Nykaa: இந்தியாவின் பணக்கார பெண்மணி ஆனார் ஃபால்குனி நாயர் - அடுத்தடுத்த இடங்களில் யார்?

அதில், 38,700 கோடி ரூபாய் சொத்து மதிப்புடன், முதல் 100 பில்லியனர்கள் பட்டியலில் 33வது இடத்தில் இருக்கிறார் ஃபால்குனி நாயர்.
இந்தியாவின் பணக்கார பெண்மணி ஆனார் ஃபால்குனி நாயர்
இந்தியாவின் பணக்கார பெண்மணி ஆனார் ஃபால்குனி நாயர் டிவிட்டர்
Published on

இந்தியாவின் முதல் பணக்கார பெண்மணி ஆனார் நைகா நிறுவனர் ஃபால்குனி நாயர். இதற்கு முன்னர் இந்தியாவின் பணக்கார பெண்மணியாக இருந்த பையோகான் நிறுவன கிரண் மஜும்தாரை பின்னுக்கு தள்ளி, முதலிடத்துக்கு வந்துள்ளார் ஃபால்குனி நாயர்.

2022ஆம் ஆண்டுக்கான IIFL Wealth Hurun Indiaவின் பணக்காரர் பட்டியல் நேற்று வெளியிடப்பட்டது. அதில், 38,700 கோடி ரூபாய் சொத்து மதிப்புடன், முதல் 100 பில்லியனர்கள் பட்டியலில் ஃபால்குனி 33வது இடத்தில் இருக்கிறார். ஆனால், இந்தியாவின் பணக்கார பெண்மணியாக இருந்த பையோகான் நிறுவனர் கிரண் மஜும்தாரை முந்தியிருந்தார் ஃபால்குனி.

இந்தியாவின் பணக்கார பெண்மணி ஆனார் ஃபால்குனி நாயர்
Gautam Adani : உலகின் 2வது பணக்காரர் ஆனார் அதானி - எவ்வளவு சொத்து மதிப்பு தெரியுமா?

கடந்த ஆண்டில் நைகா நிறுவனம் 345 சதவிகிதம் அதிக லாபம் ஈட்டியுள்ளது. இதன் விளைவாக 169வது இடத்திலிருந்த ஃபால்குனி, 33வது இடத்துக்கு முன்னேரியுள்ளார்.

ஃபால்குனி நாயரை தொடர்ந்து இரண்டாவது இடத்தில் மறைந்த ஸ்டாக் மார்க்கெட் கிங் ராகேஷ் ஜுஞ்சுன்வாலாவின் மனைவி ரேகா ஜுஞ்சுன்வாலா இருக்கிறார். இவரது சொத்து மதிப்பு 37,200 கோடி ரூபாய். மூன்றாவது இடத்தில் zohoவின் ராதா வேம்பு (32,000 கோடி), நான்காவது இடத்தில் கிரண் மஜும்தார்(24,800 கோடி) ஆகியோர் உள்ளனர்.

ஃபால்குனி நாயர் கடந்த ஓராண்டில் அதிக செல்வத்தைச் சேர்த்த இந்தியர்களில் ஐந்தாவது இடத்தில் உள்ளார். இந்த பட்டியலில் அவருக்கு முன்னதாக கவுதம் அதானி, முகேஷ் அம்பானி மற்றும் சைரஸ் பூனவல்லா ஆகியோர் உள்ளனர்.

நாட்டின் மிகப் பெரிய பணக்காரப் பெண்மணியான ஃபால்குனி நாயர், 18 ஆண்டுகள் முதலீட்டு வங்கியாளராகப் பணியாற்றினார். 2012 ஆம் ஆண்டில், அவர் Nykaa வை தொடங்கினார். இந்த நிறுவனம் நாடு முழுவதும் அழகு சாதனப் பொருட்களை விற்பனை செய்கிறது.

அதன் தயாரிப்புகள் ஆன்லைன் மற்றும் ஆஃப்லைன் பயன்முறையில் கிடைக்கின்றன. இன்று இந்த நிறுவனம் மிகப்பெரிய ஆன்லைன் அழகு சாதனம் தயாரிப்பு நிறுவனமாக உள்ளது.

இந்தியாவின் பணக்கார பெண்மணி ஆனார் ஃபால்குனி நாயர்
அதானி : சந்தை மதிப்பில் டாடாவை வீழ்த்தி சாதனை - விரிவான தகவல்கள்

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com