ஆர்டர் செய்தது ஐஸ்க்ரீம்...வந்தது ஆணுறை : இணையத்தில் வைரலாகும் ஸ்கிரீன்ஷாட்

பெரியசாமி என்பவர், ஸ்விக்கி மூலம் தனது குழந்தைகளுக்கு ஐஸ்கிரீம் ஆர்டர் செய்துள்ளார். ஸ்விக்கியிடமிருந்து டெலிவரியும் வந்தது.
Condom
CondomNewsSense
Published on

ஸ்விக்கி மூலம் தனது குழந்தைகளுக்கு ஐஸ்க்ரீம் ஆர்டர் செய்தவருக்கு, இரண்டு பாக்கெட் ஆணுறைகளை ஸ்விக்கி டெலிவரி செய்துள்ள சம்பவம் நிகழ்ந்துள்ளது.

ஆன்லைனில் உணவு அல்லது பொருட்கள் ஷாப்பிங் செய்பவர்களுக்கு, மாற்றி பொருட்கள் டெலிவரி செய்யப்படுவது வழக்கம் ஆகிவிட்டது. இதனை சம்பந்தப்பட்ட நிறுவனத்திற்குத் தெரிவிப்பது மட்டுமல்லாமல், உடனுக்குடன் மக்கள் சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து உலகிற்கும் தங்களது அனுபவங்களை அறியச் செய்கின்றனர்.

இங்கும் ஒரு நபருக்கு அப்படி ஒரு அனுபவம் கிடைத்துள்ளது. கோவையைச் சேர்ந்த பெரியசாமி என்பவர், ஸ்விக்கி மூலம் தனது குழந்தைகளுக்கு ஐஸ்க்ரீம் மற்றும் சிப்ஸ் ஆர்டர் செய்துள்ளார். ஸ்விக்கியிடமிருந்து டெலிவரியும் வந்தது.

ஆனால் பார்சலுக்குள் இருந்தது என்னவோ இரண்டு பாக்கெட் ஆணுறைகள்! இதனால் அதிர்ச்சியடைந்த பெரியசாமி, தன் டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்திருந்தார். சில மணி நேரத்திலேயே அந்த பதிவை அவர் நீக்கியிருந்தாலும், நெட்டிசன்கள் அதனை ஸ்க்ரீன்ஷாட் எடுத்து, சமூகவலைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர்.

Condom
ஆர்டர் செய்தது வாழைப்பழம், வந்தது 650 கோடி மதிப்பிலான கொக்கைன் - ரியல் ரோலெக்ஸ் கதை

ஒரு சிலரோ, தவறுதலாக ஐஸ்கிரீம் மற்றும் சிப்ஸ் பெற்றவர் குறித்து யோசித்துக் கொண்டிருப்பதாக கருத்து தெரிவித்தனர்.

இதற்கு முன்னர் ஃபிலிப்கார்ட்டில் மொபைல் ஃபோன் ஆர்டர் செய்தவருக்கு செங்கல் டெலிவரி செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

பெரியசாமியின் ட்வீட்டை பார்த்துவிட்டு நிகழ்ந்த இந்த தவறுக்காக வருந்துவதாக ஸ்விக்கி நிறுவனம் அவரிடம் மன்னிப்பு கேட்டிருந்தது. மேலும், தங்களது தரப்பிலிருந்து இந்த குழப்பம் உடனடியாக சரிப்பார்க்கபடும் எனவும் தெரிவித்திருந்தது. மேலும் பெரியசாமிக்கு பணத்தை Refund செய்துள்ளனர். பெரியசாமியின் அந்த ட்வீட் வைரலாகி வருகிறது.

Condom
ஆன்லைனில் விஸ்கி ஆர்டர் செய்த பெண்ணிடம் 5.35 லட்சம் மோசடி - என்ன நடந்தது?

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com