மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் 2022-23-ம் நிதி ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை இன்று தாக்கல் செய்தார். கோவிட் தொற்றால் ஏற்பட்ட சரிவிலிருந்து மீண்டு வர இந்த பட்ஜெட் வழிவகுக்கும் எனக் கூறியுள்ளார்.
குடை, போலி நகைகள், ஒன்று அல்லது பல ஒலிபெருக்கிகள், ஹெட்ஃபோன்கள் மற்றும் இயர்போன்கள், சோலார் மின்கலங்கள், எக்ஸ்ரே இயந்திரங்கள், மின்னணு பொம்மைகளின் பாகங்கள்.
ஆடைகள், ரத்தினக் கற்கள் மற்றும் வைரங்கள், மொபைல், போன்களுக்கான கேமரா லென்ஸ், மொபைல் போன் சார்ஜர்கள், Frozen mussels, Frozen squids, பெருங்காயம், கோகோ பீன்ஸ், மெத்தில் ஆல்கஹால், அசிட்டிக் அமிலம், பெட்ரோலியப் பொருள்களுக்குத் தேவையான இரசாயனங்கள், எஃகு ஸ்கிராப் போன்றவை
பிட்காயின், எதீரியம் உள்ளிட்ட கிரிப்டோகரன்சிகளிலிருந்து கிடைக்கும் லாபத்திற்கு இனி வரும் நிதியாண்டு முதல் 30% வரி விதிக்கப்படும். மேலும், ஒவ்வொருமுறை கிரிப்டோவில் முதலீடு செய்யும்போதும், பரிவர்த்தனை செய்யும்போதும், அதை அரசாங்கம் அறிந்துகொள்ளும் வகையில் 1% TDS பிடித்தம் செய்யப்படும். என மத்திய அரசு அறிவித்திருக்கிறது.
2022-23-ம் நிதி ஆண்டில் இந்தியாவின் டிஜிட்டல் கரன்சி வெளியிடப்படுகிறது. இது பிளாக்செயின் தொழில்நுட்பத்தில் செயல்படும். ரிசர்வ் வங்கி வெளியிடவுள்ள இந்த கரன்சி வர்த்தகத்துக்கான, புதிய விதிமுறைகளும் உருவாக்கப்படும்." - நிர்மலா சீதாராமன்
ட்ரோன் மூலம் விவசாய நிலங்களை அளப்பது மற்றும் விளைச்சல்களைக் கணிப்பது போன்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். விவசாயம், பாதுகாப்பு, ஆராய்ச்சி எனப் பல துறைகளில் பயன்பட்டுக்கொண்டிருக்கும் ட்ரோன்களுக்கு (Drones) இந்த பட்ஜெட்டில் முதல்முறையாக முக்கியத்துவம் அளித்திருக்கிறது அரசு.
நில ஆவணங்களை மின்னணு முறையில் ஆவணப்படுத்த `ஒரே நாடு; ஒரே பதிவு முறை' என்கிற திட்டம் நடைமுறைப் படுத்தப்படும். இதன் மூலம் நாட்டின் எந்த இடத்தில் இருந்தும் பத்திரங்களைப் பதிவு செய்ய முடியும்.
எலெக்ட்ரிக் வாகனங்களின் பேட்டரி தீர்ந்துவிட்டால், அதற்குப் பல மணி நேரங்கள் சார்ஜ் போட்டபிறகே மீண்டும் பயன்படுத்த முடியும். இந்த சிக்கலைத் தீர்க்க வந்ததுதான் Battery Swapping நடைமுறை. இதற்காக பேட்டரியை மாற்றிக்கொள்ளும் பிரத்யேக மையங்கள் நாடெங்கிலும் தொடங்கப்படும்.
தமிழக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன், ``மூலதனச் செலவினங்களை அதிகமாக ஒதுக்கியிருப்பதால் நாட்டில் வேலைவாய்ப்புகள் பெருகும், வருவாய் கூடும் என்றெல்லாம் சொல்லமுடியாது. ஏனெனில் அந்த தொகையில் பெரும்பகுதியை இவர்கள், ஏதேனும் ஒரு அரசு நிறுவனத்தின் கடனை அடைக்கத்தான் செலவிடுகிறார்கள். மேலும், `ஒரே நாடு; ஒரே பதிவு’ என்ற திட்டத்தையும் இந்த மத்திய அரசால் நிச்சயம் செயல்படுத்த முடியாது; பத்திரப்பதிவு விவகாரங்களில் அவ்வளவு சிக்கல்கள் இருக்கின்றன. அதனை மத்திய அரசு சரிசெய்யவே முடியாது.” என விமர்சித்திருக்கிறார்.
`மோடி அரசின் ஜீரோ பட்ஜெட்டில், மாத சம்பளதாரர், நடுத்தர மக்கள், ஏழைகள், வறுமைக்கோட்டுக்குக் கீழ் இருப்பவர்கள், இளைஞர்கள், விவசாயிகள், சிறு, குறு நிறுவனங்கள் என யாருக்கும் ஒன்றுமில்லை' என ராகுல் காந்தி விமர்சனம் செய்திருந்தார்.
அதற்குப் பதிலளிக்கும் வகையில், ``கொரோனா காலத்தில் ஒரு ரூபாய் வரியைக்கூட உயர்த்தவில்லை. வேளாண்துறைக்கான கடனுதவித் திட்டங்கள் அதிகரிக்கப்பட்டிருக்கின்றன. வரி விதிப்பு மத்திய அரசின் நோக்கம் இல்லை. அனைத்துத் துறைகளின் வளர்ச்சியைக் கருத்தில்கொண்டு திட்டங்கள் வகுக்கப்பட்டிருக்கின்றன" என்றார் நிதியமைச்சர்.
மேலும், ``பட்ஜெட் தொடர்பான விமர்சனங்களை ஏற்கிறோம். ஆனால், சொந்த வேலையையே செய்யத் தெரியாத ஒருவரின் விமர்சனத்தை ஏற்றுக்கொள்ள மாட்டேன். பட்ஜெட்டைப் பற்றி முதலில் புரிந்துகொள்ள வேண்டும். மத்திய பட்ஜெட்டை `ஜீரோ பட்ஜெட்' என ராகுல் காந்தி கூறியிருப்பது பொறுப்பற்ற விமர்சனம்" எனவும் கூறினார்.
தலைநகரம் 2 உட்பட பல படங்களில் நடித்து வரும் சுந்தர்.சி, ஒரு மல்டி ஸ்டாரர் திரைப்படத்தை இயக்கவுள்ளார். நடிகர்கள் ஜீவா, ஜெய், ஸ்ரீகாந்த் ஆகியோர் இதில் நடிக்கின்றனர். நாயகிகளாக மாளவிகா சர்மா, அம்ரிதா, ஐஸ்வர்யா தத்தா ஆகியோர் நடிக்க இருக்கிறார்கள். சுந்தர் சி இயக்கத்தில் வெளிவந்த அரண்மனை சீரிசை தயாரித்த குஷ்புவின் அவ்னி சினி மேக்ஸ் இந்தத் திரைப்படத்தைத் தயாரிக்கிறது. சுந்தர் சி-யின் பிற படங்களைப் போல இதுவும் ரொமான்டிக் காமெடியாகத் தயாராகிறது. நகைச்சுவைக்கு முக்கியம் தந்து இந்தப் படத்தை இயக்கவுள்ளார்.
ஜெய் நடிப்பில் எண்ணித்துணிக திரைப்படமும், ஸ்ரீகாந்த் நடிப்பில் தி பெட் என்ற திரைப்படமும் வெளியீட்டுக்குத் தயாராக உள்ளன. ஜீவா தனது தந்தை ஆர்பி சௌத்ரி தயாரிப்பில் சூப்பர் குட் பிலிம்ஸ் தயாரித்து வரும் வரலாறு முக்கியம் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இதற்கு முன் ஜீவா, ஜெய் இருவரும் சுந்தர் சி-யின் கலகலப்பு 2 திரைப்படத்தில் நடித்திருந்தனர். ஸ்ரீகாந்த் சுந்தர் சி இயக்கத்தில் நடிப்பது இதுவே முதல் முறை.