இந்தியாவின் மிகப்பெரிய வணிக வங்கியின் பிராண்ட் அம்பாசிடர் ஆன தோனி - என்ன பேங்க் தெரியுமா?

கடந்த காலங்களில், பல வங்கிகள் கிரிக்கெட் வீரர்களை பிராண்ட் அம்பாசிடர்களாக சேர்த்துள்ளன. ராகுல் டிராவிட் பேங்க் ஆஃப் பரோடாவின் பிராண்ட் தூதராக பல ஆண்டுகள் பணியாற்றினார், அதே நேரத்தில் எச்எஸ்பிசி விராட் கோலியை இணைத்துக் கொண்டது.
Ms dhoni
Ms dhoni Twitter
Published on

பாரத ஸ்டேட் வங்கி (SBI) மகேந்திர சிங் தோனியை வங்கியின் அதிகாரப்பூர்வ பிராண்ட் தூதராக நியமித்துள்ளது.

எஸ்பிஐயின் பிராண்ட் அம்பாசிடராக தோனி விளம்பர பிரச்சாரங்களில் முக்கிய பங்கு வகிப்பார் என்று வங்கி ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.

எஸ்பிஐயின் தலைவர் தினேஷ் காரா கூறுகையில், "எஸ்பிஐயின் பிராண்ட் அம்பாசிடராக எம்எஸ் தோனியை வரவழைப்பதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம்"

SBI
SBITwitter

"இந்த கூட்டாண்மை மூலம், நாட்டிற்கும் எங்கள் வாடிக்கையாளர்களுக்கும் சேவை செய்வதற்கான எங்கள் உறுதிப்பாட்டை வலுப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளோம்.

எஸ்பிஐயின் பிராண்ட் தூதராக, எம்எஸ் தோனி மார்கெட்டிங் மற்றும் விளம்பர பிரச்சாரங்களில் முக்கிய பங்கு வகிப்பார்" என்றார்.

இக்கட்டான சூழ்நிலைகளில் அமைதியைக் காக்கும் அவரது திறன், தெளிவான சிந்தனை மற்றும் நிர்ப்பந்தத்தின் கீழ் விரைவான முடிவெடுக்கும் ஆற்றல் ஆகியவை எஸ்பிஐயுடன் எதிரொலிக்கும் என்று வங்கி தெரிவித்துள்ளது.

Ms dhoni
Bank locker rules : வங்கி லாக்கரில் எதையெல்லாம் வைக்கலாம்? புதிய விதிகள் என்னென்ன?
விராட் கோலி
விராட் கோலிடிவிட்டர்

கடந்த காலங்களில், பல வங்கிகள் கிரிக்கெட் வீரர்களை பிராண்ட் அம்பாசிடர்களாக சேர்த்துள்ளன. ராகுல் டிராவிட் பேங்க் ஆஃப் பரோடாவின் பிராண்ட் தூதராக பல ஆண்டுகள் பணியாற்றினார், அதே நேரத்தில் எச்எஸ்பிசி விராட் கோலியை இணைத்துக் கொண்டது.

பெண்கள் கிரிக்கெட் வீரர்களில், ஸ்மிருதி மந்தனா ஈக்விடாஸ் ஸ்மால் ஃபைனான்ஸ் வங்கியின் பிராண்ட் தூதராக உள்ளார் என்பதும் குறிப்படத்தக்கது.

Ms dhoni
silicon valley bank: திவாலான வங்கி, சரியும் பொருளாதாரம் - என்ன சொல்கிறார் அதிபர் ஜோ பைடன்?

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com