வெங்கடேசப் பெருமானின் தீவிர பக்தர்களான சென்னையைச் சேர்ந்த முஸ்லீம் குடும்பத்தினர் திருமலை திருப்பதி தேவஸ்தானத்திற்கு ரூ.1.02 கோடி நன்கொடை அளித்துள்ளனர்.
அப்துல் கனி மற்றும் அவரது மனைவி சுபீனா பானு வெங்கடேஸ்வர பகவான் மீது நம்பிக்கையைக் கொண்டுள்ளனர்.
திருமலையில் செய்யப்படும் சேவைகளால் ஈர்க்கப்பட்ட தம்பதியினர், திருப்பதி கோவிலுக்கு நன்கொடை வழங்க முடிவு செய்ததாகத் தேவஸ்தான வட்டாரங்கள் தெரிவித்தன.
மொத்த நன்கொடையில், 15 லட்சம் திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் ஸ்ரீ வெங்கடேஸ்வரா நித்யா-அன்னபிரசாதம் அறக்கட்டளைக்கு நன்கொடையாக வழங்கப்பட்டுள்ளது.
குடும்பத்தாரிடம் இருந்து காசோலையை நன்கொடையாகப் பெற்றுக் கொண்ட தேவஸ்தான அதிகாரிகள் நன்றி தெரிவித்தனர்.
பின்னர் கோவில் பிரசாதங்கள் அப்துல் கனி மற்றும் அவரது குடும்பத்தினருக்கு வழங்கப்பட்டது.
இதற்கிடையில், நேற்று சுமார் 67,276 பக்தர்கள் திருமலை கோவிலில் வெங்கடேசப் பெருமானை பிரார்த்தனை செய்தனர். ரூ. 5.71 கோடி உண்டியல் வருமானம் கிடைத்தது குறிப்பிடத்தக்கது.
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.
Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.
Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com
Follow us on:
Newssensetn : https://www.facebook.com/FullyNewsy
Nalam 360 : https://www.facebook.com/Nalam360
Newsnow: https://www.facebook.com/GenZSense
TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp
Hangout : https://www.facebook.com/TamilWanderlust