மணாலி- லடாக்- ஸ்ரீநகர்: 3,200 கி.மீ மலையேற்றம் செய்ய வேலையை விட்ட தம்பதி - என்ன காரணம்?

நிகில் மற்றும் பரிதி என்ற தம்பதி இதற்காக தங்களின் கார்ப்பரேட் வேலையை விட்டுவிட்டு கடந்த ஆண்டு ஜூலை மாதம் இந்த பயணத்தை தொடங்கியுள்ளனர்.
MP couple
MP couple Twitter
Published on

மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த தம்பதியினர், சுற்றுச்சூழல் பிரச்னைகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக மணாலியில் இருந்து ஸ்ரீநகருக்கு 3,200 கி.மீ பயணம் செய்துள்ளனர்.

நிகில் மற்றும் பரிதி என்ற தம்பதி இதற்காக தங்களின் கார்ப்பரேட் வேலையை விட்டுவிட்டு கடந்த ஆண்டு ஜூலை மாதம் இந்த பயணத்தை தொடங்கியுள்ளனர்.

ஆனால் குடும்பத்தில் நடந்த திருமணம், லடாக்கில் நிலவிய கடும் குளிர் போன்ற காரணங்களால் அவர்களின் பயணம் தற்காலிகமாக தடைப்பட்டது. எனினும் அதிக உற்சாகத்துடன், இந்த மார்ச் மாதம் லடாக்கிற்குத் திரும்பி, தங்கள் டிரெக்கிங்கை அந்த தம்பதியினர் மீண்டும் தொடங்கினர்.

Ladakh
LadakhTwitter

மணாலி - ஸ்ரீநகர்

மணாலியில் இருந்து ஸ்ரீநகர் வரை லடாக் வழியாக கிட்டத்தட்ட 3,200 கிலோமீட்டர் தூரத்தை நடந்தே செல்ல தம்பதியினர் முடிவு செய்தனர்.

சுற்றுச்சூழல் பற்றியும் அதைப் பாதுகாப்பதன் அவசியம் பற்றியும் விழிப்புணர்வை ஏற்படுத்த விரும்பி இந்த பயணத்தை மேற்கொண்டதாக தம்பதியினர் தெரிவித்தனர்.

19 மலைப்பாதைகள் வழியாக ஸ்ரீநகரின் லால் சௌக்கை அடைய சுமார் 3,200 கி.மீ. மலையேற்றம் செய்ததாகவும் அவர்கள் தெரிவித்தனர்.

மலையேற்றத்தின் போது, ஒரு கிராமத்தை விட்டு வெளியேறும் போதெல்லாம் ஒரு மரத்தை நடுவதாக அவர்கள் தெரிவித்தனர்.

இந்த பயணத்தை "அவர்கள் வாழ்க்கையின் மிக அழகான கதை" என்று விவரிக்கின்றனர் அந்த தம்பதியினர் .

MP couple
பெங்களூர் : லைட், மின்கட்டணம் இல்ல; இயற்கையோடு இயைந்த வீடு - அசத்தும் தம்பதி

இது குறித்து பரிதி கூறுகையில்,

பேருந்தில் மணாலியை அடைந்து அங்கிருந்து நடக்க ஆரம்பித்தோம். ஐந்து பள்ளத்தாக்குகளை இந்த மணாலி முதல் லே வரையான பயணத்தில் கடந்தோம்

லேவிலிருந்து, கல்சார், சியாச்சின், ஹண்டர் மற்றும் டுர்டுக் வரை அனைத்தையும் கடந்து சென்றோம்.

மலையேற்றத்தில் பனிச்சிறுத்தைகளை காண முடிந்தது. நிலச்சரிவுகள் மற்றும் கடினமான பாதைகள் கடப்பது என சில சவால்களை எதிர்கொண்டோம் என்றனர்.

இவர்களின் இந்த பயணத்தை எப்படி பார்க்கிறீர்கள்?

MP couple
Travel : வீட்டை விற்று கப்பலிலேயே வாழும் வயதான தம்பதி - எப்படி சாத்தியம்?

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com