முதலையை திருமணம் செய்து கொண்ட மேயர் - வைரலாகும் புகைப்படம்

மெக்சிகோவிலுள்ள ஒரு நகரத்தின் மேயர் முதலையை திருமணம் செய்துகொண்டுள்ள சம்பவம் ஒன்று நிகழ்ந்துள்ளது. மேலும், அவர் அந்த முதலைக்கு கிறிஸ்தவ திருமணங்களில் வரும் முத்தமிடும் சம்பிரதாயத்தையும் நிறைவேற்றியுள்ளார்.
Alligator
AlligatorPexels
Published on

மெக்சிகோவின் சான் பெட்ரோ ஹுவாமெலுலா என்ற நகரத்தின் மேயர் விக்டர் ஹ்யூகோ சோஸா. இவர் கடந்த வியாழனன்று ஒரு பெண் முதலையை நகரவாசிகள் முன்னிலையில் திருமணம் செய்துகொண்டார். பாரம்பரிய இசை, நடனம் மற்றும் எல்லா விதமான சம்பிரதாயங்களையும் கடைபிடித்து இந்த திருமணம் நிகழ்ந்துள்ளது.

வழக்கமாக கிறிஸ்தவ திருமணங்களில் கடைப்பிடிக்கப்படும் சடங்குகளில் ஒன்றான முத்தமிடும் நிகழ்வும் நடந்தேறியுள்ளது. முன்னெச்சரிக்கையாக முதலையின் வாயை கட்டியப் பின்னரே முத்தமிட்டார் மேயர்.

Alligator
பொம்மையை திருமணம் செய்து கொண்ட அதிசய பெண் - குழந்தை பிறந்ததுள்ளதாக நெகிழ்ச்சி

முதலையை திருமணம் செய்துகொள்வது பல நூற்றாண்டுகளுக்கு முன், ஓக்ஸாகா மாநிலத்தின் சோண்டல் மற்றும் ஹூவே பழங்குடி சமூகங்களிடையே கடைபிடிக்கப்பட்ட ஒரு சடங்கு. இயற்கையின் வளங்களைப் போற்றி, அவை தங்களுக்குக் கிடைக்க வேண்டும் ஒரு நிகழ்வு தான் இந்த சம்பிரதாயம்.


இயற்கையிடம் தேவையான உணவு, தண்ணீர் வேண்டியும், பசிஃபிக் கடற்கரையில் அமைந்துள்ள அவர்களது ஊருக்கு மீன் வளமும் வேண்டி இந்த திருமணம் நடைபெற்றது. இந்த ஓக்ஸாகா என்ற இடத்தில் தான் அதிகமாக பழங்குடி மக்கள் வாழ்கின்றனர். தங்களது கலாச்சாரத்தையும், மொழியையும் மாறிவரும் சூழல்களில் விட்டுக்கொடுத்துவிடாமல் கடைப்பிடித்து வருகின்றனர்.

Alligator
15000 ஆடுகளுடன் கடலில் மூழ்கிய கப்பல் : என்ன, எங்கே, எப்போது நடந்தது? - விரிவான தகவல்கள்

லிட்டில் பிரின்சஸ் என்றழைக்கப்படும் இந்த முதலை, அவர்களின் வழக்கப்படி, பூமியின் பிரதிநிதியாக கருதப்படுகிறது. மேயர் சோஸா திருமணம் செய்துகொண்ட முதலையை, மணப்பெண்ணைப் போல வெள்ளை நிற ஆடையால் அலங்கரித்திருந்தனர்.

இத்திருமண சடங்கை முன்னின்று நடத்திய அந்த சமூகத்தின் தலைவர், ஈலியா எடித் ஆகிலார், முதலைக்கு திருமணத்திற்கு எந்த உடையை அணிவித்து அழைத்து வர வேண்டும் என்று பெருங்குழப்பம் அடைந்ததாக தெரிவித்தார்.

மேலும், தனது தலைமையில் இந்த திருமணம் நடப்பது தனக்கு அளவு கடந்த மகிழ்ச்சியை அளிப்பதாகவும் கூறினார் ஈலியா.

பாரம்பரிய வாத்தியங்கள் முழங்க அந்த முதலையை ஊர் மக்கள் எடுத்துவர, அவர்கள் அனைவரின் முன்னிலையில் திருமணம் நடந்தது. திருமணம் முடிந்த பின் மேயர் சோஸா தனது முதலை மனைவிக்கு முத்தமிடும் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Alligator
பொம்மையை திருமணம் செய்து கொண்ட அதிசய பெண் - குழந்தை பிறந்ததுள்ளதாக நெகிழ்ச்சி

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com