வீட்டிற்குள்ளேயே 10000 செடிகள்; ஆண்டுக்கு 70 லட்சம் வருமானம் - எப்படி சாத்தியமானது?

இந்த முறை விவசாயத்துக்கு மண் அவசியமில்லை. சாதாரணமாக ஒரு செடி வளர்க்க ஆகும் தண்ணீர் செலவில் 80 விழுக்காடு தண்ணீரை மிச்சப்படுத்தலாம் எனத் தெரிந்து கொண்டார் அவர்.
Ramveer Singh
Ramveer SinghTwitter
Published on

ராம்வீர் சிங் எனும் உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த நபர் தனது மூன்று மாடி வீட்டில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட செடிகளை வளர்த்து அசத்தி வருகிறார். ஒரு வீட்டில் எப்படி இவ்வளவு செடிகளை வளர்க்க முடியும்? என்ற வியப்பு மிகுந்த கேள்வியுடன் அவரது கதையை தொடங்கலாம்.


பத்திரிக்கையாளர் டூ விவசாயி

கடந்த 2009ம் ஆண்டு ராம்வீர் சிங்கின் நண்பரின் உறவினர் புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருக்கிறார். புற்றுநோய்க்கான காரணத்தைக் கேட்ட போது அதிர்ந்திருக்கிறார் ராம்வீர் சிங். இரசாயனம் கலந்த மண்ணில் வளர்க்கப்பட்ட காய்கறிகளைச் சாப்பிட்டதே புற்றுநோய்க்கான காரணம் என்பது அவரை அச்சுறுத்தியது. இதே போன்று தன்னைச் சார்ந்தவர்கள் யாரும் பாதிக்கப்படக் கூடாது என எண்ணினார் ராம்வீர் சிங்.

தனது முழுநேரப் பணியை விட்டு வெளியேறிய ராம்வீர் சிங் சொந்த நிலத்தில் பயிரிடத் தொடங்கியுள்ளார். இயற்கை விவசாயத்தைக் கையிலெடுப்பதன் மூலம் தனது பிரச்னைக்கு தீர்வுகாண முடியும் என் அவர் நம்பினார். இதற்காக அவரது வீட்டிலிருந்து 40 கி.மீ தள்ளியிருந்த நிலத்தில் இயற்கை விவசாயம் செய்து வந்ததாக பெட்டர் இந்தியா தலத்திடம் கூறியுள்ளார்.

Ramveer Singh
கோழிப்பண்ணை தொடங்கும் தோனி - இதுதான் காரணமா?

ஒரே நேரத்தில் ஃப்ரீலான்சர் பத்திரிகை வேலையையும் விவசாயத்தையும் கவனித்து வந்திருக்கிறார்.

வீட்டுத் தோட்டம்
வீட்டுத் தோட்டம்Twitter

வீட்டிலேயே விவசாயம்

இயற்கை விவசாயத்தில் இறங்கிய ராம்வீர் சிங் விவசாயம் குறித்து அதிகம் தெரிந்துகொள்ளத் தொடங்கினார். அந்த ஆர்வம் தான் அவருக்கு ஹைட்ரோபோனிக் முறையை அறிமுகம் செய்திருக்கிறது.

2017 - 18 ல் துபாயில் நடந்த ஒரு விவசாயம் சார்ந்த நிகழ்வில் ஹைட்ரோபோனிக் விவசாயம் குறித்துத் தெரிந்து கொண்டார் ராம்வீர் சிங். இந்த முறை விவசாயத்துக்கு மண் அவசியமில்லை. சாதாரணமாக ஒரு செடி வளர்க்க ஆகும் தண்ணீர் செலவில் 80 விழுக்காடு தண்ணீரை மிச்சப்படுத்தலாம் எனத் தெரிந்து கொண்டார்.

Ramveer Singh
காட்டுத்தீ ஏற்படுத்திய விவசாயிக்கு வித்தியாசமான தண்டனை வழங்கிய நீதிமன்றம்

வீட்டிலேயே பிவிசி பைப்புகளைப் பயன்படுத்தி செடிகளை வளர்க்கத்தொடங்கியிருக்கிறார் ராம்வீர் சிங். ஹைட்ரோபோனிக் என்பது மண்ணில்லாத விவசாயமாகும். தாவரங்களை மண்ணில் வளர்க்காமல் சத்துகள் கலக்கப்பட்ட தண்ணீரை மட்டுமே பயன்படுத்தி வளர்த்துவிட முடியும். தாவரங்கள் வளர குறிப்பிட்ட சத்து, கொஞ்சம் தண்ணீர் மற்றும் சூரிய வெளிச்சம் மட்டுமே தேவை.

காய்கறி
காய்கறிTwitter

தனது வீட்டில் தற்போது 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட செடிகளை வளர்த்து வருகிறார் ராம்வீர் சிங். அவற்றின் மூலம், ஓக்ரா, மிளகாய், குடமிளகாய், சுரைக்காய், தக்காளி, காலிஃபிளவர், கீரை, முட்டைக்கோஸ், ஸ்ட்ராபெரி, வெந்தயம் மற்றும் பச்சை பட்டாணி ஆகிய காய்கறிகளைப் பெறுகிறார்.

இந்த முறை இயற்கை விவசாயத்தை விட அதிக பயன்தரக் கூடியது எனக் கூறுகிறார் ராம்வீர் சிங். அத்துடன் இதில் மண்ணில் வேதிப்பொருட்களைக் கலக்கும் அபாயமோ, காய்கறியில் இரசாயனங்களைத் தெளிக்க வேண்டிய தேவையோ இல்லை என்கிறார் அவர்.

Ramveer Singh
சீனா : அறிவியலாளர்கள் வியக்கும் 630 அடிக்கு கீழ் ஒரு அற்புத உலகம்

ஹைட்ரோபோனிக் விவசாயத்தின் மூலம் ராம்வீர் சிங் ஆண்டுக்கு 70 லட்சம் வருமானம் ஈட்டுவதாக பெட்டர் இந்தியா செய்திதலம் கூறுகின்றது.

இந்த ஹைட்ரோபோனிக் முறை மூலம் பாலிவுட் நடிகை ஷில்பா ஷெட்டி தனது வீட்டுத்தோட்டத்தில் காய்கறிகளை வளர்த்து வருகிறார். கால்நடைகளுக்கு பசுந்தீவனம் உற்பத்தி செய்யவும் ஹைட்ரோபோனிக் முறையை முன்வைக்கிறது அரசு இதற்காக மானியமும் வழங்கப்படுகிறது.

Ramveer Singh
நிலவின் மண்ணில் செடி வளர்த்த விஞ்ஞானிகள் - ஓர் அட்டகாச சம்பவம்

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com