Pune : 20 நாய்களுடன் அடைக்கப்பட்ட 11 வயது சிறுவன் - பெற்றோர் மீது வழக்கு

பூனேவில் 20 நாய்களோடு பெற்றோரால் வீட்டில் பூட்டி வைக்கப்பட்டிருந்த 11 வயது சிறுவனை காவல் துறை மீட்டுள்ளனர். மேலும் பெற்றோர் மீது வழக்கு பதியப்பட்டுள்ளது.
Boy confined to house
Boy confined to houseTwitter
Published on

பூனேவில் ஒரு வீட்டில் 20க்கும் மேற்பட்ட நாய்களுடன் சிறை வைக்கபட்டிருந்த 11 வயது சிறுவனை என்ஜிஓ-வின் உதவியுடன் காவல்துறை மீட்டுள்ளது. மேலும் மீட்கப்பட்ட சிறுவனின் பெற்றோர் மீது சிறார் நீதி (குழந்தைகள் பராமரிப்பு மற்றும் பாதுகாப்பு) சட்டம், 2000-ன் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆனால் இதுவரை இந்த வழக்கில் எந்தவிதமான கைது நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

Police
PoliceTwitter

ஒரு என்ஜிஓ-வின் சைல்டுலைன் மாவட்ட ஒருங்கிணைப்பாளருக்கு, பூனேவின் கோந்த்வா நகரில் உள்ள அபார்ட்மென்ட்டில் ஒரு சிறுவன் 20க்கும் மேற்பட்ட நாய்களோடு வீட்டிற்குள் அடைபட்டிருப்பதாக மர்ம நபர் ஒருவர் தகவல் அளித்திருந்தார். தகவலின் பேரில் நேரில் சென்று கடந்த 5 ஆம் தேதி, சைல்டுலைன் அதிகாரி பார்த்தபோது சிறுவன் நாய்களுடன் ஜன்னல் ஓரமாக, துர்நாற்றத்திற்கு மத்தியில் அமர்ந்திருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர்.

அவனை இவ்வாறு சிறைப்படுத்தி வைத்ததன் காரணம் அறியாத நிலையில், பெற்றோர் அவனை பள்ளிக்கு அனுப்பாமல் இருப்பதும் தெரியவந்துள்ளது. சிறுவனை வெளியேற்றி, பள்ளிக்கு அனுப்புமாறு அறிவுரை கூறிவிட்டு சென்றார் சைல்டுலைன் அதிகாரி.

Child Helpline
Child HelplineTwitter

மீண்டும் நான்கு நாட்களுக்குப் பிறகு சென்ற பொது, அச்சிறுவன் இன்னும் நாய்களுடன் அதே வீட்டில் சிறையுண்டு இருப்பதையும், பெற்றோர் சிறுவனை பூட்டிவத்துவிட்டு வெளியில் சென்றுள்ளதும் தெரியவந்தது. விரைந்து செயல்பட்ட சைல்டுலைன் அதிகாரி, குழந்தைகள் நல குழுவிற்கு தகவலளித்து, காவல் துறையோடு இணைந்து அவனை மீட்டனர்.

சிறுவனின் தாய் தந்தை மீது காவல்துறையிடம் புகார் அளிக்கப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மீட்கப்பட்ட சிறுவனிடம் நாய்களோடு இருந்ததால் அவற்றின் குணாதிசயங்கள் கண்டறியப்பட்டது திடுக்கிட வைத்துள்ளது.

சிறுவனை ஷெல்டர் ஹோமில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர்.

Boy confined to house
6 வயது மகனுடன் ஒப்பந்தம் செய்த தந்தை - என்ன நடந்தது தெரியுமா?

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com