இந்தியா போன்ற பன்முகத்தன்மை கொண்ட நாட்டில், வேற்றுமையில் ஒற்றுமையைக் குறிக்கும் பல அடையாளங்களும் இடங்களும் உள்ளன. அந்த வகையில் நவாபூர் ரயில் நிலையம், குஜராத் மற்றும் மகாராஷ்டிரா ஆகிய இரண்டு மாநிலங்களின் எல்லையில் அமைந்திருப்பதால், தனித்துவமான வேறுபாட்டைக் கொண்டுள்ளது.
இந்த ரயில் நிலையம் 2 மாநில பயணிகளை இணைப்பது மட்டுமின்றி பல்வேறு கலாச்சாரங்களின் இணக்கமான சகவாழ்வை வெளிப்படுத்துகிறது.
நவாபூர் நகரில் அமைந்துள்ள இந்த ரயில் நிலையம் 2 மாநிலங்களின் எல்லையில் அமைந்துள்ளது. குஜராத் மற்றும் மகாராஷ்டிரா மாநில மக்கள் அணுகக்கூடியதாக உள்ளது.
இந்தியாவின் மேற்கு ரயில்வே மண்டலத்தால் நிர்வகிக்கப்படும் ரயில்வே நெட்வொர்க்கின் ஒருங்கிணைந்த பகுதியாக நவாபூர் உள்ளது. நவாபூரில் உள்ள ரயில்வே பிளாட்பாரம் மாநில எல்லைக் கோட்டால் பிரிக்கப்பட்டு, பயணிகள் ஒரு மாநிலத்தில் இறங்கி, நடைமேடையில் நடந்து மற்ற மாநிலத்திற்குள் நுழைய முடியும்.
இரண்டு மாநிலத்திலும் ஒரு பாதி ரயில் நிலையம் அமைந்துள்ளது. இந்த நிலையத்தை வேறுபடுத்துவது என்னவெனில், டிக்கெட் கவுண்டர் மகாராஷ்டிராவில் அமைந்திருக்கும். அதே நேரத்தில் ஸ்டேஷன் மாஸ்டர் அலுவலகம் குஜராத்தில் அமைந்துள்ளது.
நவாபூர் ரயில் நிலையத்தின் குறிப்பிடத்தக்க அம்சம் அதன் பன்மொழி அணுகுமுறை ஆகும். நிலையத்தில் அறிவிப்புகள் இந்தி, ஆங்கிலம், குஜராத்தி மற்றும் மராத்தி ஆகிய நான்கு மொழிகளில் செய்யப்படுகின்றன.
இதன் மூலம் மகாராஷ்டிரா மற்றும் குஜராத் ஆகிய இரு மாநிலங்களிலிருந்தும் வரும் பயணிகள் தடையற்ற பயண அனுபவத்தை பெறுகின்றனர். நிலையத்தில் உள்ள தகவல் பலகைகளும் இந்த நான்கு மொழிகளில் வைக்கப்பட்டுள்ளன.
நவாபூர் நிர்வாக அம்சங்களில் மட்டுமல்ல, அதன் வசதிகளிலும் பிரிக்கப்பட்டுள்ளது. ரயில் காவல் நிலையம் மற்றும் கேட்டரிங் சேவைகள் மகாராஷ்டிரா நந்துர்பார் மாவட்டத்தில் அமைந்துள்ளது.
காத்திருப்பு அறை, தண்ணீர் தொட்டி மற்றும் கழிப்பறைகள் குஜராத் தபி மாவட்டத்தில் அமைந்துள்ளது.
மொத்தம் 800 மீட்டர் நீளத்திற்கு நீண்டுள்ள இந்த ரயில் நிலையம், 300 மீட்டர் மகாராஷ்டிராவிலும், 500 மீட்டர் குஜராத்தின் எல்லையிலும் அமைந்துள்ள இந்த நிலையம்
நவாபூர் ரயில் நிலையம் முதலில் மகாராஷ்டிரா மற்றும் குஜராத் ஒருங்கிணைந்த மும்பை மாகாணத்தின் ஒரு பகுதியாக இருந்த காலத்தில் கட்டப்பட்டது.
பின்னர் மும்பை , மகாராஷ்டிரா மற்றும் குஜராத் என இரு தனி மாநிலங்களாகப் பிரிக்கப்பட்டபோது, மே 1, 1961 அன்று, நவாபூர் ரயில் நிலையம் இந்த இரு மாநிலங்களின் எல்லையில் அமைந்தது.
அப்போதிருந்து, மகாராஷ்டிரா மற்றும் குஜராத்தின் கலாச்சார மற்றும் நிர்வாக எல்லைகளை அழகாக இணைக்கும் இடமாக இது ஒரு தனித்துவமான அடையாளத்தைக் கொண்டுள்ளது.
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.
Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.
Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com
Follow us on:
Newssensetn : https://www.facebook.com/FullyNewsy
Nalam 360 : https://www.facebook.com/Nalam360
Newsnow: https://www.facebook.com/GenZSense
TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp
Hangout : https://www.facebook.com/TamilWanderlust