தெலுங்கானா: பஸ்சில் விட்டு சென்ற சண்டை சேவலை ஏலம் விடும் அதிகாரிகள் - ஏன்?

சண்டை சேவலை இன்று மாலை ஏலம் விட அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர். தெலுங்கானாவில் பந்தய சேவலுக்கு ஏகப்பட்ட வரவேற்பு உள்ளதால் ஏராளமானோர் கலந்துக் கொள்வார்கள் என எதிர்ப்பார்க்கப்படுகிறது
தெலுங்கானா: பஸ்சில் விட்டு சென்ற சண்டை சேவலை ஏலம் விடும் அதிகாரிகள் - ஏன்?
தெலுங்கானா: பஸ்சில் விட்டு சென்ற சண்டை சேவலை ஏலம் விடும் அதிகாரிகள் - ஏன்?twitter

தெலுங்கானா மாநிலம் வாரங்கல்லில் இருந்து புறப்பட்ட அரசு பேருந்து ஒன்று வெமுலவாடா பேருந்து நிலையத்திற்கு வந்தது.

பயணிகள் அனைவரும் பேருந்திருந்து இறங்கினர், பேருந்தை அங்கே நிறுத்திவிட்டு டிரைவர் மற்றும் கண்டக்டர் உணவு சாப்பிடுவதற்காக சென்றிருக்கின்றனர்.பேருந்துக்கு திரும்பிய இருவருக்கும் சேவல் கூவும் சத்தம் கேட்டது. இதையடுத்து டிரைவர், கண்டக்டர் இருவரும் பஸ்சில் ஏறி பார்த்தனர்.

பயணிகளின் சீட்டுக்கு அடியில் இருந்த ஒரு பையில் சண்டை சேவல் இருந்தது. பயணிகள் அதனை மறந்து விட்டு சென்றிருக்கலாம் என எண்ணியவர்கள், இதுகுறித்து பஸ் மேலாளர் மல்லையாவுக்கு தகவல் தெரிவித்தனர்.

பின்னர் சேவலை கரீம் நகர் பணிமனைக்கு கொண்டு சென்றனர். அதனை கூண்டில் அடைத்து உணவும் வழங்கினார். யாரேனும் பேருந்தில் மறந்து சேவலை விட்டு சென்றால், அதனை மீட்டு செல்லலாம் என விளம்பரம் செய்தனர். ஆனால் 3 நாட்கள் ஆகியும் யாரும் சேவல் தேடி வரவில்லை.

இதனால் சண்டை சேவலை இன்று மாலை ஏலம் விட அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர். தெலுங்கானாவில் பந்தய சேவலுக்கு ஏகப்பட்ட வரவேற்பு உள்ளதால் ஏராளமானோர் கலந்து கொண்டு சண்டை சேவலை ஏலம் எடுப்பார்கள் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

தெலுங்கானா: பஸ்சில் விட்டு சென்ற சண்டை சேவலை ஏலம் விடும் அதிகாரிகள் - ஏன்?
”கோழி வளக்குறது கொஞ்சுரதுக்கு இல்ல” மகளை தாக்கிய சேவல்; நக்கெட்ஸ் செய்து சாப்பிட்ட ஃபேமிலி

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com