Babiya: இறந்த கோவில் முதலைக்கு இறுதி அஞ்சலி செலுத்திய ஊர் மக்கள்

சுமார் 70 ஆண்டு காலமாக அந்த முதலை அனந்தபுரா கோவிலில் வாழ்ந்து வந்தது.
பபியா முதலை
பபியா முதலைடிவிட்டர்
Published on

கேரளாவின் காசர்கோடு பகுதியில் இறந்த முதலைக்கு அந்த ஊர் மக்கள் இறுதி அஞ்சலி செலுத்தியுள்ளனர்.

கேரள மாநிலம் காசர்கோடு அனந்தபுர பத்மநாப சுவாமி கோவிலில் உள்ள குளத்தில் பபியா என்ற முதலை வளர்ந்து வந்துள்ளது. கடந்த சில நாட்களாக பபியாவுக்கு உடல் நலம் சரியில்லை என தெரிகிறது. மங்களூரு பிலிகுலா உயிரியல் பூங்காவின் கால்நடை மருத்துவர்களின் மேற்பார்வையில் அந்த முதலைக்கு சிகிச்சையளிக்கப்பட்டது.

சுமார் 70 ஆண்டு காலமாக அந்த முதலை அனந்தபுரா கோவிலில் வாழ்ந்து வந்தது. கோவிலின் அனைத்து இடங்களுக்கும் முதலை வந்து செல்லும் எனக் கூறிய அப்பகுதியினர், இது வரை யாரையும் தாக்கியதில்லை என தெரிவித்தனர். இத்தனை ஆண்டுகளாகவும் அந்த முதலை கோவில் பிரசாதத்தை மட்டுமே உண்டு உயிர் வாழ்ந்ததாக தெரிவித்தனர்.

இந்நிலையில், நேற்று அந்த முதலை உயிரிழந்துள்ளது. கோவில் நிர்வாகி உதயகுமார் கூறுகையில், "இரண்டு நாட்களாக பபியா உணவு கேட்டு வரவில்லை. இரண்டு நாட்களாக முதலையை தேடும் பணியில் ஈடுபட்டிருந்தோம். ஆனால் கண்டுபிடிக்க முடியவில்லை. கடைசியில், ஞாயிற்றுக் கிழமை இரவு குளத்தில் பபியா இறந்து கிடந்ததை பார்த்தோம்" என தெரிவித்தார்.

நீண்ட நாட்களாக உடல நலமில்லாமல் பாதிக்கப்பட்டு வந்த அந்த முதலை நேற்று உயிரிழந்துள்ளது. இதனால், ஊர் மக்கள் அனைவரும் கூடி அந்த முதலைக்கு இறுதி அஞ்சலி செலுத்தினர். ஆயிரம் பேருக்கு மேல் இந்த இறுதி அஞ்சலியில் கலந்துகொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

பபியா முதலை
முதலையை திருமணம் செய்து கொண்ட மேயர் - வைரலாகும் புகைப்படம்

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com