‘இரவு 10 மணிக்கு மேல் guest-க்கு அனுமதியில்லை’- வைரலாகும் வீட்டு உரிமையாளரின் கண்டிசன்ஸ்

அப்படி ஒருவர் பெங்களூரூவில் வாடகைக்கு வீடு எடுத்தபோது அவருக்கு வீட்டு உரிமையாளர் போட்டுள்ள கண்டிசன்ஸ் தான் தற்போது இணையதளத்தில் வைரலாகி வருகிறது.
‘No guests after 10pm’: Bengaluru housing society's bachelor regulations getting viral
‘No guests after 10pm’: Bengaluru housing society's bachelor regulations getting viralTwitter
Published on

பெங்களூரூ என்று கூறினால் நம் நினைவிற்கு வருவது ஐடி நிறுவனங்கள்,அடுக்குமாடி குடியிருப்புகள் தான். தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் அதிகம் இருக்கும் பெங்களூருவில் ஏராளமானோர் வேலை செய்து வருகின்றனர்.

அங்கு வேலை செய்பவர்களில் பாதிக்கு மேல் வேறு ஊரிலிருந்து வந்து தங்கியிருப்பவர்கள்தான்.

அங்கு வாடகைக்கு வீடு எடுப்பவர்களுக்கு பல நிபந்தனைகளை விதிகின்றனர்.

அப்படி ஒருவர் பெங்களூரூவில் வாடகைக்கு வீடு எடுத்தபோது அவருக்கு வீட்டு உரிமையாளர் போட்டுள்ள கண்டிசன்ஸ் தான் தற்போது இணையதளத்தில் வைரலாகி வருகிறது.

ஒரு பயனர் Reddit இல் இது தொடர்பாக பதிவிட்டது தான் தற்போது இணையதளத்தில் வைரலாகி வருகிறது.

என்னென்ன நிபந்தனைகள்

1. இரவு 10 மணிக்கு மேல் அதிகமான சத்தத்தில் இசை கேட்க கூடாது.

2. இரவு நேர விருந்துகளுக்கு அனுமதியில்லை

3. இரவு 10 மணிக்குப் பிறகு தொலைபேசி அழைப்புகள் பேசினாலும் பால்கனிகளைப் பயன்படுத்தக் கூடாது

4. இரவு 10 மணிக்குப் பிறகு விருந்தினர்கள் அனுமதிக்கப்பட மாட்டார்கள். விருந்தினர்கள் இரவில் தங்க அனுமதிக்கப்படுவதில்லை.

‘No guests after 10pm’: Bengaluru housing society's bachelor regulations getting viral
மக்களின் தனிமையை போக்கும் மிஸ்டர் வாடகை - ஒரு நாளுக்கு 10000 ரூபாயாம்!

இந்த விதிகளை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும். மீறினால் 1000 ரூபாய் அபராதம் விதிக்கப்படுவது மட்டுமில்லாமல் வீட்டை விட்டு வெளியேற்றப்படுவர்.

இந்த பதிவுக்கு பதிலளிக்கும் விதமாக, ஒரு பயனர் கூறினார், "இதற்கு ஹாஸ்டலே பரவாயில்லை" உங்கள் குடியிருப்பை வாடகைக்கு எடுக்க பணம் செலவழிக்கிறீர்கள்.

நீங்கள் இருக்கும் வரை இது உங்கள் அபார்ட்மெண்ட். உங்கள் அடுக்குமாடி குடியிருப்புக்கு யார் வருகிறார்கள், மொட்டை மாடியில் நீங்கள் என்ன செய்கிறீர்கள் என்பது முற்றிலும் உங்களின் தனிப்பட்ட விஷயங்கள் என்றார். இந்த விதிமுறைகள் கேள்விக்குரியதாகி வருகிறது.

‘No guests after 10pm’: Bengaluru housing society's bachelor regulations getting viral
11 மாதங்களுக்கு மட்டும் வாடகை ஒப்பந்தம் செய்யப்படுவது ஏன் தெரியுமா?

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com