இந்தியாவில் பொதுவாக லீஸுக்கு வீடு எடுத்தால் 11 மாதங்களுக்கு ஒப்பந்தம் போடுவார்கள். வாடகைக்கு இருக்கும் நபர் ஒரே ஆளாக இருந்து பலமுறை புதுப்பித்தாலும் 11 மாதத்திற்குத் தான் ஒப்பந்தம் கையெழுத்தாகும்.
ஏன் வாடகை ஒப்பந்தங்கள் 11 மாதங்களுக்கு மட்டும் செய்யப்படுகிறது என்று நீங்கள் எப்போதாவது யோசித்திருக்கிறீர்களா?
வாடகை ஒப்பந்தம் அல்லது குத்தகை ஒப்பந்தம் என்பது ஒரு சொத்தின் உரிமையாளருக்கும் (நில உரிமையாளர்) அதை வாடகைக்கு எடுக்கும் குத்தகைதாரருக்கும் இடையிலான சட்டப்பூர்வமான ஆவணமாகும்.
நில உரிமையாளருக்கும் குத்தகைதாரருக்கும் இடையே சொத்து தொடர்பாக ஏதேனும் தகராறு ஏற்பட்டால், வாடகை ஒப்பந்தம் ஆதாரமாக செயல்படுகிறது.
உண்மையில் இத்தகைய 11 மாத குத்தகை ஒப்பந்தம் குத்தகைதாரர்களைக் காட்டிலும் வீட்டின் உரிமையாளர்களுக்கே அதிகளவில் சாதகமாக அமைந்துள்ளது.
இந்தியாவில் குத்தகைக்கு விடப்படும் போது ஒருவரின் வீட்டை காலி செய்வது மிகவும் கடினம் என்று சட்ட வல்லுநர்கள் கூறுகின்றனர்.
நடைமுறை தாமதங்கள் காரணமாக நில உரிமையாளர் பணத்தை பெறும் வரையிலும், வீடு குத்தகைதாரர்கள் கையில் தான் இருக்கும்.
இதுப்போன்ற பிரச்சனைகளைத் தவிர்க்க வேண்டும் என்பதற்காகவே 11 மாத மட்டுமே குத்தகை ஒப்பந்தம் கையெழுத்தாகிறது.
இதேவேளையில் இந்த 11 மாத ஒப்பந்தம் எந்த வகையில் எல்லாம் வீட்டின் உரிமையாளர்களுக்குச் சாதகமாக உள்ளது?
வாடகை அல்லது குத்தகை ஒப்பந்தம் ஒரு வருடத்திற்கும் குறைவாக இருந்தால், ஒப்பந்த பத்திரத்தை பதிவு செய்ய வேண்டிய அவசியமில்லை. ஒரு வருடத்திற்கும் குறைவான கால அளவு கொண்ட குத்தகை ஒப்பந்தம் 1908ஆம் ஆண்டின் பதிவுச் சட்டத்தின் பிரிவு 17 இன் கீழ் பதிவு செய்யப்பட வேண்டிய அவசியமில்லை.
இந்தச் சட்ட விதிகள் 1 வருடத்திற்கும் குறைவான குத்தகை ஒப்பந்தங்களைப் பதிவு செய்யாமல் கையொப்பமிடலாம் என்பதைக் குறிக்கிறது.
ஒரு வருடத்திற்கும் குறைவாக இருக்கும் குத்தகை பத்திரங்களைப் பதிவு செய்யாமல் இருப்பதால் முத்திரை கட்டணம் செலுத்துவதைத் தவிர்க்கலாம்.
இது வீட்டின் உரிமையாளர்களுக்குப் பணத்தை மிச்சப்படுத்தலாம் என்பதால் தான் 11 மாத குத்தகை ஒப்பந்தம் பரிந்துரைக்கப்படுகிறது.
செலவுகள் அனைத்தையும் தவிர்க்க, நில உரிமையாளர்கள் மற்றும் குத்தகைதாரர்கள் பரஸ்பர சம்மதத்தின் அடிப்படையில் மட்டுமே 11 மாதங்களுக்கு ஒப்பந்தம் செய்கிறார்கள்.
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.
Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.
Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com
Follow us on:
Newssensetn : https://www.facebook.com/FullyNewsy
Nalam 360 : https://www.facebook.com/Nalam360
Newsnow: https://www.facebook.com/GenZSense
TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp
Hangout : https://www.facebook.com/TamilWanderlust