Ratan Tata - Indian Billionaires Throwback pics
Ratan Tata - Indian Billionaires Throwback picsTwitter

ரத்தன் டாடா டு அம்பானி : இந்திய பில்லியனர்களின் இளம் வயது புகைப்படங்கள் - Throwback pics

தற்போது வணிகத்திலும் வயதில் அனுபவமிக்கவர்களாக இருக்கும் பில்லியனர்கள் ஒரு காலத்தில் எப்படி இருந்தார்கள் தெரியுமா?

ஏப்ரல் 2022 நிலவரப்படி, இந்தியாவில் 166 பில்லியனர்கள் உள்ளனர். அவர்களில் பலர் இளம் தொழில்முனைவோர்களாக உள்ளனர். இந்திய கோடீஸ்வரர்களான முகேஷ் அம்பானி, ரத்தன் டாடா பற்றி நாம் கேள்விப்பட்டிருக்கிறோம்.

தற்போது வணிகத்திலும் வயதில் அனுபவமிக்கவர்களாக இருக்கும் பில்லியனர்கள் ஒரு காலத்தில் எப்படி இருந்தார்கள் தெரியுமா? இணையத்தில் வைரலாகி வரும் இந்திய பில்லியனர்களின் இளமை லுக்ஸ்

1. Anand Mahindra

இந்தியாவின் பிரபல தொழில் அதிபர்களில் ஒருவரும் மஹிந்திரா குழுமத்தின் தலைவருமான ஆனந்த் மஹிந்திரா, சமூக வலைதளங்களில் எப்போதும் ஆக்டிவாக இருப்பர்.

இவர் நாட்டில் உள்ள தொழில்நுட்பம் சார்ந்த விஷயங்கள், ஸ்மார்ட்டாக செயல்படும் நபர்களின் வீடியோக்களை சமூக வலைதளங்களில் பதிவிடுவதை வாடிக்கையாக வைத்துள்ளார். மேலும் 9.8 மில்லியன் மக்கள் இவரை பின் தொடர்கிறார்கள்.

நவம்பர் 2021 இல், தனக்கு 17 வயதாக இருந்தபோது என டிவிட்டரில் ஒரு த்ரோபேக் படத்தைப் பகிர்ந்திருந்தார் ஆனந்த் மஹிந்திரா.

2. Kumar Mangalam Birla

இந்தியாவின் முன்னணி வணிகக் குடும்பங்களில் ஒன்று பிர்லா குழுமம். தற்போது பிர்லா குழும நிறுவனங்களின் தலைவராக குமார் மங்கலம் பிர்லா உள்ளார்.

இவர் ரிசர்வ் வங்கி இயக்குநர் குழுவில் உறுப்பினராகவும் செபியின் நிறுவனங்களை நிர்வகிக்கும் குழுவிலும் உறுப்பினராக இருந்துள்ளார்.

வணிகம் தொடர்பான ஆலோசனைகளைப் பிரதமருக்கு வழங்கும் குழுவிலும் இடம் பெற்றார்.

3. Gautam Adani

அதானி குழுமத்தின் தலைவரான கௌதம் அதானி, 10 அக்டோபர் 2022 நிலவரப்படி, Forbes இன் படி, $150 பில்லியன் நிகர மதிப்புடன் ஆசியாவின் பணக்காரராக உள்ளார்.

அதானி விமான நிலையங்கள் முதல் துறைமுகங்கள் என அவரின் தொழிற்துறைகள் நீளும்.

அதானி நிறுவனம் இந்தியாவில் அதானி எண்டர்பிரைசஸ், அதானி கிரீன் எனர்ஜி மற்றும் அதானி பவர் உட்பட ஆறு பொது வர்த்தக நிறுவனங்களைக் கொண்டுள்ளது.

Ratan Tata - Indian Billionaires Throwback pics
Gautam Adani : உலகின் 2வது பணக்காரர் ஆனார் அதானி - எவ்வளவு சொத்து மதிப்பு தெரியுமா?

4. Ratan Tata

ரத்தன் டாடா இந்தியாவின் விருப்பமான தொழிலதிபர்களில் ஒருவராக மாறிவிட்டார். இவர் மீது வீசப்பட்ட ஒவ்வொரு கற்களும் இன்று வைரமாய், தொழிற்துறையில் ஜொலித்துக் கொண்டிருக்கிறது.

டாடா ஸ்டீல், டாடா மோட்டார்ஸ், டாடா பவர், டாடா கன்சல்டன்சி சர்வீசஸ், டாடா தேனீர், டாடா கெமிக்கல்ஸ், தி இந்தியன் ஹோட்டல்ஸ் கம்பெனி ஆகிய பெரும் டாடா நிறுவனங்களுக்கும் தலைவராக பொறுப்பேற்று உள்ளார்.

Ratan Tata - Indian Billionaires Throwback pics
டாடா குழுமம் உருவாக்கிய இந்திய குடியரசுத் தலைவர்- ஒரு வரலாற்றுப் பதிவு

5. Mukesh Ambani

உலக பணக்காரர்களில் ஒருவரும், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் தலைவருமாவார் முகேஷ் அம்பானி.

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் முதலில் நெசவு தொழிலிருந்து பாலியஸ்டர் இழைகள் உற்பத்தியை தொடங்கியது. பின்னர், பெட்ரோ கெமிக்கல், பெட்ரோலிய சுத்திகரிப்பு, எண்ணெய் மற்றும் எரிவாயு ஆராய்ச்சி என தொடர்ந்து அவர்களின் தொழிற்துறை விரிவடைந்தது.

Ratan Tata - Indian Billionaires Throwback pics
ரிலையன்ஸ் ஜியோ தலைவரான ஆகாஷ் அம்பானி : யார் இந்த 90'ஸ் கிட்? - முழுமையான தகவல்

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

logo
Newssense
newssense.vikatan.com