கத்தாரை வீழ்த்திய இந்தியா : எதில் தெரியுமா? - இந்தக் கட்டுரையை படியுங்கள்

75 கிலோமீட்டர் பிட்டுமினஸ் கான்கிரீட் சாலையை 105 மணிநேரத்தில் அமைத்து சாதனைப் படைத்திருக்கிறது தேசிய நெடுஞ்சாலைத் துறை.
கத்தாரை விஞ்சிய இந்தியா
கத்தாரை விஞ்சிய இந்தியாNewsSense
Published on

தேசிய நெடுஞ்சாலை 53ல் மகாராஷ்டிராவின் அமராவதி மற்றும் அகோலா மாவட்டங்கள் இடையில் 75 கிலோமீட்டர் பிட்டுமினஸ் கான்கிரீட் சாலையை 105 மணிநேரத்தில் அமைத்து சாதனைப் படைத்திருக்கின்றனர் NHAI. இது சரியாக 105 மணிநேரம் 33 நிமிடங்களில் போடப்பட்டிருக்கிறது. இதன் மூலம் புதிய கின்னஸ் ரெக்கார்ட் படைத்திருப்பதாகத் தேசிய நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்காரி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்ட வீடியோவில் “கடந்த வெள்ளிக்கிழமை, ஜூன் 3 அன்று காலை 7:27 மணிக்குத் தொடங்கப்பட்ட சாலை அமைக்கும் வேலைகள் ஜூன் 7 மாலை 5 மணி வரை நடைபெற்றிருக்கிறது.” எனக் கூறியுள்ளார்.

அத்துடன் பணியில் ஈடுபட்ட ஒப்பந்ததாரர்கள், பொறியாளர்கள் மற்றும் தொழிலாளர்கள் ஆகியோரை நிதின் கட்கரி வாழ்த்தியிருக்கிறார். இந்த பணியின் முக்கியத்துவத்தைக் கூறிய அவர், “இந்த சாலை கனிம வளங்கள் நிறைந்த பகுதியில் அமைக்கப்படுகிறது. அத்துடன் கொல்கத்தா, அகோலா, துலே, ராய்ப்பூர், நாக்பூர் மற்றும் சூரத் ஆகிய நகரங்களை இணைப்பதாகவும் இருக்கிறது” என்று நிதின் கூறியுள்ளார்.

கத்தாரை விஞ்சிய இந்தியா
முகேஷ் அம்பானி சம்பளம் என்ன? அவரை விட அதிக சம்பளம் வாங்கும் சி இ ஓ யார்? - சுவாரஸ்ய தகவல்
Guinness Record
Guinness RecordTwitter

“நான் மிக மகிழ்ச்சியாக இருக்கிறேன். எங்கள் குழு ஓர் உலக சாதனையைப் படைத்திருக்கிறது. NHAI ஆலோசகர்கள் மற்றும் ஒப்பந்ததாரர்கள் அனைவருக்கும் நன்றி. கான்ட்ராக்டரான ராஜ்பாத் இன்ஃப்ராகான் பிரைவேட் லிமிடெட் எனும் புனே நிறுவனம் இதனைச் சாத்தியமாக்கியுள்ளது.” என அவரது டிவிட்டரில் எழுதியுள்ளார்.

கத்தாரை விஞ்சிய இந்தியா
முருக கடவுள், நெற்றித் திலகம் - இந்து பண்பாட்டை பிரதிபலிக்கும் ஈராக் யசீதி கலாசாரம்

இந்த பணியில் NHAIன் 800 ஊழியர்கள் மற்றும் 720 தொழிலாளர்கள் ஈடுபட்டிருக்கின்றனர். இதற்கும் முன் 2019ம் ஆண்டில் கத்தாரின் பொதுப்பணித்துறை ஆணையம் இந்த சாதனையைப் படைத்திருந்தது குறிப்பிடத்தக்கது.

கத்தாரை விஞ்சிய இந்தியா
இமயமலை : இங்கு இருக்கும் பிரம்மாண்ட கோட்டைக்கு ஒரு ட்ரிப் போவோமா?

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com