வேலைக்கு செல்பவர்களுக்கு எப்போது வார இறுதி வரும் என்ற ஏக்கம் இருந்துகொண்டே இருக்கும். வாரம் முழுதும் வேலை செய்துவிட்டு, சனி ஞாயிறு இரண்டு நாட்களில் தான் அவர்களுக்கென நேரம் செலவழித்துக்கொள்ள முடியும். அப்படி வீக்கெண்ட் வந்தால் எங்காவது குட்டி டிரிப் செல்வார்கள்.
படம் பார்க்கலாம். நன்றாக படுத்து உறங்கலாம். அல்லது, நண்பர்களுடன் சேர்ந்து எங்காவது வெளியில் செல்லலாம். ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான கேளிக்கை.
அந்த வகையில், தனது வீக்கெண்டை வித்தியாசமாக செலவிடுகிறார், பெங்களூருவைச் சேர்ந்த சாஃப்ட்வேர் இன்ஜினியர் ஒருவர்.
மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தில் மென்பொருள் பொறியாளராக பணியாற்றும் ஒருவர் வார இறுதி நாட்களில் ரேபிடோ எனப்படும் வாடகை டூ வீலர் டிரைவராக பணியாற்றுகிறார்.
நிகில் சேத் என்ற இளைஞர் வெளியில் செல்வதற்காக ரேபிடோ பைக் புக் செய்துள்ளார். டிரைவரும் இவரை அழைத்து செல்ல வர, வழக்கமாக நாம் ஓட்டுநர்களிடம் பேச்சுக் கொடுப்பது போல இவரும் கொடுத்துள்ளார்.
அப்போது தான் அந்த ஓட்டுநர் மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தில் வேலை செய்கிறார் என்று தெரிந்துள்ளது. அங்கு SDET- (Software Development Engineer in Test) ஆக பணியாற்றுகிறார்.
ஏன் இந்த வேலை செய்கிறீர்கள் என்ற கேட்டதற்கு, அவருக்கு மனிதர்களிடம் பேசப் பிடிக்குமாம். அதனால் இந்த வேலையை ஒரு பொழுதுபோக்காகச் செய்து வருவதாக கூறியுள்ளார்.
இது இணையதளத்தில், Peak Bengaluru என்ற தலைப்பிட்டு பகிரப்பட்டது. பலரும் அந்த பொறியாளரை பாராட்டி வருகின்றனர். இன்னும் சிலர், கிடைக்கும் இரண்டு நாட்கள் விடுமுறையை ட்ராஃபிக்கில் ஏன் கழிக்கிறீர்கள் என்றும் கேள்வியெழுப்பி வருகின்றனர்.
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.
Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.
Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com
Follow us on:
Newssensetn : https://www.facebook.com/FullyNewsy
Nalam 360 : https://www.facebook.com/Nalam360
Newsnow: https://www.facebook.com/GenZSense
TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp
Hangout : https://www.facebook.com/TamilWanderlust