மும்பையின் ஹீரோ! பலரை தற்கொலையிலிருந்து காப்பாற்றிய நபர் : உயிரிழந்தது எப்படி?

சம்பவத்தன்று சேத்தன், வழக்கம் போல் இரவுப் பணியில் இருந்தார். அக்டோபர் 5ஆம் தேதி அதிகாலை 2.40 மணியளவில், கார் ஒன்று டயர் வெடித்து கடல் இணைப்பில் உள்ள தண்டவாளத்தில் மோதி விபத்துக்குள்ளானது.
Chetan Kadam
Chetan KadamTwitter

பலரின் தற்கொலையை தடுத்து அவர்களின் வாழ்வை மாற்றிய மும்பை சேர்ந்த நபர் ஒரு கார் விபத்தில் உயிரிழந்துள்ளார்.

36 வயதான சேத்தன் கதம், விபத்தில் பாதிக்கப்பட்ட ஒருவருக்கு உதவி செய்வதாக தனது மனைவிக்கு தெரிவித்திருந்தார். அதுதான் கடைசியாக அவரது மனைவியிடம் அவர் பேசியது.

டோல் பிளாசாவில் பணிபுரியும் சேத்தன், Bandra-Worli கடற்கரை இணைப்பில் பலரின் உயிரை காப்பாற்றியுள்ளார்.

சம்பவத்தன்று சேத்தன், வழக்கம் போல் இரவுப் பணியில் இருந்தார். அக்டோபர் 5ஆம் தேதி அதிகாலை 2.40 மணியளவில், கார் ஒன்று டயர் வெடித்து கடல் இணைப்பில் உள்ள தண்டவாளத்தில் மோதி விபத்துக்குள்ளானது.

Chetan Kadam
உலகை உலுக்கிய ஒரு வழக்கு : 23 ஆண்டுகள் சிறை வைக்கப்பட்ட சையத் - சினிமாவை விஞ்சும் நிஜ கதை

சேத்தனும் அவரது நான்கு சக ஊழியர்களும் உடனடியாக காரில் பயணித்தவர்களை காப்பாற்ற சென்றனர்.

அப்போது அதிவேகமாக வந்த ஹூண்டாய் க்ரெட்டா கார் மீட்புப் பணியில் ஈடுபட்டிருந்தவர்கள் மீது மோதியது.

இந்த விபத்தில் சேத்தன் உட்பட 5 பேர் உயிரிழந்தனர். ஆம்புலன்ஸ் டிரைவர் சோம்நாத் சால்வே (29), சுங்கச்சாவடி ஊழியர்கள் கஜ்ராஜ் சிங் (42), சத்யேந்திர சிங் (35) மற்றும் ராஜேந்திர சிங்கால் (40) ஆகியோர் மற்ற 4 பேர்.

Accident
Accident Twitter

விபத்தை ஏற்படுத்திய ஓட்டுநர், பீல்கியா, காவல்துறையால் கைது செய்யப்பட்டுள்ளார்.

விபத்து ஏற்பட்டபோது அவர் மதுபோதையில் இருந்ததாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

சேத்தனின் உதவி மனபான்மை

2009 ஆம் ஆண்டு கடல் இணைப்பு திறக்கப்பட்டதில் இருந்து சேத்தன் கதம் பல உதவி மற்றும் மீட்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளார்.

2016 ஆம் ஆண்டில், கடல் இணைப்பின் குதிக்க முயன்ற ஒரு நபரை சேத்தன் காப்பாற்றும் வீடியோ வைரலானது குறிப்பிடத்தக்கது.

சேத்தனின் மனைவி செத்தலி :

"அவர் எப்பொழுதும் தனது பணிக்கே முன்னுரிமை கொடுத்தார். நீச்சல் தெரியாத போதும் மக்களை காப்பாற்றினார்."

அவர் கடைசியாக தன்னிடம் பேசும் போது ஒரு விபத்து நடந்ததாகவும், அவர்களுக்கு உதவுவதாகவும் கூறினார்.

Chetan Kadam
காணாமல் போன மனைவியை 11 ஆண்டுகளாக தேடி வரும் கணவர் - ஒரு நெகிழ்ச்சி கதை

சேத்தினின் சக ஊழியரான விவேக் சாவந்த் கூறுகையில்

"நானும் சேத்தனும் சேர்ந்து பலரைக் காப்பாற்றியுள்ளோம். மக்களுக்கு உதவுங்கள் என்பார்.

கடல் இணைப்பில் நெருக்கடி ஏற்படும் போதெல்லாம், பணியில் இல்லாவிட்டாலும் சேத்தன் விரைந்து உதவுவார்" என அவர் தெரிவித்தார்.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com