இந்த வேப்ப மரத்தின் இலைகள் இனிக்குமாம்! எங்கே இருக்கிறது இந்த அதிசய மரம்?

பல நல்ல விஷயங்களை கொண்ட வேம்பு, அதன் கசப்புக்காக பலரால் வெறுக்கப்படுகிறது. ஆனால் இந்த வேப்ப மரத்தின் இலைகள் இனிக்கும் என்றால் நம்ப முடிகிறதா?
இந்த வேப்ப மரத்தின் இலைகள் இனிக்குமாம்! எங்கே இருக்கிறது இந்த அதிசய மரம்?
இந்த வேப்ப மரத்தின் இலைகள் இனிக்குமாம்! எங்கே இருக்கிறது இந்த அதிசய மரம்?twitter

வேப்பமரம் என்றவுடன் நம் நினைவுக்கு வருவது கசப்பு சுவை தான்.

இந்த கசப்பின் பின்னால் நிறைய நற்குணங்கள் இருக்கின்றன. வேப்பமரம் ஒரு சிறந்த கிருமிநாசினி. வேம்பின் குச்சிகளை வைத்து பல் துலக்கினால், ஈறுகளுக்கு ஆரோக்கியம்.

வேப்பம்பூவை சமைத்து சாப்பிட்டால் வயிற்றின் பிரச்சினைகள் தீரும்.

இப்படியாக பல நல்ல விஷயங்களை கொண்ட வேம்பு, அதன் கசப்புக்காக பலரால் வெறுக்கப்படுகிறது. ஆனால் இந்த வேப்ப மரத்தின் இலைகள் இனிக்கும் என்றால் நம்ப முடிகிறதா?

பீகார் மாநிலம் நாளந்தாவில் இருக்கும் வேப்பமரம் ஒன்றில் இனிப்பு மற்றும் கசப்பு ஆகிய இரண்டு சுவைகளும் கொண்ட இலைகள் உள்ளன.

பீகார் மாநிலத்தில் அமைந்திருக்கிறது பெல்ச்சி கிராமம். இங்கு ஒரு தர்கா இருக்கிறது. இந்த தர்காவில் மொய்னுதீன் சிஷ்ட்டி என்பவரின் குருவான ஹஸ்ரத் உஸ்மான் ஹாரூன் சிஷ்ட்டியின் கல்லறை இருக்கிறது.

இதன் அருகே தான் இந்த அதிசய வேப்ப மரம் இருக்கிறது. இந்த அதிசய மரத்தின் சிறப்பு என்னவென்றால், மரத்தின் எல்லா கிளைகளிலும் இருக்கும் இலைகள் கசப்பாக இருக்கும். ஆனால் இந்த சமாதிக்கு நேரே மேலே இருக்கும் ஒரு கிளையின் இலைகள் மட்டும் இனிக்கின்றன. இதற்கான காரணம் சரியாக குறிப்பிடப்படவில்லை.

இந்த தர்கா 800 ஆண்டுகள் பழமையானது. இந்த அதிசய வேப்பமரம், 500 ஆண்டுகள் பழமையானது.

இந்த வேப்ப மரத்தின் இலைகள் இனிக்குமாம்! எங்கே இருக்கிறது இந்த அதிசய மரம்?
பிசோனியா: பறவைகளைக் கொல்லும் அதிசய மரம் - திகிலூட்டும் காரணம் தெரியுமா?

இந்த மரத்திற்கு அருகில் ஒரு கிணரும் இருக்கிறது. அந்த கிணற்றில் இருக்கும் தண்ணீர் கடல் நீரை விட அதிக உப்பாக இருக்கும் என்று கூறப்படுகிறது. இதன் தண்ணீரினை அருந்தினால் நம் உடலில் உள்ள பிரச்சினகள் குணமாகும் என அங்கிருப்பவர்கள் நம்புகின்றனர்.

இதை தவிர ஆண்டுதோறும் இங்கு உர்ஸ் என்ற பண்டிகை ஒன்றும் நடக்கிறது. அப்போது இந்த தர்காவில் கண்காட்சி ஒன்று நடத்தப்படுகிறது. இதற்கு இஸ்லாமியர்கள் மட்டுமல்லாது அனைத்து மதத்தவரும் வருகின்றனர்.

ஜார்க்கண்ட், உத்தர பிரதேசம், ஒடிசா உள்ளிட்ட இடங்களில் இருந்தும் மக்கள் இங்கு வருகை புரிகின்றனர்.

இங்கு வரும் மக்கள் இந்த அதிசய மரத்தின் கீழ் அமர்ந்து பிரார்த்தனை செய்கிறார்கள். இங்கு அமர்ந்து பிரார்த்தித்தால், அவர்களின் கோரிக்கைகள் நிறைவேறுவதாக மக்கள் நம்புகின்றனர்

இந்த வேப்ப மரத்தின் இலைகள் இனிக்குமாம்! எங்கே இருக்கிறது இந்த அதிசய மரம்?
மத்திய பிரதேசம்: 24 மணிநேரம் போலீஸ் பாதுகாப்புடன் இருக்கும் மரம் - ஒரு சுவாரஸ்ய பின்னணி!

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com