சௌதி அரேபியாவின் பிரமாண்ட இரட்டை கட்டடம்: 120 கி.மீ நீளம், 488 மீ உயரம் - படஜெட் எவ்வளவு?

இரு பிரமாண்ட கட்டடங்கள் சுமார் 120 கிலோமீட்டர் நீளத்துக்கு இணையாக ரயில் பாலம் போலக் கட்டப்பட உள்ளன. இதன் உயரம் 488 மீட்டர் (1,600 அடி) வரை இருக்கலாம். இது அமெரிக்காவில் உள்ள சுதந்திர தேவிச் சிலையை விட உயரமானது.
சௌதி அரேபியாவின் பிரமாண்ட இரட்டை கட்டடம்
சௌதி அரேபியாவின் பிரமாண்ட இரட்டை கட்டடம்NewsSense
Published on

உலகிலேயே மிகப்பெரிய கட்டுமான அமைப்பை உருவாக்கும் பணியில் செளதி அரேபியா மும்முரமாக இருக்கிறது. இந்த கட்டுமானம் புதிதாக கட்டமைக்கப்பட உள்ள நியோம் (Neom) நகரத் திட்டத்தின் ஒரு பகுதியாக, அதன் மணிமகுடமாகத் திகழப் போகிறது என வால் ஸ்ட்ரீட் ஜர்னல் பத்திரிகையில் செய்தி வெளியாகியுள்ளது.

செளதி அரேபியா கட்டமைக்க உள்ள ராட்சத கட்டடத் திட்டத்தின் பெயர் மிரர் லைன் (Mirror Line). இரு பிரமாண்ட கட்டடங்கள் சுமார் 120 கிலோமீட்டர் நீளத்துக்கு இணையாக ரயில் பாலம் போலக் கட்டப்பட உள்ளன. இதன் உயரம் 488 மீட்டர் (1,600 அடி) வரை இருக்கலாம் என அல் ஜசீரா பத்திரிகைச் செய்தி ஒன்றில் குறிப்பிடப்பட்டுள்ளது. இது அமெரிக்காவில் உள்ள சுதந்திர தேவிச் சிலையை விட உயரமானது.

Mirror Line
Mirror LineTwitter

இந்த ராட்சத கட்டடங்களுக்கு மத்தியில் நடைபாலம் எல்லாம் இருக்குமாம். அதே போல 120 கிலோமீட்டர் நீளம் கொண்ட கட்டடத்துக்கு அடியில் போக்குவரத்துக்கு வசதிக்காக ரயில்கள் எல்லாம் இயக்கப்பட இருக்கிறது. ரயில்களைப் பயன்படுத்தி சுமார் 20 நிமிடங்களில் அந்த 120 கிலோமீட்டரைக் கடக்கலாம். இந்த பிரமாண்ட கட்டமைப்புக்கு 1 ட்ரில்லியன் அமெரிக்க டாலர் (இந்திய ரூபாய் மதிப்பில் சுமார் 80 லட்சம் கோடி ரூபாய்) வரை செலவாகலாம் என்றும் கூறப்படுகிறது. இந்த பிரமாண்ட நகரத்தில் சுமார் 50 லட்சம் பேர் வாழலாம்.

NEOM
NEOMTwitter

அடுக்கு விவசாயம் (Integrated vertical farming), சொகுசுப் படகுகள் நிற்பதற்கான இடம் (மரினா), 350 மீட்டர் உயரத்தில் விளையாட்டு மைதானம் எல்லாம் அந்த ராட்சத கட்டடத்தில் திட்டமிடப்பட்டுள்ளன. இத்திட்டத்தை முழுமையாகக் கட்டி முடிக்க சுமார் 50 ஆண்டுகள் ஆகலாம் என மதிப்பிடப்பட்டுள்ளது.

சௌதி அரேபியாவின் பிரமாண்ட இரட்டை கட்டடம்
செளதி அரேபியா கதை - 1 : அடர் வனம் பாலைவனம் ஆக மாறிய வரலாறு!

இந்த கட்டடங்கள் செளதியின் முடி இளவரசர் மொஹம்மத் பின் சல்மானின் ஜீரோ கார்பன் ஸ்மார்ட் சிட்டியான நியோம் நகரத்தில் அமைக்கப்பட இருக்கிறது. அந்நகரத்தைக் கட்டமைக்க மேலும் 500 பில்லியன் அமெரிக்க டாலர் செலவாகும் என அல் ஜசீராவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

நியோம் நகரம்

நியோம் நகரம் கிட்டத்தட்ட அமெரிக்காவிலுள்ள மாசாசூட்ஸ் நகரத்தின் அளவுக்கு இருக்கும். அந்நகரத்தில் வரவிருக்கும் மிரர் லைன் இரு கட்டடங்களாக ஒன்றை ஒன்று பிரதிபலிக்கக் கூடிய கண்ணாடிகளால் பொருத்தப்பட்ட கட்டடங்களாக இருக்கும்.

சௌதி அரேபியாவின் பிரமாண்ட இரட்டை கட்டடம்
செளதி அரேபியா: பாலைவனத்தில் உருவாக்கப்படும் ஒரு பசுமை நகரம் - என்ன நடக்கிறது அங்கே ?

நியோம் திட்டம் செளதி விஷன் 2030-ன் ஒரு பகுதியாக இருக்கிறது. இத்திட்டம் செளதி அரேபியப் பொருளாதாரத்தைப் பன்முகத்தன்மை கொண்டதாக மாற்றும் வழிமுறைகளையும் திட்டங்களையும் கொண்டிருக்கிறது. 2030ஆம் ஆண்டுக்குள் நியோம் நகரம் தயாராக வேண்டும் என இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. செளதி அரேபியாவின் வெல்த் ஃபண்ட் நியோமின் உரிமையாளராக இருக்கிறது.

மிரர் லைன் வடிவமைப்பாளர் யார்?

மிரர் லைன் கட்டடத்துக்கான தொடக்கக் கால வடிவமைப்புகளை அமெரிக்காவைச் சேர்ந்த மார்ஃபோசிஸ் ஆர்கிடெக்ட்ஸ் (Morphosis Architects) என்கிற நிறுவனம் மேற்கொள்கிறது. இந்நிறுவனத்தைக் கட்டட வடிவமைப்புக்கான பிரிட்ஸ்கர் பரிசை வென்ற தாம் மேய்ன் (Thom Mayne) என்பவர் நிறுவினார் என்பது குறிப்பிடத்தக்கது. இவர்களோடு குறைந்தபட்சமாக ஒன்பது கட்டட வடிவமைப்பு மற்றும் பொறியியல் ஆலோசனை நிறுவனங்கள் ஈடுபட்டிருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.

சௌதி அரேபியாவின் பிரமாண்ட இரட்டை கட்டடம்
செளதி அரேபியா: உலகின் மிகப்பெரிய கட்டடங்கள் இனி இங்கு தான் இருக்கும் - ஆச்சர்ய செய்தி

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com