ஸ்விக்கியின் இன்ஸ்டாமார்ட்டில் அதிகம் தேடப்பட்ட விசித்திரமான பொருட்களின் பட்டியல் வெளியாகியுள்ளது. இந்த பட்டியலை ஸ்விக்கி நிறுவனம் தன் ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டதிலிருந்து பல நகைச்சுவையான கமெண்ட்களை தெரிவித்து வருகின்றனர் இணையவாசிகள்.
பிரபல உணவு டெலிவரி நிறுவனமான ஸ்விக்கி, உணவு டெலிவரி செய்வதையும் தாண்டி, அடுத்தக்கட்டமாக மளிகை பொருட்கள், வீட்டு உபயோக பொருட்கள் ஆகியவற்றையும் டெலிவரி செய்து வருகிறது. இதனால், பொதுமக்கள் சில்லறை பொருட்கள் வாங்க மளிகை கடைகளுக்கு செல்லும் வழக்கம் குறைந்து வருகிறது.
இந்நிலையில், ஸ்விக்கி ஆப்பில் அதிகம் தேடப்பட்ட விசித்திரமான பொருட்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது நிறுவனம்.
”மக்கள் இன்ஸ்டாமார்ட்டில் இதை தான் தேடினார்கள் என்றால் நீங்கள் நம்பமாட்டீர்கள்” என தலைப்பிட்டு ட்வீட்டை பகிர்ந்திருந்தது ஸ்விக்கி.
சோபா, பெட்ரோல், மம்மி, உள்ளாடை, பெட் ஆகிய வார்த்தைகள் அதிகம் தேடப்பட்டுள்ளன.
பெட்ரோல் என்ற வார்த்தையை 5,981 முறை தேடியுள்ளனர் வாடிக்கையாளர்கள். அண்டர்வேர்(உள்ளாடை) என்ற வார்த்தை 8,000த்துக்கும் மேற்பட்ட முறை தேடப்பட்டுள்ளது. இதை விட விசித்திரமாக மம்மி (Mommy) என்ற வார்த்தையை 7,200 முறை தேடியுள்ளனர்.
இது இணையவாசிகள் மத்தியில் சிரிப்பலையை தூண்டியுள்ளது.
அதிகபட்சமாக பெட் என்ற வார்த்தை 23,435 முறை தேடப்பட்டுள்ளது. இரண்டாவதாக சோபா என்ற வார்த்தை 20,000த்துக்கும் மேற்பட்ட தேடல்களை கொண்டுள்ளது. சோபா, பெட் போன்ற வார்த்தைகளை கூட விட்டுவிடலாம். மம்மி, பெட்ரோல் போன்ற வார்த்தைகளை யார் தேடியிருப்பார்கள்?
”யாரு சாமி நீ?” என்ற ரியாக்ஷனை கொடுக்க வைக்கிறது இந்த தேடல்கள்.
ஸ்விக்கியின் இன்ஸ்டாமார்ட்டில், உணவு, பீவரேஜ்கள், பழம் மற்றும் காய்கறிகள், பால் வகை பொருட்கள், ஹெல்த் கேர், பர்சனல் ஹைஜீன் சம்பந்தமான பொருட்கள் என பலவற்றையும் நாம் ஆர்டர் செய்து பெற்றுக்கொள்ளலாம்.
இதனால் தானோ என்னவோ இப்படியாக out of the box பொருட்களை தேடியுள்ளனர் மக்கள்!
இணையவாசிகள் பல நகைச்சுவையான கமெண்ட்களை பதிவிட்டு வருகின்றனர்.
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.
Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.
Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com
Follow us on:
Newssensetn : https://www.facebook.com/FullyNewsy
Nalam 360 : https://www.facebook.com/Nalam360
Newsnow: https://www.facebook.com/GenZSense
TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp
Hangout : https://www.facebook.com/TamilWanderlust