உலகிலேயே தூய்மையான காற்று இருக்கும் கிராமம் - Edge Of The World என அழைக்கப்படுவது ஏன்?

இந்த ஊரின் காற்றை பாட்டிலில் அடைத்து விற்பனை செய்கின்றனர். ஒரு பாட்டிலை வைத்து 160 முறை சுவாசிக்க முடியும். விலை என்ன தெரியுமா?
உலகிலேயே தூய்மையான காற்று இருக்கும் கிராமம் - Edge Of The World என அழைக்கப்படுவது ஏன்?
உலகிலேயே தூய்மையான காற்று இருக்கும் கிராமம் - Edge Of The World என அழைக்கப்படுவது ஏன்?Twitter

ஆஸ்திரேலியாவில் உள்ள ஒரு வியத்தகு சுற்றுலாத்தலம் உலகின் விளிம்பு, The Edge Of the World. கேப் கிரிப் எனும் இந்த தீபகற்ப பகுதிக்கு குறைவான சுற்றுலாப்பயணிகளே வருகின்றனர்.

இது தாஸ்மானியா தீவின் வடமேற்கில் அமைந்திருக்கிறது. இங்கு வந்தால் கறுப்பு மணல் இருக்கும் கடற்கரைகள், அதனை ஒட்டிய செங்குத்து மலை இறக்கங்கள், பண்ணைகள் அமைந்திருக்கும் மலை உச்சிகள் என பல இடங்களைப் பார்வையிடலாம்.

மொத்த உலகில் இருந்து தனித்து இருப்பதனால் இயற்கையழகு சேதமைடையாமல் இருக்கும் கேப் கிரிப், மிகவும் தூய்மையான காற்று இருக்கும் பகுதியாக திகழ்கிறது.

ஆம், உலகிலேயே சுத்தமான காற்றை சுவாசிக்க வேண்டும் என்றால் நாம் இங்கு செல்ல வேண்டும். இன்றைய காலக்கட்டத்தில் காற்றுமாசு மிகப் பெரிய பிரச்னையாக இருக்கிறது. வாகனங்களில் இருந்துவரும் புகை, தொழிற்சாலைகளில் இருந்துவரும் புகை எல்லாவற்றில் இருந்து விடுதலை கிடைக்கும் ஒரு பகுதி இருக்கிறதென்றால் அது உலகின் விளிம்புதான்.

இந்த பகுதியில் காற்று மாசை சோதிக்கும் நிலையம் ஒன்று உள்ளது. இதன் மூலம் தான் இது உலகின் தூய்மையான காற்று இருக்கும் பகுதி என்பதை நாம் அறிகிறோம்.

இந்த பகுதியில் உள்ள மலை உச்சிகளில் ஏறினால் அதிவேகத்தில் காற்றுவீசுவதை உணர முடியும். இங்கு மணிக்கு 180 கிலோமீட்டர் வேகத்தில் கூட காற்று வீசுமாம். இந்த காற்று எந்த இடையூறும் இல்லாமல், எதிலும் சேதமடையாமல், மாசுபடாமல் அண்டார்டிகாவில் இருந்து நேரடியாக வருகிறது.

பூமியின் தென்துருவத்தில் இருந்து புறப்படும் காற்று கேப் கிரிப்பை அடையும் வரை எந்த நிலப்பரப்பும் குறுக்கே இல்லாததால் உலகின் தூய்மையான காற்று மாதிரியை இங்கே காணலாம்.

அறிவியல் ஆய்வாளர்களும், சூழலியல் ஆர்வலர்களும் காற்றின் தரத்தை மேம்படுத்த கடுமையாக உழைத்து வருகின்றனர். ஏற்கெனவே கூறியது போல வாகன புகை, தொழிற்சாலை புகையை குறைப்பதன் மூலம் மோசமான நிலையில் இருக்கும் நம் வளிமண்டலத்தை பலப்படுத்த முயற்சிகளை மேற்கொள்கின்றனர்.

உதாரணமாக பொதுப்போக்குவரத்தை அதிகரிக்க நம் அரசுகள் கூட நடவடிக்கை எடுப்பதைப் பார்த்து வருகிறோம்.

உலகிலேயே தூய்மையான காற்று இருக்கும் கிராமம் - Edge Of The World என அழைக்கப்படுவது ஏன்?
இந்தூர் : இந்தியாவின் சுத்தமான நகரமாக இருப்பதன் ரகசியம் என்ன?

தூய்மையான காற்று சுற்றுசூழலைக் காப்பதுடன், மனிதர்களின் உடல் நலத்தையும் பாதுகாக்கிறது. இந்த ஊரின் காற்று மிகத் தூய்மையானதாக இருப்பதனால் பாட்டிலில் விற்பனை செய்யப்படுகிறது. ஒரு பாட்டில் வாங்கினால் நம்மால் 160 முறை சுவாசிக்க முடியும். இதன் விலை கிட்டத்தட்ட 1500 ரூபாய்!

உலகிலேயே தூய்மையான காற்று இருக்கும் கிராமம் - Edge Of The World என அழைக்கப்படுவது ஏன்?
Apple Wonderlust: ஐபோன் 15 லான்ச் ஈவன்டின் 5 முக்கிய அறிவிப்புகள் என்ன?

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com