புத்தாண்டில் பாஸிடிவ் அனுபவங்கள்: ரூ.10,000 செலவில் சுற்றிபார்க்க 6 சுற்றுலா தலங்கள்!

ஒரு சிறந்த இடத்துக்கு பயணம் செய்து புதிய அனுபவங்களுடன் ஆண்டைத் தொடங்க வேண்டும் என நினைப்பவர்களுக்கு ஏற்ற 6 இடங்கள் தான் இந்த கட்டுரையில் பார்க்கப்போகிறோம்.
புத்தாண்டில் பாஸிடிவ் அனுபவங்கள்: ரூ.10,000 செலவில் சுற்றிபார்க்க 6 சுற்றுலா தலங்கள்!
புத்தாண்டில் பாஸிடிவ் அனுபவங்கள்: ரூ.10,000 செலவில் சுற்றிபார்க்க 6 சுற்றுலா தலங்கள்! Pexels
Published on

2023 புத்தாண்டு மிகவும் பாஸிடிவாக இருக்க வேண்டும் என்பது நம் அனைவரின் எண்ணமாகவும் இருக்கிறது.

என்ன ஆனாலும் "நாம மாறாம எத்தனை வருஷம் மாறினாலும் இங்க எதுவும் மாறாது" என்பது அனைவருக்கும் தெரிந்திருந்தாலும், புத்தாண்டில் புதிய வாழ்க்கையை பெறும் துடிப்போடு சில விஷயங்களை செய்தால் தான் இந்த ஆண்டு சிறப்பாக அமையும் என்பது நம் எண்ணம்.

அதற்கு மிகவும் எளிதாக கைகொடுப்பது ட்ராவல் தான். ஒரு சிறந்த இடத்துக்கு பயணம் செய்து புதிய அனுபவங்களுடன் ஆண்டைத் தொடங்க வேண்டும் என நினைப்பவர்களுக்கு ஏற்ற 6 இடங்கள் தான் இந்த கட்டுரையில் பார்க்கப்போகிறோம்.

ஆலி

பனிக்காலத்தில் வெள்ளை கம்பளம் விரித்து நம்மை வரவேற்கும் ஆலி.

இங்கு ஊசியிலை மரங்கள் மற்றும் ஓக் மரங்களால் நிறைந்த காடுகளுடன் கூடிய நந்தா தேவி மற்றும் நர் பர்வத் மலைகளின் அற்புதமான நிலப்பரப்பை ரசிக்கலாம்.

பனிச்சறுக்குக்கு இந்த இடம் பெயர்போனது. இந்தியாவின் பனிச்சறுக்கு தலைநகடரம் என்றே அழைக்கலாம்.

லடாக்

இந்த நியூ இயரில் பனி நிறைந்த பாதைகளில் பயணம் செய்து லடாக் சென்றடைவது கடுங்குளிர் காரணமாக கடினமானதாக இருக்கலாம்.

ஆனால் பனிப்பொழிவுக்கு நடுவே கேப்ம் ஃபயர் செய்து நம் மனதுக்கு விருப்பமானவருடன் புத்தாண்டு பிறக்கும் நொடிகளை கழிப்பது வாழ்வில் பேரனுபவமாக இருக்கும்!

முன்சியரி

உத்தராகண்ட் மாநிலத்தின் கிழக்கு கோடியில் இருக்கும் இடம் முன்சியரி.

நமிக், மிலாம் மற்றும் ரலாம் ஆகிய பனிப்பாறைகளின் தொடக்கமாவும் ஜோஹர் பள்ளத்தாக்கின் நுழைவு வாயிலாகவும் இந்த பகுதி இருக்கிறது.

நர்கண்டா

இமாச்சல பிரதேசத்தில் பல பனி மலைகள், அழகு நிறைந்த கிராமங்களும், சுற்றுலாத் தலங்களும் இருந்தாலும் இன்ட்ய்ஹ நியூ இயருக்கு நர்கண்டா சிறந்த தலம் எனக் கூறப்படுகிறது.

பனிச்சருக்கு விளையாடவும் நண்பர்களுடன் ஸ்னோ பால் சண்டை செய்யவும் விரும்புபவர்கள் நிச்சயமாக இங்கு வரலாம்.

புத்தாண்டில் பாஸிடிவ் அனுபவங்கள்: ரூ.10,000 செலவில் சுற்றிபார்க்க 6 சுற்றுலா தலங்கள்!
Ladakh : சுற்றுலா பயணிகளால் சுடுகாடாகும் லடாக் - தண்ணீர் பஞ்சத்தில் தவிக்கும் மக்கள்

பஹல்கம்

ஜம்மு - காஷ்மிரில் உள்ள பஹல்கம் அமர்நாத் யாத்திரை சென்றவர்களுக்கு மிகவும் பழக்கமான இடமாக இருக்கும்.

இங்குள்ள கூர்மையான மலைகளுக்கும், ஃப்ரெஷ்ஷான காய்கறிகளுக்கும், குங்கும பூ வயல்களும் பனிக்காலத்தில் அழகு செறிவுடன் காணப்படும்.

புத்தாண்டில் பாஸிடிவ் அனுபவங்கள்: ரூ.10,000 செலவில் சுற்றிபார்க்க 6 சுற்றுலா தலங்கள்!
கம்போடியா முதல் லாவோஸ் வரை: பட்ஜெட்டில் சுற்றுலா செல்ல 10 நாடுகள் - என்னென்ன பார்க்கலாம்?

தனௌல்டி

உத்தராகண்டில் மறைக்கப்பட்ட சுற்றுலாத்தலமாகவே இருக்கிறதுப் தனௌள்டி.

புல் வெளிகளும், ஓக், நறுமண மரங்களும் நிறைந்த கிராமம் ஒரு நாளாவது வாழ்ந்து பார்க்க வேண்டும் என்ற எண்ணத்தைக் கொடுப்பது உறுதி.

இங்கிருந்து இமயமலையில் அழகை ரசித்தவாறு தேநீர் பருகுவதற்கு தான் சொர்க்கம் என்று பெயர் எங்கிறார்கள்.

புத்தாண்டில் பாஸிடிவ் அனுபவங்கள்: ரூ.10,000 செலவில் சுற்றிபார்க்க 6 சுற்றுலா தலங்கள்!
உலகிலேயே சுத்தமான காற்று இருக்கும் சுற்றுலா தலங்கள் இவைதான்!

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com