Indian Railways: சென்னை சென்ட்ரல் முதல் பரோக் வரை இந்தியாவின் பழமையான ரயில் நிலையங்கள்

இந்திய இரயில்வே உலகின் மிக பழமையான மற்றும் பரபரப்பான இரயில்வே நெட்வொர்க்குகளில் ஒன்றாகும். அப்படி நாட்டில் சில பழமையான ரயில் நிலையங்கள் உள்ளன. அவற்றை பற்றி இங்கே தெரிந்துக்கொள்வோம்.
chennai central railways
chennai central railwaysTwitter
Published on

ரயில் பயணம் பலருக்கு பிடித்தமான போக்குவரத்து. ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு செல்ல ரயில் போக்குவரத்து ஒரு சிறந்த மற்றும் மிகவும் சிக்கனமான வழிகளில் ஒன்றாகும்.

குறிப்பாக இந்திய இரயில்வே உலகின் மிக பழமையான மற்றும் பரபரப்பான இரயில்வே நெட்வொர்க்குகளில் ஒன்றாகும்.

அப்படி நாட்டில் சில பழமையான ரயில் நிலையங்கள் உள்ளன. அவற்றை பற்றி இங்கே தெரிந்துக்கொள்வோம்.

பரோக் ரயில் நிலையம்

புகழ்பெற்ற கல்கா-சிம்லா ரயில் பாதையைக் கொண்டுள்ள இது ஹிமாச்சல பிரதேசத்தின் மலைகளில் அமைந்துள்ள ஒரு சிறிய ரயில் நிலையம்.

யுனெஸ்கோ உலக பாரம்பரிய தளம் என்ற அந்தஸ்தை பெற்ற இந்த நிலையம், கர்னல் பரோக் பெயரால் பெயரிடப்பட்டது.1903 இல் திறக்கப்பட்டது. சுரங்கப்பாதையின் தொடக்கத்தில் அமைந்துள்ள இந்த நிலையம் ஸ்காட்டிஷ் பாணி கூரைகளைக் கொண்டுள்ளது. மேலும் இது புகைப்படக் கலைஞர்களுக்கான சிறந்த இடமாகவும் இது கருதப்படுகிறது.

பழைய டெல்லி ரயில் நிலையம்

1864 இல் செயல்படத் தொடங்கிய, பழைய டெல்லி ரயில் நிலையம் 1903 இல் அதன் தற்போதைய வடிவத்திற்கு மாற்றப்பட்டது.

இந்த ரயில் நிலையத்தின் அமைப்பு செங்கோட்டையிலிருந்து ஈர்க்கப்பட்ட கூறுகளால் உருவாக்கபட்டுள்ளது.

வட இந்தியாவில் உள்ள பரபரப்பான ரயில் நிலையங்களில் இதுவும் ஒன்றாகும். தினமும் 2 லட்சத்திற்கும் அதிகமான பயணிகளுக்கு சேவை செய்கிறது.

chennai central railways
Indian Railways: 73 ஆண்டுகளாக இலவச ரயில் சேவை; தினசரி 800 பயணிகள் - எங்கே?

ஹவுரா சந்திப்பு

மேற்கு வங்காளத்தின் கொல்கத்தா நகரில் உள்ள ஹவுரா சந்திப்பு இந்தியாவில் மட்டுமல்ல, உலகிலேயே மிகவும் பரபரப்பான ரயில் நிலையங்களில் ஒன்றாக கருதப்படுகிறது.

23 பிளாட்ஃபார்ம்களுடன், ஒவ்வொரு நாளும் ஒரு மில்லியனுக்கும் அதிகமான பயணிகளுக்கு சேவை செய்கிறது.

இந்த நிலையத்தின் வழியாக தினமும் 600க்கும் மேற்பட்ட ரயில்கள் செல்வதால், இது நாட்டின் முக்கியமான ரயில் நிலையங்களில் ஒன்றாக அறியப்படுகிறது.

chennai central railways
Indian Railways: ரயிலின் பின்னால் இருக்கும் 'X'க்கு என்ன அர்த்தம்? விளக்கிய ரயில்வே துறை

லக்னோ சார்பாக் ரயில் நிலையம்

இது பழமையான மட்டுமல்ல, அழகான இந்திய ரயில் நிலையங்களில் ஒன்றாகும்.

1914 ஆம் ஆண்டு கட்டப்பட்ட இந்த நிலையம் ராஜஸ்தானி மற்றும் முகலாய கட்டிடக்கலை கலவையை கொண்டுள்ளது.

1916 ஆம் ஆண்டு ஜவஹர்லால் நேரு, மகாத்மா காந்தியை முதன்முதலில் சந்தித்த இடம் இதுவாகும். 9 நடைமேடைகளுடன், பரபரப்பான ரயில் நிலையங்களில் ஒன்றாக உள்ளது.

சென்னை சென்ட்ரல்

1845 இல் உருவாக்கப்பட்டது மெட்ராஸ் இரயில்வே. அதன் பின்னர் மெட்ராஸ் இரயில்வே நிறுவனம் 1856 இல் தென்னிந்தியாவை இணைக்கத் தொடங்கியது.

முதல் நிலையம் ராயபுரத்தில் கட்டப்பட்டது. சென்னை சென்ட்ரல் ஸ்டேஷன் 1873 இல் நான்கு பிளாட்பார்ம்களுடன் திறக்கப்பட்டது மற்றும் ஜார்ஜ் ஹார்ட்ரிங் கட்டிடத்தை வடிவமைத்தார்.

chennai central railways
Railways : யாரும் அறியாத சைப்ரஸ் தீவின் ரயில்வே - போருக்கு பிறகு நிறுத்தப்பட்டது ஏன்?

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com