Noida Twin Tower: தகர்ந்தது இரட்டை கோபுரம் - இணையத்தில் வைரலாகும் வீடியோ

கட்டடத்தின் சுமார் 20,000 இடங்களில் வெடிமருந்து வைக்கப்பட்டுத் தகர்க்கப்பட்டது. ஒன்பது வினாடிகளில் கட்டடம் தகர்க்கப்பட்டாலும் அதிலிருந்து எழும் புழுதிப் படலம் அடங்க 10 முதல் 15 நிமிடங்கள் ஆகும் என எடிஃபிஸ் நிறுவனம் தெரிவித்தது.
Twin Towers
Twin TowersTwitter
Published on

சூப்பர்டெக் நிறுவனம் கட்டிய தி சூப்பர்டெக் ட்வின் டவர் இன்று மதியம் 2.30 மணிக்கு வெடி வைத்து தகர்க்கப்பட்டது.

சட்டத்திற்கு புறம்பாக, விதிமீறி கட்டப்பட்ட காரணத்திற்காக தி சூப்பர்டெக் நிறுவனம் நொய்டாவில் எழுப்பிய இரட்டை கோபுரம் இன்று சுமார் 3,700 கிலோ வெடிமருந்து வைத்து தகர்க்கப்பட்டது.

பழைய கட்டிடங்கள், சட்டத்தின் விதிகளை மீறி எழுப்பப்பட்ட கட்டடங்கள் அல்லது அரசு கையகப்படுத்திய இடங்களில் கட்டிடங்கள் அமைக்கப்பட்டிருந்தால், அவை தகர்க்கப்படுவது வழக்கம். அதன் அடிப்படையில் தான் இந்த இரட்டை கோபுரங்களும் தகர்க்கப்பட்டுள்ளன. உத்தர பிரதேசம் நொய்டா நகரத்தில் 2000ஆம் ஆண்டு சூப்பர்டெக் நிறுவனத்தால் கட்டப்பட்டது தான் இந்த இரட்டை கோபுரங்கள். ஆனால், இவை அரசு அனுமதி ஒப்பந்தத்திற்கு மாறாக, அதிகப்படியான தளங்கள் கொண்டு கட்டப்பட்டது.

இதனையடுத்து, இந்த விதிமீறலை எதிர்த்து வழக்கு தொடுக்கப்பட்ட நிலையில், அலகாபாத் உயர்நீதிமன்றம், இந்த கட்டடத்தைத் தகர்க்க உத்தரவு பிறப்பித்தது. இந்த உத்தரவை எதிர்த்து, உச்சநீதி மன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கு விசாரிக்கப்பட்டு, கட்டடத்தைத் தகர்க்குமாறு, உச்சநீதி மன்றமும் தீர்ப்பளித்தது.

கட்டடத்தில் வாழ்ந்த 5,000 மக்கள், 2,500 வாகனங்கள் மற்றும் நூற்றுக்கணக்கான வளர்ப்பு பிராணிகள் பாதுகாப்பான இடத்திற்கு மாற்றப்பட்டன.

Twin Towers
சௌதி அரேபியாவின் பிரமாண்ட இரட்டை கட்டடம்: 120 கி.மீ நீளம், 488 மீ உயரம் - படஜெட் எவ்வளவு?

இன்று ஞாயிற்றுக் கிழமை மதியம் 2.30 மணியளவில், கட்டடத்தின் சுமார் 20,000 இடங்களில் வெடிமருந்து வைக்கப்பட்டுத் தகர்க்கப்பட்டது. ஒன்பது வினாடிகளில் கட்டடம் தகர்க்கப்பட்டாலும் அதிலிருந்து எழும் புழுதிப் படலம் அடங்க 10 முதல் 15 நிமிடங்கள் ஆகும் என எடிஃபிஸ் நிறுவனம் தெரிவித்தது.

ஆனாலும், கட்டடத்தை சுற்றி 225 டன்கள் கம்பி மற்றும் 110 கிலோமீட்டருக்கு துணியும் பல அடுக்குகளாகச் சுற்றப்பட்டுள்ளது. இது, கட்டடம் தகர்க்கப்படும்போது சிதறும் கான்கிரீட் அருகில் உள்ள குடியிருப்புகளைச் சேதப்படுத்தாமல் இருக்க எடுக்கப்பட்ட நடவடிக்கை என கூறப்படுகிறது.

மதியம் தகர்க்கப்பட்ட நொய்டா இரட்டை கோபுரத்தின் வீடியோ தற்போது இணையத்தில் பரவலாக பார்க்கப்பட்டு வருகிறது

Twin Towers
3500 கிலோ வெடி வைத்து நாளை தகர்க்கப்பட இருக்கும் இந்தியாவின் இரட்டைக் கோபுரங்கள் - ஏன்?

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com