பதஞ்சலி நிறுவனம் தொடர்ந்து போலியான, தவறாக வழிநடத்தக்கூடடிய விளம்பரங்களை வெளியிட்டு வருகிறது. இதற்கு எதிராக எந்த நடவடிக்கையும் எடுக்காமல் இருப்பதனால் மத்திய அரசை கடுமையாக கண்டித்துள்ளது உச்சநீதிமன்றம்.
பதஞ்சலி நிறுவனத்தின் உரிமையாளர்களில் பாபா ராம் தேவும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த விவகாரத்தில் "அரசு கண்களை மூடிக்கொண்டு அமர்ந்திருக்கிறது" என விமர்சித்துள்ளது நீதிமன்றம்.
"மொத்த நாடும் தவறாக வழிநடத்தப்பட்டுக்கொண்டிருக்கிறது. அரசு உடனடி நடவடிக்கை எடுத்தேத்தீர வேண்டும். போலியான தகவல்களை வழங்கும் மின்னணு மற்றும் அச்சு விளம்பரங்களை பதஞ்சலி நிறுவனம் உடனடியாக நிறுத்தவேண்டும்" என நீதிபதிகள் தெரிவித்திருக்கின்றனர்.
பதஞ்சலி நிறுவனம் போலித் தகவல்களுடன் விளம்பரத்தை வெளியிடுவது இது முதன்முறை அல்ல. கடந்த நவம்பர் மாதமே தவறான தகவல்களுடன் விளம்பரத்தை வெளியிடுவதாக பதஞ்சலி நிறுவனத்தை எச்சரித்தது உச்சநீதிமன்றம்.
நிறுவனமும் விளம்பரங்களை நிறுத்தவில்லை. அரசு தரப்பிலும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
"குரு ராம்தேவ் பாபா யோகாவை பரப்புவதற்காக நாங்கள் அவரை மதிக்கிறோம். ஆனால் பிற மருத்துவமுறைகளை விமர்சிக்கக் கூடாது. மருத்துவர்கள் எல்லாம் ஏதோ கொலைகாரர்கள் போல பெரிய விளம்பரங்கள் வெளியிடப்பட்டிருக்கின்றன. " என நீதிபதி என் வி ரமணா கடிந்துகொண்டார்.
Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.
Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com
Follow us on:
Newssensetn : https://www.facebook.com/FullyNewsy
Nalam 360 : https://www.facebook.com/Nalam360
Newsnow: https://www.facebook.com/GenZSense
TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp
Hangout : https://www.facebook.com/TamilWanderlust