ஆதார் கார்டு இல்லனா... அனுமதி இல்ல! பெண் குடும்பத்தினரின் வித்தியாசமான வரவேற்பு| Video

உ.பி.யைச் சேர்ந்த ஒரு குடும்பம், திருமண மண்டபத்திற்குள் நுழைந்த பெரும் கூட்டத்தை, சமாளித்த விதம், இணையவாசிகளை அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளது.
Marriage
MarriageTwitter
Published on

உ.பி.யில் நடந்த திருமண நிகழ்வு ஒன்றில் மணப்பெண்ணின் குடும்பத்தினர், விஷேசத்திற்கு வந்திருந்த விருந்தாளிகளிடம் ஆதார் அட்டையைக் காட்டுமாறு கூறிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியாவில் நூற்றுக்கணக்கான விருந்தினர்களுடன் திருமண நிகழ்வு நடைபெறும் வழக்கம் பல ஆண்டுகளாக நடைமுறையில் உள்ளது. சில திருமண நிகழ்விற்குகட்டுக்கடங்காத கூட்டம் வருவதுண்டு.

அப்படி உ.பி.யைச் சேர்ந்த ஒரு குடும்பம், திருமண மண்டபத்திற்குள் நுழைந்த பெரும் கூட்டத்தை, சமாளித்த விதம் தான், இணையவாசிகளை அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளது.

Marriage (Rep)
Marriage (Rep)Pexels

இதுவரை யாரும் கேள்விப்படாத ஒன்றைச் செய்ய அந்த குடும்பத்தினர் முடிவு செய்தனர்.

அதாவது திருமணத்திற்கு வந்த விருந்தினர்களை தங்களுடைய ஆதார் அட்டையை மண்டபத்தின் நுழைவாயிலில் காண்பிக்குமாறு குடும்பத்தினர் கூறினர்.

அட்டை வைத்திருந்தவர்கள் மட்டுமே மண்டபத்திற்குள் செல்ல அனுமதிக்கப்பட்டனர். மேலும் ஆதார் அட்டை வைத்திருப்பவர்களுக்கு மட்டுமே உணவு வழங்கப்படும் என்றும் கூறியுள்ளனர்.

Marriage
மனைவியின் சம்மதத்துடன் திருநங்கையை திருமணம் செய்துகொண்ட நபர் - எங்கே?

இதனால் திருமணத்திற்கு அடையாள அட்டையை எடுத்துச் செல்லாத பலர் கடும் கோபமடைந்தனர்.

இதனை வீடியோவாக எடுத்து சிலர் இணையத்தில் கசியவிட்டனர். இந்த வீடியோ கிளிப் டிவிட்டரில் அதிக பார்வையாளர்களை பெற்று வைரலாகி வருகிறது.

Marriage
30 ஆண்டுகளுக்கு முன் இறந்த ஆணுக்கும் பெண்ணுக்கும் திருமணம் - இந்த வினோத சடங்கு ஏன் ?

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com