பிசோனியா: பறவைகளைக் கொல்லும் அதிசய மரம் - திகிலூட்டும் காரணம் தெரியுமா?

பொதுவாக பறவைகளின் மூலமாகத்தான் தாவரங்கள் இனபெருக்கம் செய்கின்றன. ஆனால் பிசினோனியா மரத்தின் விதைகளை சுமந்து செல்லும் பறவைகள் உயிரிழந்து விடுவதால் மரத்தின் இனப்பெருக்கம் தடைப்படுகிறது.
Pisonia: This tree lures birds with a free lunch and then kills them
Pisonia: This tree lures birds with a free lunch and then kills themTwitter
Published on

பறவைகளின் வீடாகத்தான் மரங்கள் இருக்கும் இதுதான் இயற்கை என நினைக்கும் வேளையில் இந்த மரங்கள் மட்டும் பறவைகளை கொன்றுவிடுகின்றனவாம். ஆச்சரியமாக இருக்கிறதா? கொலைக்கார மரத்தை பற்றி வாருங்கள் தெரிந்து கொள்வோம்

நமக்கு தெரிந்த வரை மரங்கள் பறவைகளுக்கு தங்குமிடம் கொடுத்து பாதுகாக்கின்றன. ஆனால் இந்த மரத்தின் அருகில் நீங்கள் சென்றால் பழங்களையும் , பூக்களையும் பார்க்கும் முன்பு இறந்த பறவைகளின் எலும்புகளை பார்க்கலாம் .

இதனை படிக்கும் போதே ஏதோ மாயாஜால கதைகளில் வரும் சூனியக்கார மரமா? என தோன்றலாம். இது மாயாஜாலம் அல்ல, நிஜம்.

பறவை பிடிக்கும் மரம்

இந்த மரம் பறவைகளை கொஞ்சம் கொஞ்சமாக கொல்லுமாம். இந்த மரத்தின் பெயர் பிசோனியா. இதனை பறவை பிடிக்கும் மரம் என்றும் அழைக்கின்றனர் .

பிசோனியா மரங்கள் ஹாவாயிலிருந்து நியூசிலாந்து வரை உள்ள சில பகுதிகளில் காணப்படுகிறது. பிசோனியா மரத்தில் வருடத்திற்கு இரண்டு முறை மட்டுமே பூ பூக்குமாம்.

அதன்பிறகு மரத்தில் பிஞ்சு வைக்கும் போது இதில் ஒரு திரவம் சுரக்கிறது. இதில் வரும் வாசனைக்கு மயங்கி பூச்சிகள் வந்து காய்களில் ஒட்டி உயிரை விடுகின்றன.

Pisonia: This tree lures birds with a free lunch and then kills them
Albatross: 5 ஆண்டுகள் இறங்காமல் பறக்கும்; நீண்ட காலம் வாழும்- காதல் பறவை பற்றி தெரியுமா?

மரம் எப்படி பறவைகளை கொல்லும்?

இதில் ஒட்டியிருக்கும் பூச்சிகளை சாப்பிட வரும் பறவைகள் பிசோனியா மரத்தில் அமர்ந்துவிட்டால் அவ்வுளவுதான். பூச்சிகளின் உயிரைகுடித்த அந்த காயகள், அதாவது மரத்தின் விதைகள் பறவைகளின் கால்களில் பசை போல் ஒட்டிக்கொள்ளும்.

அவற்றால் தப்பிக்க முடிவதில்லை, உணவின்றி அப்படியே வெயில் காய்ந்து இறந்து விடுகின்றன.

ஒரு வேளை பெரிய பறவைகள் பசையிலிருந்து தப்பி வந்தாலும் இறக்கைகளில் விதைகள் ஒட்டிக்கொள்வதால் அவற்றால் நெடுந்தூரம் பறக்க முடியாமல் கீழே விழுந்து உயிரை விடுகின்றன.

இவ்வாறு பறவைகளை பிசினோனிய மரம் கொல்வதன் மூலம் மரத்தில் ஏதேனும் மாற்றம் நடக்கின்றதா ? என விஞ்ஞானிகள் ஆராய்ந்தனர். அப்போது பறவைகள் அதிகமாக இறந்து கிடக்கும் மரங்களை ஆராய்ந்த போது அந்த மரங்களில் ஊட்டசத்து அதிகரிப்பதாக கூறுகின்றனர்.

Pisonia: This tree lures birds with a free lunch and then kills them
Bulbul Bird Facts : புல்புல் பறவை குறித்த 10 சுவாரஸ்யமான தகவல்கள்

மரத்தின் இனப்பெருக்கம் தடை

பொதுவாக பறவைகளின் மூலமாகத்தான் தாவரங்கள் இனபெருக்கம் செய்கின்றன. ஆனால் பிசினோனியா மரத்தின் விதைகளை சுமந்து செல்லும் பறவைகள் உயிரிழந்து விடுவதால் மரத்தின் இனப்பெருக்கம் தடைப்படுகிறது.

ஆனால் இதில் சோகமான சம்பவம் எதுவென்றால் பல கடற்பறவைகள் பிசோனியா மரங்களை விரும்புகின்றன.

கடல் பறவைகள் இல்லாத பிசோனியா மரத்தைப் பார்ப்பது அரிது என்று அமெரிக்க மீன் மற்றும் வனவிலங்கு சேவையின் வனவிலங்கு உயிரியலாளர் பெத் ஃபிளின்ட் கூறுகிறார்.

மேலும் , மரங்களில் சிக்கியிருக்கும் பறவைகளை மீட்டு அதன் இறக்கைகளில் இருக்கும் விதைகளை நீக்கி புதிய இறக்கைகள் முளைக்கும் வரை பராமரித்து பிறகு அவற்றை வெளியே அனுப்புவதாக பெத் ஃபிளினட் கூறுகின்றனர்.

உலகம் பல ஆச்சரியங்கள் நிறைந்தது. அந்த வகையில் பறவைகளை காக்கும் மரங்களுக்கு மத்தியில் பறவைகளை கொல்லும் பிசோனிய மரம் ஆச்சரியமும் , அதிர்ச்சியும் கலந்த அதிசயமே!

Pisonia: This tree lures birds with a free lunch and then kills them
ஜப்பான்: 70 ஆண்டுகள் வாழும்; கோடிக்கணக்கில் விலை- 'கொய் மீன்கள்' புனிதமா கருதப்படுவது ஏன்?

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com