ட மோதேரா சூரிய கோவில் - இதன் சிறப்புகள் என்ன?
ஒடிசா: பெண் அர்ச்சகர்கள் பூஜை செய்யும் அம்மன் கோவில் - இங்கு ஆண்களுக்கு ஏன் அனுமதி இல்லை?

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com